உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொத்தனாரின் நேர்மை; குவிகிறது பாராட்டு!

கொத்தனாரின் நேர்மை; குவிகிறது பாராட்டு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சாலையில் கிடந்த இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த கொத்தனாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.சென்னை புழுதிவாக்கம், ஈஸ்வரன் நகரைச் சேர்ந்தவர் உமாபதி, 54; கொத்தனார். இவர், நேற்று முன்தினம் மாலை 5:30 மணிக்கு, நங்கநல்லுாரில் வேலை முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, கீழே கிடந்த கை பையை எடுத்து பார்த்தபோது, அதில் கட்டு கட்டாக பணம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, தன் மகள் கற்பக வள்ளியை தொடர்பு கொண்டார். அவரது ஆலோசனைப்படி, மடிப்பாக்கம் காவல் நிலையத்திற்கு சென்று, பணத்துடன் கூடிய கை பையை ஒப்படைத்தனர். போலீசார், பையை சோதனையிட்டதில் அதில் 2.05 லட்சம் ரூபாயும் எச்.டி.எப்.சி., வங்கி காசோலையும் இருந்தது. அதில் குறிப்பிட்டிருந்த மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டதில், பையை தவறவிட்டவர், நங்கநல்லுார், ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்த மருத்துவர் கார்த்திகா மீனாட்சி, 37, என்பது தெரிந்தது.அவரை, மடிப்பாக்கம் காவல் நிலையத்திற்கு போலீசார் வரவழைத்து, பணம் மற்றும் காசோலையுடன் கூடிய பையை ஒப்படைத்தனர். பின், இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், உமாபதி மற்றும் அவரது மகளுக்கு சால்வை அணிவித்து, ஏழ்மையிலும் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த நேர்மையை பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

ramchander Artichennai
ஏப் 27, 2025 19:50

வெகுமதி தரலாம் .


ramchander Artichennai
ஏப் 27, 2025 19:47

வறுமைக்கு வாழ்த்துக்கள் மட்டும் போதாது .,aavaruku உரிய சன்மானம் வழங்கி அவர் மகள் படிப்பு செலவுகளை கொடுத்தால் நன்று .


Chandra Sekaran
ஏப் 27, 2025 17:50

உலகில் நியாயம் தர்மம் என்பது, உலகின் கடைசி நல்லதொரு மனிதர் இருக்கும் வரையில் இருக்கத்தான் செய்யும்.


Hidayathbasha Mohamedismail
ஏப் 27, 2025 11:59

மனமார்ந்த nandri


P .subramanian
ஏப் 27, 2025 11:38

நல்ல மனிதர்


sasikumaren
ஏப் 26, 2025 21:29

ஒரு சிலரை பார்க்கும் போது வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று தெரிகிறது அந்த நேர்மையானவருக்கு நலமான வாழ்க்கை அமைய வேண்டும் கடவுளே


V S Narayanan
ஏப் 26, 2025 19:31

சபாஷ்


thewhistle blower1967
ஏப் 26, 2025 18:31

திருட்டு சட்டத்தை இயற்றி மற்றவர்கள் சொத்தை ஆட்டையை போடும் தீய அரசியல் வாதிகள் மத்தியில் இந்த மாதிரி நல்ல மக்கள் வாழுகின்றனர் என்பது யதார்த்தம்..


NALAM VIRUMBI
ஏப் 26, 2025 15:42

இவர் போன்ற நல்லவர்களாலே இவ்வுலகத்தில் தர்மம் தளைக்கிறது. வறுமையிலும் செம்மையை கடைப்பிடிப்போருக்கு இறையருள் எப்பவும் உண்டு.


தூத்துக்குடி கொத்தனார்
ஏப் 26, 2025 15:42

தூத்துக்குடி கொத்தனாரும் இப்படி தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை