உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்; 3 பெண்கள் உட்பட 6 பேர் மீது வழக்கு

இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்; 3 பெண்கள் உட்பட 6 பேர் மீது வழக்கு

வேலுார் : இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில், மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில், சீட்டு நிறுவனம் நடத்தி வரும் அல்தாப் தாசினிடம், சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்த, 30 வயது இளம்பெண், தன் நிலத்தை விற்று 15 லட்சம் ரூபாய்க்கு சீட்டு கட்டி வந்தார்.மேலும் ஏஜன்டாக செயல்பட்டு தனக்கு தெரிந்தவர்களையும் சேர்த்து, 1.75 கோடி ரூபாய்க்கு சீட்டு கட்ட வைத்தார். அவர்களுக்கு சீட்டு முடிந்தவுடன், 40 லட்சம் ரூபாயை நிறுவனம் திருப்பிக் கொடுத்தது. மீதி பணத்தை இளம்பெண் கேட்டபோது, வேலுார் வந்து பெற்றுக் கொள்ளுமாறு கடந்த நவம்பரில் அல்தாப் தாசின் கூறினார். தாயுடன் நவ., 3ல், வேலுார் புது பஸ் ஸ்டாண்டுக்கு இளம்பெண் சென்றார்.பொது இடத்தில் அதிக தொகை கொடுத்தால் பிரச்னை வரும் என்று கூறி, அருகே உள்ள ஒரு விடுதிக்கு வரவழைத்துள்ளார். அங்கு தாயுடன் இளம்பெண் சென்றார். சீட்டு கம்பெனியில் பணிபுரிந்த கிரிஜா, புவனா, தேவி, ராஜ்குமார், மகேஷ் இருந்தனர். பணத்தைக் கொடுக்க முடியாது என்று கூறி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.அதே சமயம், பெண்ணின் தாயை, வேறு அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து, இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, அல்தாப் தாசின், மகேஷ், ராஜ்குமார் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.மேலும் 'உன்னை பலாத்காரம் செய்ததை வீடியோவாக எடுத்துள்ளோம். வெளியில் சொன்னால் இணையதளத்தில் வெளியிடுவோம்' என, மிரட்டியுள்ளனர்.பாதிக்கப்பட்ட இளம்பெண், வேலுார் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார். வேலுார் அனைத்து மகளிர் போலீசார், அல்தாப் தாசின், மகேஷ், ராஜ்குமார் மற்றும் கிரிஜா, தேவி, புவனா என, ஆறு பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Nandakumar Naidu.
பிப் 09, 2025 12:08

அனைவரையும் விசாரித்து உடனடியாக தூக்கில் போட வேண்டும்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
பிப் 09, 2025 11:40

அதி விரைவில் பத்திரிகை ஊடக துறைகளில் புதியதாய் ஒரு சிறப்பு செய்தி சேவை சேர்க்கப்படலாம். அது என்னவென்றால் விளையாட்டு செய்திகள் பொருளாதார செய்திகள் என்று ஒரு பக்கம் பத்திரிகைகளில் இருப்பதை போல பாலியல் செய்திகள் என்று புதியதாக ஒரு பக்கம் சேர்க்கலாம். அதில் இன்றைய பாலியல் வன்கொடுமை என்று அன்றன்றைய பாலியல் சீண்டல்கள் மற்றும் அதன் சார்ந்த வழக்குகள் பற்றிய செய்திகள் வெளியிடலாம். சிறப்பு நிருபர்கள் இதற்காக நியமிக்கலாம். அவ்வளவு பாலியல் வன்கொடுமை அதன் சார்ந்த செய்திகள் தினம் தினம் கிடைக்கிறது தமிழகத்தில். தொலைக்காட்சி ஊடகங்கள் வானொலி நிலையங்கள் தனியாக சிறப்பு செய்திகள் ஒளி ஒலி பரப்பு செய்யலாம். விளம்பர ஸ்பான்சர் அதிகம் கிடைப்பார்கள். சென்ற சட்ட சபை தேர்தல் போது பொள்ளாச்சி பொள்ளாச்சி என்று தமிழகம் முழுவதும் சென்று தமிழக முதலமைச்சர் மாண்புமிகு திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏலம் போட்டார். அவர் போட்ட விதை தற்போது ஆல மரமாக வளர்ந்து தமிழகம் முழுவதும் பரந்து விரிந்து உள்ளது. விடியல் ஆட்சி விடியல் ஆட்சி என்று கூறி ஆட்சிக்கு வந்து பாலியல் ஆட்சியாக மாறி ஆட்சி செய்து வருகிறார். இந்த பாலியல் வன்கொடுமைகள் இந்து மதம் சார்ந்த பெண்களுக்கு தான் அதிகம் நடக்கிறது. இதை இந்து அமைப்புகள் கவனிக்க வேண்டும்.


Sudha
பிப் 09, 2025 09:50

60 களில் நக்ஸலைட் எனும் இயக்கம் இருந்து சில பாடங்கள் கற்பித்தது, இன்றும் சில சேனைகள் இதுபோன்ற சமுதாய சரி செய்தல்களை செய்து வருகின்றன, தமிழகம் வெட்கமற்று போய் விட்டதென்று சொல்ல தோன்றுகிறது


Kasimani Baskaran
பிப் 09, 2025 06:48

நிலத்தை விற்று சீட்டுப்போடும் அளவு அறிவாளிகள் இருக்கும் பொழுது அதை அபகரிக்க ஆட்களா இல்லை? சீட்டு நிறுவனங்கள் மற்றும் படம் எடுப்போர் அரசியல் பின்புலத்தில் இயங்குபபவர்கள். இழப்பதற்கு ஒன்றுமே இல்லை என்பவர்கள்தான் இவர்களிடம் சிக்கி மடிவார்கள்.


எவர்கிங்
பிப் 09, 2025 05:43

அதிக பட்சம் ஒரு மாசம் பிறகு ஜாமீன் விடியல்


மாதர் நலம் விரும்பி
பிப் 09, 2025 04:43

மாடல் சித்தாந்தம் அவர்கள் கொண்டாடும் மண்ணின் உரிமையாளரின் மிக தவறான சித்தாந்தங்கள் தான் வரம்பற்ற சிற்றின்ப தேடல்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் சொல்லொணா துயரங்கள். வாகன பிரேக் உங்களை கட்டுப்படுத்துகிறது எனவே அதிலிருந்து நீங்கள்சுதந்திரம் அடையவேண்டும் எனவே பிரேக் இல்லாமல் ஒட்டுங்கள் என்ற நிலைக்கு நமது மாதரினத்தை கொண்டு சென்று உள்ளனர் பெண்ணுரிமை வாதிகள், தங்கள் சுய நலத்திற்காக. பழைய சம்பிரதாயங்கள் கலாச்சாரம் மீண்டும் மீட்டு எடுத்தால் தான் இதற்கு தீர்வு கிடைக்கும்.


Senthoora
பிப் 09, 2025 04:31

அது என்ன தமிழகத்தில் மட்டுமா? முழு இந்தியாவிலும் நடக்குது. மற்ற மீடியாக்களை பாருங்க.


நிக்கோல்தாம்சன்
பிப் 09, 2025 06:11

வெக்கமா இல்லை தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக பெண்களுக்கு பாலியல் தொல்லை அதிகரித்து வருவது தெரிந்தும் அதனை தடுக்க துப்பில்லை , இதற்க்கு நீங்க வேங்கை வயலில் கலந்தீர்களே அதனையே தின்று வளரலாம்


Barakat Ali
பிப் 09, 2025 08:32

முன்னேறிய மாநிலம் ..... எந்தக்கொம்பனும் குறை சொல்லமுடியாத ஆட்சி .....


J.V. Iyer
பிப் 09, 2025 04:21

இந்த கேடுகெட்ட மாடல் அரசில் இப்படித்தான் தினமும். எல்லா ஏவல்துரையும் பாஜககாரர்களை கைதுசெய்ய அவர்களை பின்தொடர்ந்தால், இப்படித்தான். சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. உடனே இந்த கேடுகெட்ட மடல் அரசை கலைக்கவேண்டும்.


ngopalsami
பிப் 09, 2025 04:07

பாலியல் தொல்லை, கூட்டு பலாத்காரம், பெண்களுக்கு துன்புறுத்தல் இப்படிப்பட்ட செய்திகள் இல்லாத நாளே கிடையாது. காலையில் செய்தித்தாள் திறந்ததும் இந்த சித்திகள்தான் அதிகம். பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் திமிலகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை