வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கோல்டுக்கு மில்க்கிற்கு மண்டைக்கு உள்ளேயும் இல்லையா ?
திருச்சி: ''தமிழகம் முழுதும் ஆக்கிரமிப்பில் இருக்கும் காங்கிரஸ் சொத்துக்கள் மீட்கப்படும்,'' என கட்சியின் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்பு குழு தலைவர் தங்கபாலு தெரிவித்தார். திருச்சியில் காங்கிரசுக்கு சொந்தமான சொத்துக்களை பார்வையிட்டு ஆய்வு செய்த பின், அவர் அளித்த பேட்டி: தமிழகம் முழுதும் காங்கிரசின் மூத்த முன்னோடிகள், கட்சிக்காக பல நிலைகளில் சொத்துக்களை வழங்கியுள்ளனர். இந்த சொத்துக்களை பராமரித்து, கட்சி வளர்ச்சிக்காக பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சொத்துக்களை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறோம். தமிழகம் முழுதும், ஆக்கிரமிப்பில் இருக்கும் கட்சியின் சொத்துக்கள் ஒன்று விடாமல் மீட்கப்படும். எத்தனை பெரிய மனிதர்களிடம் சொத்துக்கள் இருந்தாலும், யாருக்கும் அஞ்சாமல் அதை மீட்போம். மடப்புரம் கோவில் ஊழியர் அஜித்குமார், போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்தது, கண்டனத்துக்குரியது. தவறு எங்கு நடந்தாலும் கண்டிக்கிறோம். இச்சம்பவத்தில், போலீஸ் அதிகாரிகள் மீது தமிழக அரசு சிறப்பாக நடவடிக்கை எடுத்து இருக்கிறது. எதிர்க்கட்சிகள் என்றால் குற்றச்சாட்டுகளை கூறத்தான் செய்வர். அ.தி.மு.க., அரசை விட தி.மு.க., அரசு சிறப்பாக செயல்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
கோல்டுக்கு மில்க்கிற்கு மண்டைக்கு உள்ளேயும் இல்லையா ?