உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக போலீசாரின் அணுகுமுறை மிகவும் மோசமாக உள்ளது: வாசுகி 

தமிழக போலீசாரின் அணுகுமுறை மிகவும் மோசமாக உள்ளது: வாசுகி 

தஞ்சாவூர் : “தமிழகத்தில், போலீசாரின் அணுகுமுறை மோசமாக உள்ளது,” என, மா.கம்யூ., அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் வாசுகி தெரிவித்தார்.தஞ்சாவூரில் நேற்று, அவர் அளித்த பேட்டி:நியாயமான விஷயங் களுக்கு போராட்டம் நடத்தி, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வதற்கு கூட, தமிழகத்தில் போலீசார் அனுமதி மறுக்கின்றனர்.

வீட்டுச்சிறை

மக்கள் நடமாட்டம் இல்லாத, குறுகலான இடத்தில் போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடத்திக் கொள்ளுங்கள் எனக் கூறுகின்றனர். இது, எவ்விதத்திலும் நியாயமான நடவடிக்கை இல்லை.மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கும் ஏராளமான கோரிக்கைகளுக்காக, கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த முயற்சிக்கின்றனர். ஆனால், போராட்டத்துக்கு புறப்படும் இடத்திலேயே அவர்கள் கைது செய்யப்படுகின்றனர்; பின், வீட்டு சிறையில் வைக்கப்படுகின்றனர். இப்படிப்பட்ட மோசமான அணுகுமுறை, தமிழக போலீசாரால், சமீபகாலமாக பின்பற்றப்படுகிறது.முதல்வர் ஸ்டாலின், இப்பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதேபோல, கைது செய்யப்படும் போது நன்றாக இருக்கும் கைதிகள், நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும்போது எலும்பு முறிவுடன் செல்கின்றனர். கழிப்பறைக்கு செல்லும்போது அல்லது தப்பியோட முயற்சிக்கும்போது, தடுக்கி விழுந்து கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டதாக சொல்கின்றனர். இது கொஞ்சம் கூட நம்பும்படியாக இல்லை. கைதிகளாக இருந்தாலும், மனித உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.டெல்டாவில் துார்வாரும் பணியை, விவசாயத்துக்காக மேட்டூரில் தண்ணீர் திறக்கப்படுவதற்கு முன்பாகவே முழுமையாக முடிக்க வேண்டும். முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்தின், பரிந்துரைகளை வெளியிடுவதற்கு நீதிமன்றமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுத்து, அதைச் செயல்படுத்த வேண்டும்.

காலவரையறை

ஜாதிவாரி கணக்கெடுப்பை வெறும் கணக்கெடுப்பாக செய்யாமல், சமூகபொருளாதார பின்புலத்துடன் செய்ய வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து, மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தாலும், மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது, எந்த அடிப்படையில் எடுக்கப்படும் என்பது குறித்தும் தகவல் சொல்லி இருக்க வேண்டும். காலவரையறையை நிர்ணயிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

RADHAKRISHNAN
மே 13, 2025 15:45

விடுங்கம்மா என்ன பேசினாலும் நீங்கள் கையேந்திதான் நமது நாட்டில் கட்சி நடத்தவேண்டும்? உண்டியல் பத்திரம்மா பார்த்துக்கங்க


Bhaskaran
மே 13, 2025 14:12

இப்படி பேசி ஸ்வீட் பாக்ஸ் எண்ணிக்கையை குறைத்து கொண்டால் காரத் திட்டுவார்


sunderaman ubi
மே 13, 2025 13:03

She has woken up after 4 years. Where was she in Anna University mattet. May be an attempt to increase the amount payable to Communists during next elections


NATARAJAN R
மே 13, 2025 10:59

காவல்துறை அணுகுமுறை மோசம் என்று சொல்ல முடிந்த உங்களால் அதை கையில் வைத்துள்ள தமிழக அரசு மற்றும் முதல்வருக்கு கண்டணம் தெரிவிக்க தைரியம் இல்லை. இதுவரை தமிழக அரசை எதிர்த்து ஒரு போராட்டம் நடத்தியதுண்டா? கேவலம் 2 சட்ட மன்ற தொகுதிகள் ஒரு நாடாளுமன்ற தொகுதிகளுக்காக தொழிலாளிகளின் தோழன் எனும் நம்பிக்கை கொண்ட ஒரு கட்சி திமுக விடம் அடகு வைத்து விட்டது. மக்கள் இவர்களை புறக்கணித்து பல வருடங்கள் முடிந்தது


Mecca Shivan
மே 13, 2025 09:54

இந்த வாசுகி திரைப்படத்தில் வரும் குடும்ப வில்லி போல ..காரியவாதி


சுந்தரம் விஸ்வநாதன்
மே 13, 2025 09:41

இப்படி எல்லாம் கழக காவல் அணியைப்பத்தி பேசினா அடுத்த வருஷம் 25 சி வராது .குறைஞ்சு போயிடும். பரவாயில்லையா .


senthilanandsankaran
மே 13, 2025 08:49

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் திமுகவின் உறவை முறித்துக் கொள்வதில் நீங்கள் காட்டிய சமரசம்.இன்று வினையாய் வந்துள்ளது...எங்கும் ஊழல், எதிலும் ஊழல்...அரசு அதிகாரிகள் ஊழலை ஒரு ஒருங்கிணைக்கும் புள்ளியாக உருகாகி உள்ளனர். அதற்காக மீண்டும் இவர்கள் வர உதவி செய்வர்.நீங்களும் வெறும் வாய்பந்தல் போட்டு தேர்தல் நேரத்தில் நிதி வாங்கி 5 கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ஆகி ..எதும் பேசாமல் 5 வருடத்தை ஓட்டுவீர்கள். ஊழல் வாழ்க.


புதிய வீடியோ