UPDATED : ஜூன் 14, 2025 12:11 PM | ADDED : ஜூன் 14, 2025 11:54 AM
புதுடில்லி: ஆமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் 11 ஏ இருக்கையில் அமர்ந்து இருந்த விஸ்வாஸ் குமார் என்பவர் மட்டும் உயிர் தப்பினார். அதேபோல், 1998ம் ஆண்டு நடந்த விமான விபத்திலும், அதே எண் (11ஏ) கொண்ட இருக்கையில் அமர்ந்து இருந்த நபர் உயிர் தப்பி உள்ளார்.குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து, பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு, 230 பயணியர் உட்பட 242 பேருடன் புறப்பட்ட, 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் விமானம் விழுந்து தொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 241 பேர் உயிரிழந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cts8n4w1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆனால் இந்த விபத்தில், '11 ஏ' இருக்கையில் இருந்த பிரிட்டன் குடியுரிமை பெற்ற விஷ்வாஸ் குமார் மட்டும் உயிர் தப்பினார். இதனால் விமானத்தின் இருக்கை '11 ஏ' பேசும் பொருளானது. விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்த நிலையில், இந்த இருக்கையில் அமர்ந்து இருந்தவர் மட்டும் உயிர் தப்பியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.இந்நிலையில், 1998ம் ஆண்டு நடந்த விமான விபத்தில் அதே எண் (11ஏ) கொண்ட இருக்கையில் அமர்ந்து இருந்த நபர் உயிர் தப்பி உள்ளார். அதாவது டிசம்பர் 11ம் தேதி 1998ம் ஆண்டு, தாய்லாந்தில், தாய் ஏர்வேஸ் விமானம் தரையிறங்கும் போது, நிலைதடுமாறி ஒரு சதுப்பு நிலத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 146 பேரில், 101 பேர் உயிரிழந்தனர். 45 பேர் பிழைத்துக் கொண்டனர். அவர்களில், '11 ஏ' இருக்கையில் அமர்ந்து இருந்த தாய்லாந்து பாடகர் ருவாங்சாக் லோய்ச்சுசக்கும் ஒருவர். இந்த தகவலை அன்று விபத்தில் தப்பிய பாடகர் ருவாங்சாக் உறுதி செய்தார். இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:இந்தியாவில் நடந்த விமான விபத்தில் இருந்து உயிர் தப்பியவர் '11 ஏ' இருக்கையில் அமர்ந்து உள்ளார். அதேபோல் நானும் விபத்தில் சிக்கி உயிர் தப்பிய போது அதே இருக்கை எண்ணில் (11ஏ) தான் பயணம் செய்தேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.