உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக அரசை மத்திய அரசு வஞ்சிக்கவில்லை:தி.மு.க., கருத்து

தமிழக அரசை மத்திய அரசு வஞ்சிக்கவில்லை:தி.மு.க., கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'வெள்ள நிவாரண நிதி வந்து சேரும் என்ற நம்பிக்கை உள்ளது. இதுகுறித்து அளிக்கப்பட்ட காலக் கெடு தாண்டிவிட்டது. என்றாலும், இதை வைத்துக் கொண்டு தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது என்று கூறிவிட முடியாது,'' என்று, தி.மு.க., - எம்.பி., பாலு கூறினார்.பார்லிமென்ட் கூட்டத்தொடர் துவங்குவதை முன்னிட்டு நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற பின், தி.மு.க., - எம்.பி.,பாலு கூறியதாவது:மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கும், அரசியல் சட்டத்திற்கும் எதிராக கவர்னர்கள் நடந்து கொள்கின்றனர். அதுகுறித்து பார்லிமென்ட் கூட்டத்தொடரில் பேசவும், இதற்காக தி.மு.க., சார்பில் கொண்டு வரும் கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அனுமதி தரவும் வேண்டும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=obkw1os1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் கட்டப்படவில்லை. இந்த விஷயத்தில் தமிழகம் புறக்கணிக்கப்படும் நிலையில் அரசு என்ன நினைக்கிறது என்பது குறித்து விவாதிக்க வேண்டும்.புயல் வெள்ளத்தால் தமிழகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அமைச்சர்கள் நேரில் வந்து பார்வையிட்டனர். ஆனாலும், நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. ஜனவரி 27க்குள், நிவாரண நிதி தருவதாக மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதியளித்திருந்தார்.அவ்வாறு அளிக்கப்பட்ட வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. உடனடியாக நிதியை தர வேண்டும். இதை வைத்துக் கொண்டு, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பாக கூற முடியாது. அரசு ஒரு தேதியை குறிப்பிட்டு சொல்லியுள்ளது. அதுவும் உள்துறை அமைச்சர், பொறுப்புள்ள அமைச்சர். அதை தரவில்லை என்றால், அதற்காக அவரை தண்டிக்க முடியாது. தமிழக அரசை மத்திய அரசு வஞ்சிப்பதற்கு எந்த வாய்ப்போ, காரணமோ இருக்கப் போவதில்லை.'நீட்' தேர்வு ரத்து குறித்து ஒவ்வொரு முறையும் பேசுகிறோம். ஆனால், பதில் வரவில்லை. எட்டு நாள் மட்டுமே நடக்கும் பார்லிமென்டின் குறுகிய கால கூட்டத்தொடரில் இது குறித்து விவாதிக்க வாய்ப்பில்லை.தி.மு.க., கூட்டணியில் தொகுதிகளை இறுதி செய்வதற்கு காலக்கெடு நிர்ணயித்து விட முடியாது. இந்த தேதிக்குள் முடித்தாக வேண்டுமென்ற கட்டாயம் ஏதும் இல்லை. எப்படியும் தேர்தலுக்கு முன்பாக அறிவித்து விடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

--- நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

sankaranarayanan
பிப் 01, 2024 00:53

தமிழக அரசை மத்திய அரசு வஞ்சிக்கவில்லையா இது என்ன புதிய குண்டை பாலு போட்டிருக்கிரார் ஒட்டி உறவாட ஆயத்தமா இது பயமா பாசமா நான் அடிக்கிறாப்புலே அடிக்கிறேன் நீ அழறப்புலே அழு என்ற பழமொழியை பின்பற்றுகின்றனர் திராவிட மாடல் செம்மல்கள் உங்களைவிட மத்தியில் உள்ளவர்கள் படித்தவர்கள் சாதுர்யமாகவே எதையும் செய்வார்கள் வரிசையில் உள்ளார் எந்த முதல்வர் எந்த வரிசை என்று எல்லாருக்குமே தெரியுமே சோரனுக்கு அடுத்தது கேசரி அப்பொறம் யார் யார் யார்.


K.Ramakrishnan
ஜன 31, 2024 22:06

மத்திய அரசு வஞ்சிக்கவில்லையா? என்ன சார் இது.. தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிதியை தராதது வஞ்சனை இல்லையா? உ.பி.க்கு தாராளமாக தருகிற போது தமிழ்நாட்டை புறக்கணிப்பதற்கு என்ன பெயர்? மே.வங்க முதல்வர் மம்தா மாதிரி பொங்கி எழ வேண்டாமா? மத்திய அரசை எதிர்த்து பிப்.2ம் தேதி முதல் நானே தர்ணா செய்வேன் என்று மம்தா அறிவித்திருக்கிறார். மாநிலத்துக்கு வரவேண்டிய பாக்கித் தொகையை தரக் கோரி போராடுகிறார். நீங்களோ மயிலிறகால் தடவியது போல பேசுகிறீர்களே... இது நியாயமா? அல்லது ஈடி ரெய்டுக்கு பயமா?


jayvee
ஜன 31, 2024 19:44

அண்ணாமலை சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது..


Bala
ஜன 31, 2024 18:41

திகாரில் சப்பாத்தி சாப்பிட்டு இறப்புதை விட சிலிப்ப செல்லாக இருக்க விரும்புகின்றான் வாழ்த்துகள் .


Kannan
ஜன 31, 2024 18:32

நீ இருக்கும் கூட்டணி அவர்களுடையது இல்லை .அதுவே நீ இருக்கும் கூட்டணியால் தமிழகத்திற்கு பலன் இல்லை .நீட் விலக்கு, க வர்னருடன் மோதல் ,வெல்ல நிவாரண நிதி வராமல் இருப்பது ,உதய நிதி சாதனத்தை எதிர்ப்பு ,ஹிந்தி எதிர்ப்பு போன்றவை மத்திய அரசுடன் மோதிக்கொள்ளும் போக்கு தமிழர்களுக்கு முழுப்பயன் அடையாமல் இருப்பதற்கு காரணம் இந்த விடியா தி மு க அரசே


anbu
ஜன 31, 2024 15:17

ஒட்டு மொத்த திமுகக்காரங்களும் தினம் தினம் உளருவதே வாடிக்கை ஆகி போச்சு b


duruvasar
ஜன 31, 2024 13:52

ஈ டி ஈட்டியயைப்போல் அவ்வளவு கூர்மையானதா? என்னடா இது


sridhar
ஜன 31, 2024 10:54

ஐயா , என்ன மன்னிச்சுடுங்க . ஆடு திருடு போனா மாதிரி கனவு கண்டேன். என்ன ஒன்னும் பண்ணிடாதீங்க .


Saai Sundharamurthy AVK
ஜன 31, 2024 10:35

ஆஹா ! திமுகவில் ஏதோ பிரச்சினை ஆரம்பித்து விட்டது போல் தெரிகிறது. ஆனாலும் மத்திய அரசு இதுவரை தமிழக அரசை வஞ்சிக்கவில்லை என்பது உண்மை. ????


Raa
ஜன 31, 2024 10:27

எங்கயோ யாரோ வசமா சிக்கி இருக்கிறார்கள் போலும்.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ