உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதெல்லாம் ராணுவ ரகசியம்: சீமான் பேட்டி

அதெல்லாம் ராணுவ ரகசியம்: சீமான் பேட்டி

சென்னை: '' சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதம் உள்ளது. ராணுவத்துக்கு ரகசியம் உள்ளது போல், எல்லோருக்கும் ரகசியம் உள்ளது,'' என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சட்டசபை தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு அவர் இவ்வறு பதிலளித்தார்.

சந்திப்பு

முதல்வர் ஸ்டாலினின் சகோதரர் முத்து நேற்று காலமானார். மாலை அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவரது மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில், தினமும் மேடைதோறும் தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்து வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து முத்து மறைவுக்கு ஆறுதல் கூறினார்.

அன்பு, மாண்பு

இதன் பின்னர் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது: நான் பசியால் மயக்கமடைந்த போது, எனது உடல்நலன் குறித்து முதல்வர் ஸ்டாலின் விசாரித்தார். தந்தை இறந்த போதும் அமைச்சரை அனுப்பிவைத்து ஆறுதல் தெரிவித்தார். அரசியலுக்கு அப்பாற்பட்டு அன்பு, மாண்பு கருதி முதல்வருடன் சந்திப்பு நடந்தது. கடுமையாக விமர்சிப்பது வேறு. நேரில் ஆறுதல் கூறுவது வேறு. பா.ஜ.,வும் காங்கிரஸ் எதிரெதிராக உள்ளன. டில்லியில் அத்வானி, சோனியாவும் அருகில் அமர்ந்து தேநீர் அருந்தினர். கேரளாவில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள் எதிரெதிர் நிலையில் இருந்தாலும், அக்கட்சியினர் சந்தித்து மாநில நலன் குறித்து பேசுகின்றனர். இந்த நாகரீகம் இந்த மண்ணில்இல்லை. இது மீண்டும் மலர வேண்டும். தமிழகத்தில் ஜாதிய தீண்டாமையை காட்டிலும், அரசியல் தீண்டாமை உள்ளது. இங்கு அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் மகள், தி.மு.க., மாவட்ட செயலாளர் மகனுக்கு திருமணம் செய்வதில் சிக்கல் உள்ளது கூட்டணியில் இருங்கள், ஓரணியில் இருங்கள் . ஓராட்சியில் இருங்கள். மக்களுக்கு என்ன செய்வீர்கள். இதுதான் இங்கு பிரச்னை.

தேவையில்லை

வரதட்சணைக்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும். நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால், வரதட்சணை வாங்குவோருக்கு அரசின் சலுகைகள் நிறுத்தப்படும். அரசுப் பணியில் சேர முடியாது என உத்தரவிடப்படும். விஜயை நேரில் சந்திப்பதும், தொலைபேசியில் பேசுவதும் அவசியப்படவில்லை. ஒத்த கருத்து ஒரே நோக்கம் ஒரே பயணமாக இருக்கும் என நினைத்த போது சரியாக இருந்தது. பிறகு பாதையும் பயணமும் மாறிவிட்டது. பிறகு பேசிக் கொண்டிருப்பது தேவையும் இல்லை. அவசியம் இல்லை.

தரமில்லை

அரசை நடத்துபவர்களுக்கு அரசு மருத்துவமனைகள் மீது நம்பிக்கையில்லை என்றால் தரம் இல்லை என்று அர்த்தம். எந்த அமைச்சர்கள் எம்.எல்.ஏ.,க்கள், கவுன்சிலர்களின் குழந்தைகள் அரசு பள்ளிகளில் படிக்கின்றனர். தரம் இல்லை என்பது அர்த்தம். இலவசம் என்பது அதில் இல்லை. ஆக சிறந்த கல்வியை தரமாக சமமாக சரியாக கொடுக்க வேண்டும். அதுதான் இலவசம். ஆனால் அப்படியில்லை. அதிக பணம் இருந்தால் நல்ல கல்வியையும், பெரிய மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று உயிரை காப்பாற்றலாம் . இல்லை என்றால் சுடுகாட்டுக்கு செல்லலாம் என்ற நிலையை எப்படி சரி என ஏற்க முடியும்.இலவசத்தில் இழக்கும் பணத்தை எப்படி சம்பாதிக்கிறீர்கள். குடும்ப தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, புதுமைப்பெண் திட்டம் , தமிழ்மகன் திட்டங்களுக்கு ஆகும் செலவுக்கு எப்படி ஈடுகட்டப்படுகிறது. படித்த பிறகு வேலை கிடைத்தால் தான் நிரந்தர வறுமை ஒழியும்.இலவச திட்டங்களை நிறுத்திவிட்டு,அதில் மிச்சமாகும் பணத்தின் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்கினால், வறுமை ஒழியும்.

வேலையில்லை

ரூ.10 லட்சம் கோடிகடன் பெற்று சிறப்பாக நிறைவேற்றப்பட்ட திட்டம் ஏதும் உள்ளதா? சிறந்த கல்வி, சிறந்த மருத்துவம், தடையற்ற மின்சாரம், தூயமான குடிநீர், சரியானபோக்குவரத்து ஏதும் உள்ளதா? அனைத்தும் தனியாரிடம் உள்ளது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை விட, தனிஒரு முதலாளியால் சிறந்த கல்வி ,மருத்துவம், பால் , மின்உற்பத்தி என அனைத்தையும் செய்தால் அரசின் வேலை என்ன? இதனை அரசிடம் மாற்ற வேண்டும் என பணியாற்றி வருகிறேன்.டிஎஸ்பி சுந்தரேசன் ஆயிரம் காரணம் சொல்கிறார். இதை கேட்க யாரும் இல்லை. இங்கு நேர்மையாளனுக்கு வேலையில்லை. அதனால் அவருக்கு வேலையில்லை. இவ்வாறு சீமான் கூறினார். தேர்தலுக்கு பிறகு, பெரும்பான்மை கிடைக்காவிட்டால் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு அளிப்பீர்களா என்ற கேள்விக்கு, சீமான், ' இன்னும் 10 மாதம் உள்ளது பொறுத்து இருக்க வேண்டும். ராணுவத்துக்கு ரகசியம் உள்ளது போன்று அனைத்துக்கும் ரகசியம் உள்ளது. என்னிடம் அனைத்தையும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கின்றீர்கள்' என பதிலளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

RAAJ68
ஜூலை 21, 2025 12:50

எவன் அந்த மேலிடம் அப்படின்னு போன வாரம் ஸ்டாலின் திட்டுனீங்க இப்ப எந்த மூஞ்சிய வச்சு நாங்க போறீங்க. அரசியல்வாதிகளுக்கு சூடு சொரணை எதுவும் கிடையாது என்பது எங்களுக்கு தெரியும் இருந்தாலும் வாய் சும்மா இருக்க முடியல.


Durai Kuppusami
ஜூலை 21, 2025 10:27

அந்த ராணுவ ரகசியம் நீட் ரகசியம் மாதிரியா உன்ன நம்பி இருக்கும் தம்பிகளை சொல்லணும். சரி சரி எல்லாம் முடிச்சாச்சு போய் வேலையைப் பாருங்க.....


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 21, 2025 10:15

இதில் என்ன பெரிய இராணுவ இரகசியம் உள்ளது. திமுகவின் சி டீம் இவர். திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டுகளை பிரிக்கும் படி களத்தில் வேட்பாளரை நிறுத்துவதே திமுக இவருக்கு இட்ட பணி. அதை செவ்வனே ஒவ்வொரு தேர்தலிலும் சரியாக செய்து வருகிறார். மேலும் திமுகவின் பிரிவினைக்கு மக்களிடையே அவ்வப்போது பிரிவினை கருத்துக்களை கூறி சிறிது சிறிதாக மக்கள் மனதில் விஷத்தை விதைத்து கொண்டு உள்ளார்.


Kasimani Baskaran
ஜூலை 21, 2025 05:54

பெரும்பான்மை இந்துக்களின் வாக்கை பிரித்து விட்டால் எளிதில் சிறுபான்மை ஓட்டுக்களை வைத்து ஜெயித்துவிடலாம் என்பது திராவிட வியூகம். அதிருப்தியில் இருக்கும் கிறிஸ்தவர்கள் விசை அண்ணாவுக்கு மாஸாக ஓட்டுப்போட்டால் கதை கத்தலாகிவிடும். அநேகமாக விசை அண்ணா கடைசியில் தீம்க்காவிடம் சரணடைய வாய்ப்பு இருக்கிறது.


Prabhu Balasubramaniam
ஜூலை 20, 2025 22:54

ஏன்...குமாரி அனந்தன் அய்யா , தமிழிசை அக்கா உதாரணம் தெரியவில்லையா சைமன்க்கு ?


panneer selvam
ஜூலை 20, 2025 22:17

Personal hatred was started during MGR period but it had explosive growth during Jayalalitha period . Unfortunately Still Dravidian Parties have the suspicious mindset on their followers . Even during parliament corridor , you could witness the peculiar scenes on behavior of DMK and AIADMK members . It is the curse in Tamilnadu .


Pandi Muni
ஜூலை 20, 2025 22:05

இந்துக்களின் வாக்குகளை பிரித்து திராவிட திருடர்களை ஆட்சியில் அமர வைக்க சீமானும் ஜோசப் விஜயும் களமிறங்கி உள்ளனர். தமிழர்களும் குறிப்பாக இந்துக்களும் விழிப்பாய் இல்லையெனில் நம் சந்ததியினர் நிலைமை இப்போதையதை விட மோசமாகிவிடும்


SUBBU,MADURAI
ஜூலை 20, 2025 22:27

இவனை நம்பி பின்னால் போகும் இளைஞர்கள் இவனது முன்னுக்கு பின் முரனான பேச்சுகளை புரிந்து கொள்ள வேண்டும். கொஞ்ச நாளைக்கு முன்பு இதே ஸ்டாலினை கழுவிக் கழுவி ஊற்றியவன் இப்போது அந்த ஸ்டாலினுக்கு எப்படி மசாஜ் செய்கிறான் என்பதை அவனின் அறிவார்ந்த தம்பிகள் புரிந்து கொள்ள வேண்டும்.


Sivasankaran Kannan
ஜூலை 20, 2025 20:58

சீமானை நம்பி ஒரு கூட்டம் இருப்பதால் எல்லோருக்கும் ஒரு தொல்லை .. ஒரு காலத்தில் நானும் இதை நம்பி மயங்கி - பிறகு வெளியில் வந்து விட்டேன்.


தென்காசி ராஜா ராஜா
ஜூலை 20, 2025 20:15

பாம்பும் கீரியும் மா இருந்தால் தான் கொத்தடிமை தொண்டர்கள் வேலை செய்வார்கள் இது ஒரு சைக்காலஜி


M Ramachandran
ஜூலை 20, 2025 20:00

சிந்தனை மற்றும் பேச்சு நன்றாகத்தான் உள்ளது. செயல்முறையில் வந்தால் தான் தெரியும் அவருக்கு ஏற்படும் கஷ்டமும் மக்களுக்கு ஏற்படும் கஷ்டமும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை