உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தாயை கொன்ற வழக்கில் வாலிபர் தஷ்வந்த் விடுதலை

தாயை கொன்ற வழக்கில் வாலிபர் தஷ்வந்த் விடுதலை

சென்னை:கொலை வழக்கில் ஜாமினில் வந்து தாயை கொலை செய்த வாலிபர் தஷ்வந்த், உரிய சாட்சியம் இல்லாததால் இன்று விடுதலை செய்யப்பட்டார்.சென்னை மாங்காடு பகுதியில் 2018ம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் நடந்தது. சிறுமியை கொன்ற கொடூரன், உடலை பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டான். இந்த சம்பவத்தில், அதே பகுதியை சேர்ந்த தஷ்வந்த் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.அவனுக்கு கோர்ட்டில் துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனை உயர்நீதிமன்றத்திலும் உறுதி செய்யப்பட்டது.ஆனால், உச்சநீதிமன்றத்தில் தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஜாமினில் வெளியே வந்த கொடூரன் தஷ்வந்த், செலவுக்கு பணம் தராததால் தன் தாயை கொலை செய்தான்.தாயிடம் இருந்த 25 பவுன் நகையுடன் மும்பைக்கு தப்பிய அவனை, போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு கோர்ட்டில் நடந்தது. இதில், அவனது தந்தை பிறழ்சாட்சியாக மாறிவிட்டார். கொலையை நிரூபணம் செய்த போதிய ஆதாரங்கள் இல்லாத நிலையில் கோர்ட் தஷ்வந்த்தை விடுதலை செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Raj
ஏப் 30, 2025 05:19

நல்ல நீதிமன்றம், நல்ல இந்திய சட்டங்கள், இப்பொழுது எல்லாம் குற்றவாளிகளுக்கு பயம் கிடையாது.


Mani . V
ஏப் 30, 2025 04:50

என்ன சட்டமோ? போங்கடா நீங்களும் உங்கள் சட்டமும்.


Ramesh Sargam
ஏப் 29, 2025 20:58

நமது நீதிமன்றங்களில், உச்சநீதிமன்றம் உட்பட பல கொலையாளிகள் இப்படித்தான் தண்டனை பெறாமல் தப்பித்துவிடுகின்றனர். காரணம்: போதிய சாட்சியங்கள் இல்லை. வெட்கம். வேதனை. நீதிமன்றங்களின் செயல்பாடுகள் மிகவும் வருத்தம் அளிக்கிறது.


சாமியாடி
ஏப் 29, 2025 19:41

சாட்சி பல்டி அடிச்சவனை தூக்குல போடுங்க


அப்பாவி
ஏப் 29, 2025 19:40

நாடு வெளங்கிடும்டா கோவாலு.


யாழினி
ஏப் 29, 2025 19:20

குழந்தையை எரித்த வழக்கில் தண்டணை உண்டா இல்லையா ?


கடலோடி
ஏப் 29, 2025 19:18

சூப்பர்...


RAM MADINA
ஏப் 29, 2025 18:59

இதில் இவர்கள் கவர்னர், குடியரசு தலைவருக்கு அறிவுரை வழங்குகிறாரார்கள் கலகொடும....


D Natarajan
ஏப் 29, 2025 18:29

தந்தை அவர்ஹளை தூக்கில் போட வேண்டும்


Keshavan.J
ஏப் 30, 2025 04:40

he used his crazy son to kill his wife.


புதிய வீடியோ