உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காங்., சார்பில் படம் திறப்பு முதல்வர் பங்கேற்க முடிவு

காங்., சார்பில் படம் திறப்பு முதல்வர் பங்கேற்க முடிவு

சென்னை:தமிழக காங்கிரஸ் நடத்த உள்ள, மன்மோகன் சிங், இளங்கோவன் படம் திறப்பு மற்றும் புகழ் அஞ்சலி கூட்டத்தில் பங்கேற்க, முதல்வர் ஸ்டாலின் சம்மதம் தெரிவித்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவை ஒட்டி, ஒரு வாரம் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என, மத்திய அரசு அறிவித்தது. ஒரு வாரம் முடிவதற்கு முன்பாகவே, அரசு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றது, காங்கிரசில் விமர்சன பொருளாகியது. இந்நிலையில், மன்மோகன் சிங், இளங்கோவன் படம் திறப்பு நிகழ்ச்சியை சத்தியமூர்த்தி பவனில் நடத்தவும், அதில் முதல்வர் ஸ்டாலினை பங்கேற்க வைக்கவும் ஆலோசிக்கப்பட்டது.அதன்பின், தொண்டர்கள் அதிகம் வருவர் என்பதால், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில், வரும் 7ம்தேதி படத்திறப்பு விழா மற்றும் புகழ் அஞ்சலி கூட்டம் நடத்த, தமிழக காங்., முடிவு செய்துள்ளது. இதில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின், காங்., மேலிட பொறுப்பாளர்கள் அஜோய் குமார், சூரஜ் ஹெக்டே மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி