ஜனவரியில் மாற்றம் நிகழும்
த.வெ.க., ஆட்சி பொறுப்பேற்று, 6 மாதங்கள் தான் ஆகிறது. ஆனால், சட்டம் – ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, மின் தட்டுப்பாடு குறித்து பேசி, மக்கள் வேதனைப்படுகின்றனர். அ.தி.மு.க.,வை ‘மற்றும் பலர்’ என்றெல்லாம் சொல்லி விமர்சித்தனர். ஆனால், பழனிசாமியின் முயற்சியால், த.வெ.க., – எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ், தற்போது கடலுார் சிறையில் உள்ளார். அருள் விக்னேஷ் வழக்கை போலவே, ஈரோடு, த.வெ.க., அமைச்சர் விஜய் பாலாஜி மீதான குற்றச்சாட்டும் கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும்; ஜனவரியில் மாற்றம் நிகழும். மீண்டும் பழனிசாமி, முதல்வராகி, கோட்டையில் கொடி ஏற்றுவார். ‘விசிலும், இரட்டை இலையும் ஒன்றுதான்’ என, அமைச்சர் ஆதவ் சொன்னார். ஆனால், ‘அவர் எடுத்தது யானையும் இல்லை. அடிச்சது ராஜாவும் இல்லை’. பழனிசாமி தான் என்றும் ராஜா. – உதயகுமார் முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,