உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தை இனி நிரந்தரமாக ஆளப்போவது தி.மு.க., தான்

தமிழகத்தை இனி நிரந்தரமாக ஆளப்போவது தி.மு.க., தான்

திருப்பத்துார்: ''தமிழகத்தை இனிமேல் தி.மு.க., தான் நிரந்தரமாக ஆட்சி செய்யும் இறுமாப்புடன் இதை கூறுகிறேன்,'' என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.திருப்பத்துார் அடுத்த மண்டலவாடியில் நடந்த அரசு விழாவில், பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 273.83 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை, ஒரு லட்சத்து 168 பயனாளிகளுக்கு வழங்கியும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழக மக்களை மதத்தால், ஜாதியால் பிளவுபடுத்த, பா.ஜ., தொடர்ந்து முயற்சித்து வருகிறது. பா.ஜ.,வும், அ.தி.மு.க.,வும் மக்களை பற்றி கவலைப்படாமல், மதத்திற்காக கவலைப்படுகின்றனர். இது தான் அவர்களுடைய அரசியல்.மதவாத அரசியல்'மிஸ்டு கால்' கொடுத்தும் கட்சியை வளர்க்க முடியாமல் போனவர்கள், தங்களின் அரசியல் லாபத்திற்காக கடவுள் பெயரை, 'மிஸ் யூஸ்' செய்து கொண்டிருக்கின்றனர்.இவர்களின் போலி பக்தியை, அரசியல் நாடகத்தை, இங்கு யாரும் ஏற்க மாட்டார்கள். தமிழகம், ஈ.வெ.ராமசாமி உருவாக்கிய மண், அண்ணாதுரை வளர்த்த மண், கருணாநிதி மீட்ட மண். தமிழகத்தில் அனைத்து மதத்தினரும், தங்கள் உரிமையோடும், பிற மதத்தினரோடும், நல்லிணக்கத்தோடும் வாழும் மண்.கடந்த நான்கு ஆண்டில் தமிழகத்தில் 3,000 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டு, 84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சர்ச், மசூதிகளை புனரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தான் நம் தி.மு.க., அரசு. இதை எல்லாம் பார்த்து தான், மதவாத அரசியல் செய்கிறவர்களுக்கு பற்றி எரிகிறது. அவர்களால் தமிழகத்திற்கு செய்த வளர்ச்சியை பற்றி பேச முடியவில்லை; மக்களிடம் ஓட்டு கேட்க முடியவில்லை. செய்திருந்தால் தானே சொல்ல முடியும். அடமானம்தமிழகத்தில் ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்த படாதபாடு படுகின்றனர். அவர்களுக்கு நான் சொல்லி கொள்வது, இந்த மண், ஈ.வெ.ரா., அண்ணாதுரையால் மேன்மை படுத்தப்பட்ட மண், கருணாநிதியால் வளர்க்கப்பட்ட மண்.இப்படிபட்ட தலைவர்களை, நீங்கள் கொச்சைப்படுத்தி வீடியோ போடுகிறீர்கள், அதை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது, அண்ணாதுரை பெயரில் கட்சி நடத்தும் கூட்டம். அண்ணாதுரை பெயரையே, அவர்கள் அடமானம் வைத்து விட்டனர். இன்றைக்கு கட்சியை அடமானம் வைத்திருப்பவர்கள், நாளைக்கு தமிழகத்தை அடமானம் வைக்க அனுமதிக்கக்கூடாது.தன்மானமுள்ள தமிழக மக்கள், இந்த மண்ணுக்கு எதிராக பின்னப்படும் சதி வலைகளின் நோக்கத்தை புரிந்து, தமிழினத்திற்கு எதிரானவர்களுக்கும், எதிரிகளுக்கும், துணை போகும் துரோகிகளுக்கும் ஒருசேர பாடம் புகட்ட வேண்டும். தமிழகத்தை நிரந்தரமாக ஆளப்போவது தி.மு.க.,வே.இவ்வாறு அவர் பேசினார்.

அ.தி.மு.க.,வை பா.ஜ., விழுங்கும்!

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி:அ.தி.மு.க., - பா.ஜ.,வுடன் கூட்டணியில் இருப்பதால், அந்த கூட்டணியை வீழ்த்த வேண்டிய தேவை எங்களுக்கு இருக்கிறது. இந்த கூட்டணியில் அ.தி.மு.க., அமைதியாக இருக்கிறது; பா.ஜ., சுறுசுறுப்பாக செயல்படுகிறது. அ.தி.மு.க.,வை விழுங்குவது தான் பா.ஜ.,வின் திட்டம்.முருக பக்தர்கள் மாநாட்டில், ஈ.வெ.ரா., அண்ணாதுரையை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்டு உள்ளனர். இப்படிபட்டவர்களுடன் அ.தி.மு.க., எப்படி பயணிக்க முடியும்? எனவே, பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., பயணிப்பது தற்கொலைக்கு சமமானது.நடிகர் கமல் தி.மு.க.,வுடன் வந்து விட்டார். அவரின் துவக்க அரசியல் பேச்சுக்கும், இப்போது பேசுவதற்கும் நிறைய மாற்றங்கள் உள்ளன.மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில், ஈ.வெ.ரா., அண்ணாதுரையை விமர்சித்து வீடியோ வெளியானது குறித்து, நடிகர் விஜய் எதிர்த்து கருத்து தெரிவித்திருக்க வேண்டும். ஈ.வெ.ரா.,வை விமர்சித்த பின்னும் அமைதி காக்கும் விஜய், உண்மையிலேயே அவரை உள்வாங்கிக் கொண்டாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

பெரிய ராசு
ஜூன் 27, 2025 14:48

இன்னோருக்க இவனுக வந்த தமிழ்நாட்டை அந்த எம்பெருமான் பரமசிவனாலும் காப்பாற்றமுடியாது ,,


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 27, 2025 14:38

அப்பா நீங்க சொல்லற வசனம் இந்த அண்ணன் தம்பி பத்தாயிரம் கோடி வக்கீல் நோட்டீசு விஷயத்தை மறைக்கறதுக்குத்தானே


Sridhar
ஜூன் 27, 2025 13:02

இல்லை. கருணாநிதி பேமிலி thaan


Rajah
ஜூன் 27, 2025 12:10

எந்த மதத்தையும் எதிர்க்காதவர்கள் இந்துக்கள். ஆனால் என்று வெடிகுண்டு கலாச்சாரம், மதமாற்றம் இந்தியாவில் ஆரம்பமானதோ அன்றே இந்துக்கள் தங்களை பாதுகாக்க தயாராகிவிட்டார்கள். தங்கள் மத்ததை பாதுகாப்பது மதவாதம் ஆகாது. இந்துக்களை மதமாற்றுவதுதான் மதவாதம். ஒரு கிராமமே வேற்று மதத்திற்கு மாறிய சம்பவங்களும் இருக்கிறது. பள்ளிவாசல் மற்றும் கிறிஸ்தவ தேவலாயங்களில்தான் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகின்றது. அதுதான் மதவாதம். நாங்கள் போட்ட பிச்சக்காய்தான் இன்று திமுக ஆட்சியில் இருக்கிறது ஒரு பாதிரி சொன்னதுதான் மதவாதம். தமிழகத்தில் உள்ள இந்தக் கோயில்களில் சாத்தான்கள் குடியிருக்கின்றது என்று சொன்னதுதான் மதவாதம். இந்து மதத்தை கேலி செய்வதுதான் மதவாதம்.


Rajah
ஜூன் 27, 2025 11:55

நீங்கள் சொல்வதை பார்த்தல் இன்னும் 10 வருடங்களுக் பின்னர் தமிழ் நாட்டில் இந்துக்கள் இருக்க மாட்டார்கள் என்று நம்புகின்றேன். பாகிஸ்தான் அல்லது இத்தாலியோடு தமிழகத்தை இணைத்து விடுவீர்களா ள்ளது தனித்து நிரந்தரமாக ஆளப்போகின்றீர்களா? திராவிட நாடு என்று தமிழகத்தின் பெயரையும் மாற்றி விடுங்கள்.


Ramesh Babu
ஜூன் 27, 2025 11:24

ஐயோ, இவரை என்ன தான் சொல்வது. தமிழகத்தை உருவாக்கியது இந்த மூன்று பேர் என்கிறார். அண்ணாதுரை ஐயா அவர்கள் சரி. மற்ற இருவரையும் சகிக்க இயலவில்லை. எனில் இவர் பள்ளிக்கூடம் பக்கமே சென்றதில்லை என்பது நன்றாகவே தெரிகிறது. தமிழகத்தை உருவாக்கிய மற்றும் செதுக்கிய தலைவர்கள் எண்ணற்ற பேர் இதில் ஈ.வே.ரா அவர்களை சேர்ப்பது இந்த மண்ணின் சாபக்கேடோ என்னவோ இந்த பதிவு அவர் மீது உள்ள வெறுப்பு அல்ல. இன்றைய சூழலைக் கண்டு வேதனை


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 27, 2025 14:12

இந்த மண், ஈ.வெ.ரா., அண்ணாதுரையால் மேன்மை படுத்தப்பட்ட மண், கருணாநிதியால் வளர்க்கப்பட்ட மண் ..அதே மண் கடைசியில் தமிழன் வாயில் போடப்பட்டமண் ... தமிழன் தன் தலையில் தானே வாரி போட்டுக்கொண்ட மண் ..தமிழர்களின் வாழ்வை மண்ணாக்கிய மண் ,,,


ஆ.செந்தில்குமார், முழு நேர சங்கி
ஜூன் 27, 2025 11:20

தமிழகத்தை இனிமேல் தி.மு.க., தான் நிரந்தரமாக கொள்ளை அடிக்கும் என்று இறுமாப்புடன் இதை கூறுகிறேன், என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


Anand
ஜூன் 27, 2025 11:09

ஜெயிலிலிருந்தா?


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 27, 2025 09:37

அப்போ நம்ம குன்றிய நாட்டில் பாட்டிலுக்கு பத்து ருபா பெர்மனெண்ட் ஆயிடுச்சுன்னு சொல்றீங்களா அப்பா?


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 27, 2025 09:59

மது குடிக்க மாட்டேன் பிடிவாதம் செய்பவர்களுக்கு தனி பயிற்சி கொடுக்கப்பட்டு .. முழு திறனார்களாக டாஸ்மாக் அனுப்பப்படுவார்கள் .. தினம்தோறும் அவர்கள் ஒழுங்காக குடிக்கிறார்களா என்று கண்காணிக்க படலாம்


vbs manian
ஜூன் 27, 2025 09:34

தமிழகத்தை தமிழ் மக்களை அந்த பரம்பொருள் காப்பாற்றட்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை