உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அந்த அறிவு கூட இல்லை அந்த ஆளுக்கு

அந்த அறிவு கூட இல்லை அந்த ஆளுக்கு

வேலுார்:''மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் முதல்வராக ஆகிறார். அந்த அறிவு கூட அந்த ஆளுக்கு இல்லை,'' என, விடுதலை சிறுத்தைகள் துணைப் பொதுச் செயலர் ஆதவ் அர்ஜூனா பேச்சுக்கு பதிலளித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஆவேசமாக கூறினார்.வேலுார் மாவட்டம், காட்பாடியிலுள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி, நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து கூறியதாவது:நிருபர்கள்: நேற்று சென்னையில் நடந்த விழாவில், த.வெ.க., தலைவர் விஜய், தமிழகத்தில் மன்னராட்சி நடக்கிறது. அதை, 2026ல் அகற்றுவோம் என கூறியுள்ளாரே.உதயநிதி: சினிமா செய்திகளை நான் பார்ப்பதில்லை.கேள்வி: பிறப்பால் முதல்வராக முடியாது என, ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளாரே.அதற்கு ஆவேசமடைந்த உதயநிதி, ''யாருங்க பிறப்பால் முதல்வராக இருக்கிறார்கள். மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக ஆகிறார். அந்த அறிவு கூட இல்லை அந்த ஆளுக்கு,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி