உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பார்சல் வெடிகுண்டு தயாரிக்க பயங்கரவாதி முகமது அலி பயிற்சி

பார்சல் வெடிகுண்டு தயாரிக்க பயங்கரவாதி முகமது அலி பயிற்சி

சென்னை : ஆந்திராவில் பதுங்கி இருந்த, பயங்கரவாதி முகமது அலி, பார்சல் வெடிகுண்டு தயாரிப்பு பயிற்சியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. கோவை தொடர் குண்டு வெடிப்பு மற்றும் ஹிந்து தலைவர்கள் கொலை வழக்குகளில், 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த, பயங்கரவாதிகள் அபுபக்கர் சித்திக், முகமது அலி ஆகியோர், தமிழக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரால், சமீபத்தில் ஆந்திராவில் கைது செய்யப்பட்டனர். அதேபோல், கர்நாடக மாநிலத்தில் பதுங்கி இருந்த, பயங்கரவாதி டெய்லர் ராஜாவும் கைது செய்யப்பட்டார். இவர்கள் தலைமறைவாக இருந்த நாட்களில், பயங்கரவாத செயலில் ஈடுபட்டனரா என, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன், ஆந்திராவில் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தில், சோதனை நடத்தி, முக்கிய தகவல்களை திரட்டி உள்ளனர்.

இது குறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் இப்ராஹிம் தாய்க்கா வீதியை சேர்ந்தவர் முகமது அலி. கடந்த 1998ல் நடத்தப்பட்ட, கோவை தொடர் குண்டு வெடிப்புக்கு, முக்கிய நபராக செயல்பட்டவர். இவர், யூனுஸ், ேஷக் மன்சூர் என்ற பெயரில், சதி செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது, சென்னை எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, திருவல்லிக்கேணி போலீஸ் நிலையங்களில், பல்வேறு வெடிகுண்டு வழக்குகள் பதிவாகி உள்ளன. தலைமறைவாக இருந்த ஆண்டுகளில், பார்சல் வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி எடுத்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

shakti
ஆக 18, 2025 16:08

1947ல் ட்ரெயினை தவற விட்டவர்களை இப்போது பிடித்து அங்கு அனுப்பி வைக்கலாமே ?


V RAMASWAMY
ஆக 06, 2025 10:53

இவற்றையெல்லாம் கண்டுபிடித்தவுடன் அதிரடி நடவடிக்கை எடுக்காமல் காலதாமதமேன்?


Anand
ஆக 06, 2025 10:41

ஆமைக்கறி இவனை சகோதரன், தம்பி, தும்பி, கும்பி என தூக்கிப்பிடித்து முட்டுக்கொடுக்க வருவான்...


Kalyanaraman
ஆக 06, 2025 08:33

யார் யாரையோ என்கவுண்டர் பண்றாங்க இவனையெல்லாம் என்கவுண்டர் பண்ணா ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் நன்மை.


N.Purushothaman
ஆக 06, 2025 07:38

பயங்கரவாதிகளின் குடியுரிமையை ரத்து செய்து நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் ...


பேசும் தமிழன்
ஆக 06, 2025 07:25

இந்த துரோகிகள் எல்லாம் நமது நாட்டின் உப்பை சாப்பிட்டு விட்டு....பாகிஸ்தான் நாட்டுக்கு ஆதரவான மனநிலையில் இருப்பவர்கள் .....நாட்டுக்கு தேவையில்லாத ஆணிகள் ....அப்புறப்படுத்தப்பட வேண்டியவர்கள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 06, 2025 06:36

பின்ன >>>> அவன் என்ன பிராணாயாம பயிற்சியா எடுப்பான் >>>>


K V Ramadoss
ஆக 06, 2025 06:34

உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்யும் துரோகிகள்.. இவர்கள் உயிருடன் இன்னும் இருக்க வேண்டுமா ?


புதிய வீடியோ