உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நான்கு மாவட்டங்களில் சாலை மேம்பாடு பணி ‘டெண்டர்’ வெளியீடு

நான்கு மாவட்டங்களில் சாலை மேம்பாடு பணி ‘டெண்டர்’ வெளியீடு

சென்னை: சென்னை – கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்டத்தில், நான்கு மாவட்டங்களில், சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள, மாநில நெடுஞ்சாலைத் துறை ‘டெண்டர்’ வெளியிட்டுள்ளது. இது குறித்து, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநில தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த, சென்னை முதல் கன்னியாகுமரி வரை, மாநில சாலைகள் மேம்படுத்தப்படுகின்றன. இதில், 22 புறவழிச் சாலைகள், 12 உயர்மட்ட மேம்பாலங்கள், 9 ரயில்வே பாலங்கள், 122 சிறிய பாலங்கள் மற்றும் 1,367 குறுகிய பாலங்களின் கட்டுமானப் பணிகள் அடங்கும். இந்த சாலை மேம்பாட்டு பணிகளில், 578 கி.மீ., பணிகள் நிறைவு செய்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட உள்ளன. அந்த வகையில், இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம், கடலுார், சேலம், திருநெல்வேலி ஆகிய நான்கு மாவட்டங்களில், சாலை பாதுகாப்பு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள, புதிய ‘டெண்டர்’ வெளியிடப்பட்டுள்ளது. நான்கு தொகுப்புகளாக, இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த டெண்டரில் ஒப்பந்ததாரர்களை இறுதி செய்து, சாலை மேம்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை