உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை-பாங்காக் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் 146 பேர் அவதி

சென்னை-பாங்காக் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் 146 பேர் அவதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இருந்து இன்று (ஜூன் 29) தாய்லாந்து புறப்பட இருந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் ரத்து செய்யப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் நோக்கி 146 பயணிகளுடன், தாய் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் புறப்பட தயாரானது. இதையடுத்து விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. கடைசி நேரத்தில், விமானி பிரச்னையை கண்டறிந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.தற்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணி நடந்து வருகிறது. பயணிகள் அனைவரும் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று விமானம் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். விமானம் இன்று இரவு அல்லது நாளை காலை தாய்லாந்திற்கு புறப்படும் என தாய் ஏர்வேஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.இது குறித்து பயணி ஒருவர் கூறியதாவது: நான் வேலை விஷயமாக தாய்லாந்திற்கு செல்ல திட்டமிட்டு இருந்தேன். தற்போது திடீரனெ விமானம் ரத்து செய்யப்பட்டதால், கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் எனது நேரம் வீணாகி உள்ளது. இதனால் எனது வேலைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Yasararafath
ஜூன் 29, 2025 16:11

எதற்கு விமானம் பயணம்?


Ramesh Sargam
ஜூன் 29, 2025 12:17

திடீரென்று எப்படி தொழில்நுட்ப கோளாறு ஏற்படும்? கிளம்புவதற்கு முன்பு சரியாக சோதிக்கப்படவில்லையா? கோளாறு விமானத்தில் இல்லை, விமானத்தை பராமரிக்கும் ஊழியர்களிடம்.


சங்கி
ஜூன் 29, 2025 11:12

அந்த அறிவு கெட்ட பயணிக்கு சொல்லுங்க. விமானி பார்க்கல எமலோகம்தான். வேலையாம் வேலை கூமுட்டை


R. SUKUMAR CHEZHIAN
ஜூன் 29, 2025 10:54

சமீப காலமாக தினசரி விமானத்தில் பிரச்சனை என செய்தி வருவது மிக பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிற. இங்கிலாந்து இராணுவ விமானம் நம் வான்வெளி பாதுகாப்பு படையால் திருவனந்தபுரத்தில் இறக்கப்பட்டது பிறகு இது போன்ற விமானங்கள் பிரச்சனைகள் குறிப்பாக நம் நாட்டில் மட்டும். இதற்கு பின்னால் வெளிநாட்டு சக்திகள் குறிப்பாக அமெரிக்க, ஐரோப்பிய deep ststate பின்னணி இருக்குமோ என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. நம் நாட்டின் விமானங்கள் அனைத்தும் வெளிநாட்டில் தயாரிக்கப் பட்டவை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை