உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விடிந்தும் வராத விடியல் பஸ் ஒரே ஒரு நடையுடன் நிறுத்தம்

விடிந்தும் வராத விடியல் பஸ் ஒரே ஒரு நடையுடன் நிறுத்தம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் இருந்து ஏப்., 20ல், 'பி11' என்ற புதிய வழித்தடத்தில் மகளிர் விடியல் புதிய பஸ் சேவையை, தி.மு.க., - எம்.பி., முரசொலி, திருவையாறு எம்.எல்.ஏ., சந்திரசேகரன் உள்ளிட்டோர் கொடியசைத்து துவக்கினர்.இந்த பஸ், ஒரத்த நாட்டில் இருந்து வல்லம் ரோடு, தென்னமநாடு, தெற்குநத்தம், ஆழிவாய்க்கால், பஞ்சநதிக்கோட்டை, கருக்காக்கோட்டை, நாட்டரசன்கோட்டை, கா.தெக்கூர், கா.கோவிலுார், பிளைக்கான்சாவடி, கொல்லங்கரை, வடக்குப்பட்டு, சூரியம்பட்டி, நாஞ்சிக்கோட்டை வழியாக தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்ட் வந்து செல்லும் என, அறிவிக்கப்பட்டது. துவக்க நாளில், பஸ் செல்லும் வழியில் உள்ள கிராமங்களில், மக்கள் பஸ்சுக்கு ஆரத்தி எடுத்தும், டிரைவர், கண்டக்டருக்கு பொன்னாடை போர்த்தி, இனிப்பு வழங்கியும் வரவேற்றனர். துவங்கப் பட்ட ஒருநாள், ஒரு நடை மட்டுமே இந்த பஸ் ஓடியது. மறுநாள் விடிந்து பஸ்சுக்காக காத்திருந்தும், இந்த விடியல் பஸ் வரவில்லை. 15 கிராம மக்கள் பயன்பெற முடியும் என்பதால், பஸ்சை மீண்டும் இயக்க கோரிக்கை எழுந்துள்ளது.எம்.பி., - எம்.எல்.ஏ., துவக்கி வைத்த பஸ் சேவை இப்படி ஆகிவிட்டதே என இருவரையும் பொது மக்கள் தேடிச் சென்று புகார் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Santhana Muthu
ஏப் 30, 2025 16:19

விளம்பரத்திற்காக செய்திருப்பார்கள்


Mohan
ஏப் 30, 2025 12:03

அதுதான் டா விடியல் டெக்கினிக் ஈயம் பூசுனாமாதிரியும் இருக்கணும் பூசாத மாதிரியும் இருக்கணும் .. மக்கள்


எம். ஆர்
ஏப் 30, 2025 09:06

குவாட்டருக்கும் ₹200 உடன் பிரியாணிக்கும் ஆசைப்பட்டு ஓட்டை விற்றால் அவன் இதைத்தான் செய்வான் திராவிட குடும்பத்தை உங்க ஊருக்கு கூட்டி வந்து 1 மணி நேரம் பஸ்க்காக நிற்க சொல்லுங்க பார்ப்போம் அவர் சுவிஸ் பாங்க்கில் உள்ள பணத்தை எண்ணிப் பார்க்க ஏசி காரிலேயே போவார் திருட்டு ரயிலேறி சென்னை வந்த திருவாரூர் திருட்டு குடும்பத்துக்கு அண்ணா அறிவாலையம் எப்படி சொந்தமானது?? இது திராவிட மன்னராட்சியில் மன்னாங்கட்டி அடிமைகளின் கதறல் பாவம் மக்கள்


Kumar Kumzi
ஏப் 30, 2025 08:59

ஓங்கோல் துண்டுசீட்டு கூமுட்ட கோமாளி விடியலின் பாணியில் சொன்னால் வரும் ஆனா வராது


Nava
ஏப் 30, 2025 08:45

இது தான் அண்ணன் சுடாலினின் திராவிட மாடல் விடியாத விடியல் பயணம்


Keshavan.J
ஏப் 30, 2025 11:14

அண்ணன் இல்லை அப்பா ஸ்டாலின்


VENKATASUBRAMANIAN
ஏப் 30, 2025 08:20

இதுதான் திராவிட மாடல்


Karthik
ஏப் 30, 2025 07:51

இப்போ நடப்பது ஒரு "மாதிரி" ஆட்சி. இங்கே ஈயம் பூசினா மாதிரியும் இருக்கும் பூசாதது மாதிரியும் இருக்கும் - அதுதான் மாடல்/மாதிரி ஆட்சி. வருகின்ற 2026 சட்டசபை தேர்தலில் எப்படியும் ஓட்டுக்கு 5000 ரூபாய் குறையாமல் கொடுப்பார்கள் வாங்கிக்கொண்டு அவர்களுக்கே ஓட்டு போடுங்கள் மக்களே.. பிறகு புதிய வழித்தட பேருந்து துவக்க விழா ஒரே ஒரு புகைப்படத்திலும் பிளக்ஸ் பேனரிலும் மட்டுமே இருக்கும்.


ராமகிருஷ்ணன்
ஏப் 30, 2025 07:34

550 டூபாகூர் வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தால் எல்லா வாக்குறுதிகளும் இதே போல சாம்பிள் மாதிரியாக செய்யலாம்


வாய்மையே வெல்லும்
ஏப் 30, 2025 06:50

நாம வாழுகிற வாழ்க்கையில் ஆட்சியாளர்கள் படு மட்டமான மடையர்களை நமக்கு அடைய எம்புட்டு குடுத்து வைச்சிருக்கிறோம் எல்லாம் தலைவிதி. திருட்டு திராவிடம் ஒழிப்பதை தவிர வேறு ஒன்றும் நமக்கில்லை இன்று இலக்கு


கண்ணுச்சாமி
ஏப் 30, 2025 06:42

வர்ர எலக்ஷனில் 2000 ரூவா வாங்கிட்டு இவிங்களுக்கே வாக்களித்து நாசமாப் போங்க.


புதிய வீடியோ