உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் பேச்சில் உருப்படியானது இல்லை

முதல்வர் பேச்சில் உருப்படியானது இல்லை

சென்னை, கொளத்துார் தொகுதியில், 30,000 ஓட்டுகள் போலியானவை என, முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். ராகுல் சொல்வது உண்மை என்றால், அனுராக் தாகூர் சொல்வதும் உண்மை தான் என்பதை, முதல்வர் ஸ்டாலின் ஒப்புக் கொள்வாரா? துாய்மை பணியாளர்களை துன்புறுத்திவிட்டு, அவர்களுக்கு சலுகைகளை வழங்குவது ஏமாற்று வேலை. சுதந்திர தின விழாவில், முதல்வர் பேச்சில் உருப்படியான விஷயங்கள் எதுவும் இல்லை. மாற்றுத் திறனாளிகளுக்கு, இத்தனை ஆண்டுகளாக ஏன் எதையும் செய்யவில்லை. அடுத்த ஆண்டு தேர்தல் வருவதால், இந்த விஷயங்கள் குறித்து பேசுகிறார். தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்று விடும் என்று, அந்த கூட்டணி யினர் தான் கூறுகின்றனர். மக்கள் என்ன நினைக்கின்றனர் என்று, அவர்களை சந்தித்து தெரிந்து கொள்ள வேண்டும். -குஷ்பு, துணைத் தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ