உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொழில்நுட்ப கோளாறு: சென்னையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்

தொழில்நுட்ப கோளாறு: சென்னையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இருந்து கிளம்பிய இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அவசரமாக தரையிறக்கப்பட்டது.இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், சென்னையில் இருந்து 3.54 மணிக்கு அசாம் தலைநகர் கவுகாத்திக்கு கிளம்பியது. விமானத்தில் 154 பயணிகள் மற்றும் 8 பேர் இருந்தனர். விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். இது தொடர்பாக சென்னை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.உடனடியாக, விமானத்தை சென்னையில் தரையிறக்க அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து அவசரமாக 4.28 மணிக்கு மீண்டும் சென்னையிலேயே அந்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதனால், பயணிகள் காயமின்றி உயிர்தப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

கும்பகோணத்து குசும்பன்
ஜன 17, 2025 22:28

அப்பாவி அடப்பாவி. உங்கள் வீட்டு குழாயில் தண்ணீர் வரவில்லையென்றால் கூட ஒன்றிய அரசு தான் காரணமா


kalyan
ஜன 17, 2025 21:23

எந்த அரசும் கட்டணத்தை உயர்த்த முட்டுக்கட்டை போடவில்லை யார் தவறு செய்தாலும் மத்திய அரசை விஷயம் தெரியாமல் குறை கூறுவது இப்போது நாகரீகம் trend ஆகி வருவது தான் நம் நாட்டின் மிகப்பெரிய சோதனை .


Ramesh Sargam
ஜன 17, 2025 20:16

விமானம் take-off ஆகுவதற்கு முன்பு நன்றாக சோதிக்கப்படவேண்டாமா...? வெறும் பெட்ரோலை மட்டும் நிரப்பிக்கொண்டு, மற்ற விஷயங்களை கவனிக்காமல், அதிகம் சம்பாதிக்கவேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில் இன்று பல விமான நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஆகையால்தான் இதுபோன்ற நிலைமை.


அப்பாவி
ஜன 17, 2025 18:06

ஓட்டை உடைசலை வெச்சு ஒட்டிக்கொண்டு இருக்காங்க. விமான பராமரிப்புக்கு அதிக செலவு செய்யணும்னா கட்டணத்தை ஏத்தணும். கட்டணத்தை ஏத்த உடாம முட்டுக்கட்டை போடும் ஒன்றிய அரசு. நாடு உருப்படாம போறதுக்கு திட்டம்.