வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கலப்படத்தின் காவலர்களாக DO கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் கலப்படத்தை ஒழிக்க முடியாது . பத்திர பதிவு , RTO, BDO. மாசு கட்டுப்பாடு ஆஃபீஸ்க்களை விட இந்த DO கள் மிகவும் லஞ்ச பேர்வழிகள். ஓட்டல்களில் OC சாப்பாடு பேர்வழிகள்
சென்னை: நாடு முழுவதும், பால் மற்றும் பால் பொருட்களில், 21 நிறுவனங்கள் விதிமீறலில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்நிறுவனங்களில் ஆய்வு செய்ய, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.அனைத்து மாநில உணவு பாதுகாப்பு ஆணையர்களுக்கு, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:பால், தயிர், நெய், ஐஸ்கிரீம், பனீர் மற்றும் பால் பவுடர் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கும் 21 நிறுவனங்களின், 73 கிளைகளில், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., விதிகளை பின்பற்றவில்லை.தமிழகம், குஜராத், ராஜஸ்தான், மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை தலைமையிடமாக வைத்து செயல்படும், முன்னணி நிறுவனங்கள், இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிமுறைகளின்படி, பால் மற்றும் பால் பொருட்களின் தரத்தை, பாது காப்பை உறுதி செய்ய, கள ஆய்வு செய்ய வேண்டும்.ஆய்வு, மாதிரி சேகரிப்பு, பரிசோதனை முடிவுகள் என, அனைத்து விபரங் களையும், எப்.எஸ். எஸ்.ஏ.ஐ., இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.