உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / படகு தயார்; பம்புசெட்டும் தயார்: கம்பு சுற்றுகிறது சென்னை மாநகராட்சி!

படகு தயார்; பம்புசெட்டும் தயார்: கம்பு சுற்றுகிறது சென்னை மாநகராட்சி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 913 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.தமிழகத்தில் அக்., 18ல் வடகிழக்கு பருவமழை துவங்கக்கூடும் என, வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், வடகிழக்கு பருவ மழைக்கான பேரிடர் ஆயத்த பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில், மழையின் காரணமாக சென்னையில் ஏற்படும் வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாப்பாக மீட்டு வருவதற்கு 36 படகுகள் வாங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்து இருந்தது.

913 மோட்டார் பம்புகள்

இந்நிலையில், இன்று(அக்.,09) வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 913 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தாழ்வான பகுதிகளில் கூடுதல் மோட்டார்களை நிறுவ சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. கன மழை பொழிந்து வெள்ளம் தேங்கினாலும் உடனடியாக அகற்றுவதற்காக, மாநகராட்சி இத்தகைய நடவடிக்கை எடுத்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Lion Drsekar
அக் 09, 2024 19:26

குடிநீர் ஆதாரங்களில் வளர்க்கப்படும் செடிகள், ரோடுகள், குளங்கள் தூர்வாருதல் , மறுத்துவிட்டேன் சென்னைக்கே பிரசித்தி பெற்ற கூவம் இருவரை வாழ்வளிக்கறது , இந்த வரிசையில் இயற்கையின் சீற்றம் இவைகள் இல்லையென்றால் எப்படி டெண்டர் எடுப்பபது, எப்படி போட்ட பணத்தை எடுப்பது, வாழ்க இயற்க்கை, சீற்றம் , தயவு செய்து கைவிட்டுவிடாதே உன்னை நம்பி பல லட்சம் கோடி வீணாகியிரும் வந்தே மாதரம்


என்றும் இந்தியன்
அக் 09, 2024 16:51

அப்போ 100% தெரிந்த உண்மை கடலலை மீது போவது போல டாஸ்மாக்கினாட்டு மாக்கள் போகப்போகின்றார்கள்" என்று முடிவு செய்து விட்டது சென்னை மாநகராட்சி கிறித்துவ பிரியாவின் கீழ் என்று அர்த்தம் கொள்க???எப்படி??? வடிகால்கள் எங்கும் சரி செய்யப்படவில்லை என்று இவ்வளவு பட்டவர்த்தனமாக யாரும் சொல்லவே முடியாது.


குமரி குருவி
அக் 09, 2024 14:35

வடிகால் என்னாச்சு... பல கோடிகள் வீணாச்சா...


SUBRAMANIAN P
அக் 09, 2024 14:16

கீழ்தளத்துல இருக்குறவங்க எல்லாம் மேல் தளத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏற்கனவே சொல்லிட்டோம். அப்புறம் எங்களை குத்தம் சொல்லக்கூடாது. அப்புறம் அரசு அலுவலர்கள், அதிகாரிகள் லீவு எடுத்துக்கொண்டு எங்காவது செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தன்னார்வலர்கள் நிறையபேர்கள் இருக்கிறார்கள். பார்த்துக்கொள்வார்கள்.


Kumar Kumzi
அக் 09, 2024 13:52

மழை பேஞ்சுச்சு வெள்ளம் வந்துச்சு போட்டு வந்து கூட்டிட்டு போச்சு நாலாயிரம் கோடி ஓவா கணக்கு காட்டுச்சு ப்ரியா


கூமூட்டை
அக் 09, 2024 13:41

வாழ்க வளமுடன் ஊழல் வாதிதக்காளி படகு வந்தாச்சா? மோட்டார் வந்தாச்சா? அப்போ மழை வாராது ஊழல் நடக்கும். திருடாதே திரேதா


R.MURALIKRISHNAN
அக் 09, 2024 13:38

40% கமிஸ்ஸன்லே வாங்கின போட்டா இருக்குமோ


R.Subramanian
அக் 09, 2024 12:40

மழை வந்தால் சொட்டு நீர் கூட தேங்காது என்று சொல்லி பல ஆயிரம் கோடிக்கு வடிகால் பணிகளை செய்தார்களே அது என்ன ஆச்சு ? அந்த பணிகளை முறையாக செய்து இருந்தால் படகுகளுக்கு அவசியம் இல்லையே... ஏன் என்ன ஆனது ?


Sivagiri
அக் 09, 2024 12:39

அந்த நாலாயிரம் கோடிக்கு நல்ல கதை வசனம் எழுதி , வணக்கம் போட்ட , மாமான்னா - இனி , நாலாயிரம் விழுங்கிய நாயகர் - அன்று அன்போடு அழைக்க படுவீர் . .


ஆரூர் ரங்
அக் 09, 2024 12:33

பேக்கேஜுக்கு மேல் பேக்கேஜ். மக்களுக்கு இந்த அரசு வேண்டாத கார்பேஜ்.


சமீபத்திய செய்தி