உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துஷ்யந்த் ஸ்ரீதருக்கு எதிராக அவதூறு கருத்து வெளியிட ரங்கராஜன் நரசிம்மனுக்கு தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு

துஷ்யந்த் ஸ்ரீதருக்கு எதிராக அவதூறு கருத்து வெளியிட ரங்கராஜன் நரசிம்மனுக்கு தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆன்மிக பேச்சாளர் துஷ்யந்த் ஸ்ரீதருக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட ரங்கராஜன் நரசிம்மனுக்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன். கோவில் சொத்துகளை பாதுகாக்க கோரி, தொடர்ந்து போராடி வருபவர். இவர், தம்மை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை வெளியிட்டு வருகிறார் என பெங்களூருவைச் சேர்ந்த ஆன்மிக சொற்பொழிவாளர் துஷ்யந்த் ஸ்ரீதர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். தமக்கு ரூ.1 கோடி இழப்பீடு அளிக்க வேண்டும் என்றும், வழக்கில் அவர் கோரி இருந்தார். இந்த வழக்கில், விசாரணை நடத்திய சென்னை ஐகோர்ட், துஷ்யந்த் ஸ்ரீதருக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட ரங்கராஜன் நரசிம்மனுக்கு தடை விதித்துள்ளது. இதற்கான உத்தரவை நீதிபதி குமரேஷ் பாபு பிறப்பித்து உள்ளார். முன்னதாக இந்த வழக்கை மனுதாரரான துஷ்யந்த் ஸ்ரீதர், கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்திருந்தார். அதில், தாம் பெங்களூருவில் வசிப்பதால், வழக்கை சென்னையில் தொடங்க அனுமதிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

M Ramachandran
ஜூலை 15, 2025 01:16

இது மாதிரி உள்குத்து செய்தால் ஏன் பொன்முடியை போன்று மேலாடையில் பேச மாட்டார்கள். சந்து கிடையதால் முஞ்சந்தியில் நின்னு சிந்து பாடக்கூடிய கும்பல்


ராஜா
ஜூலை 14, 2025 23:41

தம்மில் அடித்து சோலிய முடிச்சிக்கிடுவாங்க .


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூலை 14, 2025 22:17

பத்திரிகையில் நின்னவாக்கு ஆட்களை இழுத்துவிட்டுட்டாங்க பொன்முடி பேச்சு நினைவுக்கு வந்தால் கம்பெனி பொறுப்பல்ல பேஷ் பேஷ் ரொம்போ நன்னா இருக்கு


அப்பாவி
ஜூலை 14, 2025 22:10

இந்து மத ஒற்றுமை வெளங்கிடும்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூலை 14, 2025 20:39

இந்த ரங்கராஜன் நரசிம்மன் என்னவோ ஆகாசத்திலிருந்து குதித்ததாக நினைத்துக்கொண்டு எல்லோரிடமும் தரக்குறைவாக பேசிக்கொண்டிருக்கிறார். ஶ்ரீரங்கத்தில் நாமம் போட்டவனெல்லாம் அறிவாளி இல்லை என்பதற்கு சிறந்த உதாரணம். அவரின் எக்ஸ் வலைதளத்தில் சென்று பார்த்தால் தெரியும் அவரின் தரம். பகவானே, பெருமாளே என்று இடையிடையே சேர்த்துக்கொண்டால் நல்லவன் என்று ஆகிவிடாது.


மூர்க்கன்
ஜூலை 15, 2025 14:19

கரெக்கெட்டுதான் பேட்ஸ் ?? ஊருக்குள்ள ரொம்ப பேரு இப்படித்தான் சுத்திகிட்டு திரியுறாங்க???


S.kausalya
ஜூலை 14, 2025 20:13

ரங்கராஜன் சார் எதற்க்கு ஸ்ரீதர் சாருக்கு எதிராக கருத்து சொல்ல.வேண்டும். அவர் அவர் வழியில் போகட்டும். நீங்கள் உங்கள் வழியில் செல்லுங்கள். உங்களால், ,நீங்கள் கூறும் எதிர் கருத்தால்,, நம் பொது எதிராளி நம்மை கேலி செய்கிறான் தேவையா இது? ஒருவர் நியம நிஷ்டையுடன் நடக்கிறார். இன்னொருவர் ஜனரஞ்சகமாக நடக்கிறார். ஹிந்து மதமே கோலாகலமானது தான்.அது மிகவும் ஒரு நேர் கோட்டில் செல்ல வேண்டியது இல்லை.இந்து மதத்தில் இறை சிந்தனையை எப்படி வேண்டுமானாலும் யாரும் சொல்லலாம். அதை வியாபார துடன் இணைக்க கூடாது என்று கூட சொல்லி வைக்க வில்லை.


Ramesh Sargam
ஜூலை 14, 2025 20:05

இந்த இரண்டு நபர்களும் கலந்துபேசி தங்களுக்கு இடையே உள்ள பிரச்சினையை தீர்த்துக்கொண்டிருக்கவேண்டும். நீதிமன்றம் வரை சென்றது தவறு. ஏற்கனவே ஐயர், ஐயங்கார் மற்றும் பல ஹிந்து வகுப்பினரை இந்த ஹிந்து எதிரி திமுக மதிப்பதில்லை. இதன் இடையில் இப்படி நமக்குள்ளே பிரச்சினை இருந்தால் அது அந்த திமுகவினருக்கு ஹல்வா தின்ன கொடுப்பது போலாகும்.


SUBBU,MADURAI
ஜூலை 14, 2025 20:01

இந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் விளம்பர மோகம் உள்ளவர் எல்லோரிடமும் ஒரண்டை இழுப்பதையே முழு நேர தொழிலாக கொண்டவர் இவர் வம்பிழுக்காத ஆட்களே கிடையாது என்று சொல்லும் அளவிற்கு பெயர் பெற்றவர்.


madhu sri
ஜூலை 14, 2025 19:47

ஆன்மீக சொற்பொழிவாளருக்கு தன்னைப் பற்றி யார் என்ன சொன்னால் என்ன கவலை? வேதாந்தம், வியாக்கியானம் எல்லாம் சொற்பொழிவில் தான் போலும். வாய் கிழிய பேசுவதில் மட்டும் வல்லவர்கள். சைக்கிள் கேப்பில் ஒரு கோடி கேட்கிறார் பாருங்கள்.


V Venkatachalam
ஜூலை 14, 2025 21:19

மது ஸ்ரீ அண்ணே, திருட்டு தீய முக காரனுங்க செய்வதையும் செய்து விட்டு ரொம்ப யோக்கியனுங்க மாதிரி கோடிக்கணக்கில் நஷ்ட ஈடு கேப்பானுங்க. அப்ப, திருட்டு தீய முக அடி வருடிங்க, கை.உ.பீஸ் காரனுங்க எவனுமே வாய திறக்கவே மாட்டானுங்க. ஸ்பெஷல் கொழுக்கட்டை பெரிய சைஸ்ல பண்ணி அதை வாயில் வச்சிப்பானுங்க.‌ ஆனால் இந்து மதத்தில் ஆன்மீக வாதிகள் இந்த மாதிரி கருத்து வேறுபாடு வந்து வேறு வழியின்றி கோர்ட்டுக்கு போனா, இந்த க உ பீஸ் கருத்து சொல்றேன் பேர்வழின்னு மூக்கை முடிந்த வரை உள்ளே நுழைப்பானுங்க அவனுங்களுக்கு தான் மூஞ்சியே தனக்கு தெரியாது. அடுத்த மூஞ்சியில் பவுடர் போட்டு விட கிளம்பிடுவானுங்க.


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூலை 14, 2025 22:15

மேற்படி ரெண்டு கருத்தும் அற்புதம் .... ஒண்ணுக்குஒன்னு சளைத்தது இல்லை மது ஸ்ரீ வீட்டு ஆட்களை எல்லாம் பொதுவெளியில் இழுத்து விட்டால் நீங்க எவ்வ்ளோ கேட்பீங்க ?? அவ்ளோ ஒர்த்து இல்லன்னுட்டு சொல்றீங்களா ??