உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை-தூத்துக்குடி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் அவதி

சென்னை-தூத்துக்குடி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் அவதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.சென்னையில் இருந்து 65 பயணிகள் உள்பட 70 பேருடன் இன்று (ஜூலை 06) காலை 10.10 மணிக்கு தூத்துக்குடிக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் புறப்பட்டது. ஓடுபாதையில் ஓட தொடங்கிய போது, தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டு விமானம் நிறுத்தப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=v0uz00m3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையடுத்து விமானத்தில் கோளாறை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். விமானம் தாமதமாக புறப்படும் என விமான நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். தொழில்நுட்பக் கோளாறு தகுந்த நேரத்தில் கண்டறியப்பட்டதால், 70 பேர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். கடந்த சில தினங்களாக விமானங்களில் தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வருவது பயணியர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Thiyagarajan S
ஜூலை 06, 2025 19:26

அதெல்லாம் ஒன்னும் வேணாம்...உசுரு மேல ஆச உள்ளவங்க எல்லாம் நடந்து போங்கப்பு.......


Jack
ஜூலை 06, 2025 14:11

ஹனுமான் சாலிசா மற்றும் மஹா மிருதஞ்சய மந்திரம் சொல்லி பயணத்தை தொடங்கணும் ..எஞ்சினை நம்பி பயணம் பண்ணறோம் …


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை