உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆட்சியாளர்களை ஆசிரியர்கள் சுட்டெரிப்பார்கள்: இ.பி.எஸ்., காட்டம்

ஆட்சியாளர்களை ஆசிரியர்கள் சுட்டெரிப்பார்கள்: இ.பி.எஸ்., காட்டம்

சென்னை: உயர்கல்வி மற்றும் துணை வேந்தர்கள் பதவிகள் தொடர்பான பிரச்னைகள் தீர்க்கப்படாத திமுக ஆட்சியாளர்களை ஆசிரியர்கள் சுட்டெரிப்பார்கள் என்று அதிமுக பொதுசெயலாளர் இ.பி.எஸ்., எச்சரித்துள்ளார்.அவரது அறிக்கை:துணை வேந்தர் நியமனங்கள் தாமதிக்கப்படுவதால், அண்ணா, அண்ணாமலை, சென்னை, மதுரை காமராஜர், பாரதியார், பாரதிதாசன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் பதவிகள் கிட்டத்தட்ட 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை காலியாக உள்ளன. தேவையற்ற வழக்குகளுக்கு, உச்சநீதிமன்றம் சென்று இந்தியாவிலேயே சிறந்த வழக்கறிஞர்களைக் கொண்டு வாதாடும் இந்த விளம்பர மாடல் அரசு, தமிழக இளைஞர்களின், மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் உயர்கல்வித் துறையின் வழக்குகளை ஏன் முடிக்க முயலவில்லை என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இரண்டு ஆண்டுகளாக இப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை.நிதிப் பற்றாக்குறை மற்றும் ஊதியப் பிரச்சினைகளால் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டுகளாக பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு ஊதியம்/ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் நியமன முறைகேடுகள் மற்றும் ஊதியப் பிரச்சினைகள் குறித்து புகார்கள் எழுந்துள்ளன. மகளிர் ஆய்வு மையம் உள்ளிட்ட பல இடங்களில் 6 மாதங்களுக்குமேல் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. தற்போது, சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த மாதம் சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என்று போராடி வருவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.தன்னலமில்லாமல் அறிவை அள்ளி வழங்கும் ஆசிரியப் பெருமக்களின் எரியும் வயிறு, இந்த ஆட்சியாளர்களை சுட்டெரிக்காமல் விடாது என்று எச்சரிக்கிறேன்.இவ்வாறு இ.பி.எஸ்., அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Vijay D Ratnam
ஜூன் 03, 2025 23:39

ஐயா, எடப்பாடி பழனிசாமி அவர்களே, மீண்டும் மீண்டும் நீங்கள் தப்பு கணக்கு போடுகிறீர்கள். அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் குடும்ப வாக்குகள் என்பது திமுகவின் பெர்மனண்ட் வாக்கு வங்கி . திமுகவுக்கு வாக்களிக்க பிரச்சாரமே செய்யும் இனம். திமுக கட்சி தொண்டன் கூட சமயத்தில் கூட்டணி கட்சிக்கு சீட்டு கொடுத்தால் வெறுப்பில் மாற்றி ஒட்டு போடுவான். இந்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் குடும்ப வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் திமுக கூட்டணிக்குத்தான். எப்படி இஸ்லாமிய வாக்குகள், கிருஸ்தவ வாக்குகள், க்ரிப்டோ க்ரிஸ்டியன்ஸ் வாக்குகள் திமுகவுக்கு போகிறதோ அதுபோலத்தான் இந்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் வாக்குகள். இதையெல்லாம் எதிர்பார்க்காதீர்கள். தீவிரமாக கட்சி பணியாற்றுங்கள். ஏற்கனவே அவசரப்பட்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்துவிட்டீர்கள். அது காலை சுற்றிய பாம்பு. 2026 ஐ தவறவிட்டால் உங்கள் எதிர்காலம் மட்டுமல்ல அதிமுகவின் எதிர்காலம் காலியாகிடும். தனித்து போட்டியிடுவதைவிட ஆபத்தானது பாஜகவை கூட வைத்துக்கொண்டு போட்டியிடுவது. எனக்கு ஒரு சந்தேகம். உங்களுக்கு புரியவில்லையா ? பாஜக அழிக்க நினைப்பது திமுகவை அல்ல. அதிமுகவை என்று. 2019, 2021, 2024 மூன்றும் உங்களுக்கு பாடம் கற்றுக்கொடுக்கவில்லையா ? பூத் வைஸ் வாக்குகளை பாருங்கள். இப்பவும் சொல்கிறேன் உங்களுக்கு ஒரு சதவிகிதம் கிருஸ்தவர்கள், ஒரு சதவிகிதம் க்ரிப்டோ கிறிஸ்டியன்ஸ், அரை சதவிகிதம் இஸ்லாமியர்கள், ஐந்து சதவிகித தலித் மக்கள் வாக்குகள் கூட கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை. நிஜமாகவே உங்களுக்கு பாஜக திமுக கள்ள உறவு தெரியவில்லையா தலைவரே. தமிழ்நாட்டின் தீய சக்திக்கு எதிராக எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி, ஜெயலலிதா கட்டிக்காத்த கட்சி, மக்கள் மனதில் பதிந்து போன இரட்டை இலை சின்னத்தையும், அண்ணா உருவம் பொதிந்த கொடியையும் கொண்ட கட்சி. அதை கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி ஆகிவிடாதீர்கள்.