உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தங்க மோதிரம் வாங்க டெண்டர்

 தங்க மோதிரம் வாங்க டெண்டர்

சென்னை: த.வெ.க., தேர்தல் வாக்குறுதியின்படி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை, செப்., 15ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார். இந்த திட்டத்திற்கு, 4 லட்சத்து, 41,667 தங்க மோதிரங்களை, 755.83 கோடி ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்வதற்கான டெண்டரை, தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் வெளியிட்டுள்ளது. டெண்டர் கோர விரும்பும் நிறுவனங்கள், ஆக.,17 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி