உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தை அமாவாசை; முன்னோருக்கு தர்ப்பணம் செய்து பக்தர்கள் வழிபாடு: புகைப்பட ஆல்பம் இதோ!

தை அமாவாசை; முன்னோருக்கு தர்ப்பணம் செய்து பக்தர்கள் வழிபாடு: புகைப்பட ஆல்பம் இதோ!

சென்னை: தை அமாவாசையை முன்னிட்டு, ராமநாதபுரம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.தை அமாவாசையை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தனர். அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு கோவில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2u3omylz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகம் முழுவதும், தை அமாவாசையை முன்னிட்டு ஏராமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.* மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் காவேரி சங்கமத் துறையில் ஏராளமானோர் புனித நீராடினர். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து அரிசி, காய்கறிகள், தானியங்களை தானமாக கொடுத்து வழிபாடு நடத்தினர்.* திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் திரண்ட பக்தர்கள் முக்குளத்தில் நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.* நாமக்கல் மாவட்டம், மோகனூர் காவிரி ஆற்றில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு நடத்தினர்.* கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் தங்களது முன்னோருக்கு தர்ப்பணம் செய்து பக்தர்கள் கடலில் நீராடினர்.* சிவகங்கை தெப்பக்குளத்தில் முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி ஆற்றின் புஷ்யமண்டப படித்துறையில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, நீராடி வழிப்பட்டனர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள குறிச்சி காசி விஸ்வநாதர் கோவிலில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் படித்துறையில் தர்ப்பணம் கொடுத்தும், விளக்கேற்றியும் முன்னோர்களுக்கு மக்கள் வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

RAAJ68
ஜன 29, 2025 15:20

பிளாஸ்டிக்க்கு பதிலாக உலோகபாத்திரங்களை பயன்படுத்தினால் என்ன என்று ஆதங்கப்படுகிறார் ஒரு வாசகர். நல்ல விஷயம் தான். பித்தளைத் தட்டு பித்தளை குவளை மிகவும் சிறந்தது. ஆனால் இப்போது எல்லாமே ஒரு சம்பிரதாயமாக ஆகிவிட்டது. எல்லோரும் கைவீசிக் கொண்டு வருகிறார்கள். அவரவர்கள் வீட்டில் இருந்து எடுத்து வர வேண்டும். அங்கே எல்லாமே கிடைக்கும் கிடைக்கும் பார்த்துக் கொள்ளலாம் என்று வருகிறார்கள். இவர்களின் தேவையை பூர்த்தி செய்ய வியாபார நோக்கத்தில் 100 ரூபாய் வரை தர்ப்பணம் செய்வதற்கு தேவையான பூ பழம் தேங்காய் எள்ளு போன்றவற்றை அங்கே உள்ள கடைக்காரர்கள் தயாராக பிளாஸ்டிக் கூடையில் வைத்துள்ளனர். கூடவே பிளாஸ்டிக் குறையும் தருகிறார்கள். கூடைகளை அவர்களிடம் திருப்பித் தர வேண்டும். தர்ப்பணம் செய்வதும் வியாபாரமாகி விட்டது. இது அவர்களுடைய தவறு அல்ல நாம் சிரத்தையாக பித்தளை தட்டு மற்றும் குவளை எல்லாவற்றையும் வீட்டில் இருந்து கொண்டு செல்ல வேண்டும். தர்ப்பணம் செய்ய வேண்டுமே என்ற கட்டாயத்தினால் சம்பிரதாயமான எண்ணம் இல்லாமல் பூரண மனதுடன் செல்ல வேண்டும் .அப்போதுதான் அதனுடைய பலன் கிடைக்கும்.


Mettai* Tamil
ஜன 29, 2025 13:59

வாழ்க வளர்க சனாதன தர்மம் ...


S.L.Narasimman
ஜன 29, 2025 13:25

எவ்வளவோ செலவு செய்கின்றோம். தர்ப்பணம் செய்யும் போது பிளாஸ்டிக்கு பதில் சிறிய உலோக பாத்திரங்களை பயன்படுதத்தினால் நம் முன்னோருக்கு செய்தமுழு பலனும் ஆசியும் கிடைக்குமே.


RAAJ68
ஜன 29, 2025 12:51

தர்ப்பணம் செய்வதற்கு புகழ்பெற்ற திருப்புல்லாணி பற்றி ஒரு வார்த்தை கூட எழுதவில்லை. இப்படி ஒரு ஸ்தலம் இருப்பது தெரியாதா. ராமநாதபுரம் அருகில் மிக அருகில் திருப்புல்லாணி என்ற வைஷ்ணவ ஸ்தலம் உள்ளது . ராமர் தர்ப்பணம் செய்த இடம். ஆதி ஜெகந்நாத பெருமாள் திவ்ய ஸ்தலம். இங்கு தான் சேதுக்கரை உள்ளது. இலங்கை செல்வதற்கு ராமர் பாலம் கட்டிய இடம். இவ்வளவு சிறப்புமிக்க இடத்தை பற்றி குறிப்பிடவில்லை.


kulandai kannan
ஜன 29, 2025 11:49

வாழ்க சனாதன கலாசாரம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை