உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  முதல்வர் கருத்து நகைப்புக்குரியது

 முதல்வர் கருத்து நகைப்புக்குரியது

மாநில உரிமைகளின் பாதுகாவலர்களாக தன்னை காட்டிக் கொள்ளும் முன்பு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையை முதல்வர் ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமையான கூட்டாட்சி அமைப்பு அல்ல; கூட்டாட்சி போன்ற ஒரு அமைப்பு. இந்த அமைப்பில் கவர்னர் போன்ற அதி முக்கியமான அரசியல் அமைப்பு பதவிகள், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளை நிறைவேற்ற தேவைப்படுகின்றன. உச்ச நீதிமன்றத்தின் முழு அமர்வால் வழங்கப்படும் ஆலோசனைகள் 'அதி முக்கியத்துவம் வாய்ந்தவை' என்பது சட்டம் அறிந்த அனை வருக்கும் தெரியும். கவர்னருக்கான அதிகாரம் குறித்த வழக்கில் முதல்வர் ஸ்டாலின் சொல்வது நகைப்புக்குரியது. கவர்னருக்கு எதிரான முதல்வர் கருத்து, மாநில அரசின் உரிமைகளை பாதுகாப்பதற்காக அல்ல; சுயலாபத்துக்காக. உச்ச நீதிமன்றம் சொல்லாத கருத்துகளை சொல்வதன் வாயிலாக, மீண்டும் துணைவேந்தர் பதவிக்கான ஏலத்தை கொண்டு வர முதல்வர் ஸ்டாலின் துடிக்கிறார். - அஸ்வத்தாமன் செயலர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !