உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சர்வரில் தொழில்நுட்ப கோளாறு சீரானது!

சர்வரில் தொழில்நுட்ப கோளாறு சீரானது!

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் ஆன்லைன் டிக்கெட் பெற முடியாமல் பயணிகள் தவித்த நிலையில் சர்வர் கோளாறு சீரானது.சென்னையில், இன்று (டிச.,17) காலை பயணிகள் மெட்ரோ ரயில் டிக்கெட்டுக்கான முன்பதிவு ஆன்லைனில் செய்த போது முடியவில்லை. இதனால் பயணிகள் சிரமம் அடைந்தனர். இந்நிலையில், மெட்ரோ ரயில் நிலைய கவுன்டர்களில் டிக்கெட் வாங்கி கொள்ள பயணிகளுக்கு சென்னை மெட்ரோ அறிவுறுத்தி உள்ளது.இது குறித்து சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு சர்வர் செயல் இழந்ததால் டிக்கெட் வழங்குவது பாதிக்கப்பட்டு உள்ளது. பயணிகள் மெட்ரோ ஸ்டேஷன் கவுன்டர்களில் டிக்கெட் வாங்கிக் கொள்ள வேண்டும். சர்வரில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறை சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. சிரமத்திற்கு வருந்துகிறோம். இவ்வாறு மெட்ரோ நிர்வாகம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயிலில் ஆன்லைன் டிக்கெட் பெற முடியாமல் பயணிகள் தவித்த நிலையில் சர்வர் கோளாறு சீரானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ