உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இ.பி.எஸ்.,க்கு வஞ்சப்புகழ்ச்சியில் நன்றி கூறிய முதல்வர்!

இ.பி.எஸ்.,க்கு வஞ்சப்புகழ்ச்சியில் நன்றி கூறிய முதல்வர்!

சென்னை: 'அமித்ஷாவிடம் இரு மொழிக் கொள்கையை வலியுறுத்தியதற்கு இ.பி.எஸ்.,க்கு நன்றி. அடுத்த முறை டில்லி செல்லும் போது வக்பு வாரிய திருத்தம் பற்றிப் பேச வேண்டும்' என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.வக்பு திருத்த சட்ட திருத்தத்திற்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானத்துக்கு அ.தி.மு.க., பா.ம.க., ஆதரவு தெரிவித்தன. இது குறித்து சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: வக்பு வாரிய திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, தனி தீர்மானத்தை கொண்டு வந்தேன். இங்கு எல்லா கட்சி சார்பில், அந்தந்த கட்சி உறுப்பினர்கள், தலைவர்கள், அதாவது பா.ஜ., வை தவிர, எல்லாரும் வரவேற்று இருக்கிறார்கள். அதற்காக நான் முதலில் எல்லோருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.அதேநேரத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்க கூடிய அ.தி.மு.க.,விடம் நான் வைக்கும் ஒரு கோரிக்கை. நேற்று முன்தினம் இதே அவையில் இருமொழி கொள்கை பற்றி பேசும் போது, ஒன்றை சொன்னேன். எதிர்க்கட்சி தலைவர் டில்லிக்கு சென்று இருக்கிறார். யாரை சந்திக்க போகிறார் என்ற செய்தியும் வந்து இருக்கிறது என சொன்னேன். டில்லியில் நிருபர்கள் கேட்டதற்கு, நான் யாரையும் சந்திக்க வரவில்லை. எந்த அரசியல் நிலையிலும் வரவில்லை. எங்களுடைய கட்சி அலுவலகத்தை பார்வைவிட வந்து இருக்கிறேன் என இ.பி.எஸ்., சொன்னார். மாலையில் பார்த்தால் கார் மாறி, மாறி சென்று உள்துறை அமைச்சரை சந்தித்து இருக்கிறார். சந்திக்கட்டும். சந்திப்பது தவறு என்று சொல்லவில்லை. அதே நேரத்தில் அங்க போய், தமிழகத்துக்கு வேண்டிய உரிமை மற்றும் இருமொழி கொள்கை பற்றி பேசி இருக்கிறேன் என சென்னை வந்து இறங்கிய பிறகு நிருபரிடம் சொல்லி இருக்கிறார்.அதற்காக இந்த அவையின் சார்பில் அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நன்றி தெரிவிக்கும் அதேநேரத்தில் எப்படி இருமொழி கொள்கை பற்றி வலியுறுத்தி வந்துள்ளேன் என்று சொன்னாரோ, அதேபோல் இந்த பிரச்னையையும் அவர் அடுத்த முறை டில்லி செல்லும் போது வலியுறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.பின்னர் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

S.L.Narasimman
மார் 27, 2025 20:23

மாநில அரசின் பிரச்சீனைகளைப்பற்றி மத்திய அரசிடம் எடப்பாடியார் பேச வேண்டுமென்றால் நீங்க எதற்கு முதல்மந்திரி சீட்டில் வெட்கமில்லாமல் உட்கார்ந்து இருக்க வேண்டும்.


Oviya vijay
மார் 27, 2025 19:05

எவரோ வந்தேறி எல்லா இடமும் அவனுகளுக்கு சொந்தம் அப்படின்னு ஒரு மசோதா.பேசாம அறிவாலயம்,cit நகர் அப்படின்னு எல்லாத்தையும் அவங்களுக்கு கொடுத்து மாடல் இந்தியாவுக்கே புரட்சி முன்மாதிரி ஆகலாமே


Velan Iyengaar, Sydney
மார் 27, 2025 19:02

என்னது வஞ்ச புகழ்ச்சியா? துண்டு சீட்டு அவ்ளோ எல்லாம் ஒர்த் இல்ல. அதுக்கு அர்த்தமாவது தெரியுமா?


M Ramachandran
மார் 27, 2025 17:21

வயிறு எரியுது.எப்படியாவது மக்களை யேமாற்றி எதிர் கட்சியை ஒத்துமையில்லாட்டி வெகு சுலபமாக தட்டி விடலாம் மென்று பார்த்தல் ஒன்னு சேர்த்துட்டங்கையா. கொஞ்சம் வைத்தால் புளி கரைக்குது. இனி சீமானயை நம்ம வழிக்கு கொண்டு வர முடியாது. நம்ம விஜய் தான் நமக்கு நாமே திட்டம் போட்டிருக்கோமே அது ஒர்க் அவுட் ஆகுதா பார்ப்போம்.


Rajasekar Jayaraman
மார் 27, 2025 16:29

வஞ்ச புகழ்ச்சி அல்ல வயிறு எரிச்சல்.


Madras Madra
மார் 27, 2025 14:52

வக்ப் வாரியத்தில் என்ன அடாவடி நடந்தாலும் பரவாயில்லை எவ்ளோ ஊழல் நடந்தாலும் பரவாயில்லை எங்களுக்கும் எங்க வோட்டு தான் முக்கியம் தொடர்ந்து தமிழக சட்ட சபை திராவிட அரசியல் பலன்களுக்காக மட்டும் நடந்து கொண்டு இருக்கிறது அக்கிரமம் அடித்து விரட்ட பட வேண்டிய ஒரு அரசாங்கம்


SRITHAR MADHAVAN
மார் 27, 2025 13:47

அப்பா ப்ளீஸ் போங்கப்பா டெல்லிக்கு, ஈபிஎஸ் வேண்டாம்


N Sasikumar Yadhav
மார் 27, 2025 13:38

ஓட்டுப்பிச்சைக்காக ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு மட்டும் ஆதரவாக இருக்கும் திராவிட மாடலை இந்துக்கள் புறக்கணிக்காதவரை நன்மை எதுவும் இந்துக்களுக்கு மட்டும் நடக்க வாய்ப்பில்லை .


Siva Balan
மார் 27, 2025 13:38

பேசாமல் ராஜினாமா செய்துவிட்டு இபிஎஸ்சை முதல்வராக்கி விடலாமே. கையாலாகாத முதல்வர்..... திரானியற்ற துணை முதல்வர்.


ulaganathan murugesan
மார் 27, 2025 14:30

அவரு எடுபிடிய கலாய்க்கராரு... இது கூட தெரியாம... இதுக்கு கூட தெரியாம முட்டு குடுக்குறீங்க? உங்க கடமை உணர்ச்சிக்கு முட்டுக்கு அளவே இல்லையாடா?


Nallavan
மார் 27, 2025 13:23

அட நாராயண என்னத்த சொல்றது, இவனுக ஏன்தான் இங்கு வந்தணுவோலோ, கைர்பர், போலன் கனவாய் வழியாக வரும்பொழுது இவனுகள திருப்பி அனுப்பி இருந்தால் இப்படி தமிழுக்கு எதிரா பேசமாட்டானுக .