மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
55 minutes ago | 1
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
11 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
12 hour(s) ago
ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழா நாளை (ஜூலை25) கொடியேற்றத்துடன் துவங்குகிறது.இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஆக.2ல் நடக்கிறது. இத்திருவிழா நாளை காலை 9.45 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி, கருடாழ்வார் முத்திரை பதித்த கொடி நான்கு ரதவீதிகள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, கொடிமரத்தில் ஏற்றப்படுகிறது. ஆக.,2 முடிய 10 நாள் நடக்கும் விழாவில் தினமும், அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஆக.,2ல் நடக்கிறது. அன்று காலை 4 மணிக்கு ஏகாந்தி திருமஞ்சனம், அதை தொடர்ந்து அம்பாள்,ரெங்கமன்னார் தேரில் எழுந்தருளலும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் குருநாதன் செய்துவருகின்றனர்.
55 minutes ago | 1
11 hour(s) ago | 1
12 hour(s) ago