உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தலில் பா.ஜ., தலைவர் போட்டியிட வேண்டும்

தேர்தலில் பா.ஜ., தலைவர் போட்டியிட வேண்டும்

விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டில்லி எல்லையில் போராடும் விவசாயிகள் மீது, ட்ரோனில் கண்ணீர் புகைகுண்டு வீசியுள்ளனர். இதில், ஒருவர் இறந்துள்ளார். இதை, ஹரியானா நீதிமன்றம் கண்டித்துள்ளது.தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி. அதனால், அரசியலிலும் அவர் நேர்மையாக செயல்படுவார் என மக்கள் நம்பினர். ஆனால், முரண்பாடான அறிக்கை, அவருடைய செயல்பாடுகள் போன்றவற்றால், அவர் மீது மக்கள் ஏமாற்றமும்; அதிருப்தியும் அடைந்துள்ளனர். தமிழகத்தில் பா.ஜ., வளர்ந்து, மிகப்பெரிய எழுச்சி கண்டுள்ளதாக அக்கட்சியினர் கூறுகின்றனர். அப்படியென்றால், வரும் லோக்சபா தேர்தலில் அண்ணாமலை போட்டியிட வேண்டும். அவர் தேர்தலில் வென்று காட்டட்டும். அப்போது தெரியும் பா.ஜ., வளர்ந்துள்ளதா, இல்லையா என்று.நடிகர் விஜய் அரசியல் வருகையின் பின்னணியில் பா.ஜ., இருப்பதாகக் கூறுகின்றனர். யூகத்தின் அடிப்படையில் அப்படி சாயம் பூசி பேசக்கூடாது. துரை வைகோ,முதன்மை செயலர், ம.தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ