உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாடகி பி.சுசீலாவுக்கு கலை வித்தகர் விருது வழங்கினார் முதல்வர்

பாடகி பி.சுசீலாவுக்கு கலை வித்தகர் விருது வழங்கினார் முதல்வர்

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பாடகி பி.சுசீலாவுக்கு கலைத்துறை வித்தகர் விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.பாடகி பி.சுசீலா, 70 ஆண்டுக்கும் மேலான தன் இசைப்பயணத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் பாடி சாதனை படைத்தவர். அவருக்கும், கவிஞர் மு.மேத்தாவுக்கும் 'கருணாநிதி கலைத்துறை வித்தகர் விருது' வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.இன்று (அக்.,04) சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கப்பட்டன. குடும்பத்துடன் வந்த பாடகி பி.சுசீலாவுக்கு கலைத்துறை வித்தகர் விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்கி அவரிடம் உரையாடினார். விருதுடன் ரூ.10 லட்சம் ரொக்கமும், நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், கவிஞர் மு.மேத்தாவுக்கும் முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கி கவுரவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

sankaranarayanan
அக் 04, 2024 12:50

எங்கே வாரிசு துணை முதல்வரை க்காணோமே


xyzabc
அக் 04, 2024 12:44

உதய் விருது எப்ப வரும் ?


Matt P
அக் 04, 2024 12:30

காலில் விழுவது தனமானத்துக்கு இழுக்கு என்று கட்சியை ஆரம்பிச்சாங்க. இப்போ யார் யாரோ இவர் காலில் விழுறாங்க. அதையெல்லாம் சிரிச்சு சந்தோசமா ஏற்றுக்கொள்கிறார. இவரும் ,முதமந்திரி தான் யார் காலிலும் விழுந்திருக்க மாட்டார். அப்படிப்பட்ட குடும்பம் அது. பி.சுஷீலா அவர்கள் காலில் விழுந்து ஆசி வாங்கியிடுக்கலாமெ அவருடைய திறமைக்காக .


சமீபத்திய செய்தி