திராவிட மாடல் தோல்வியடைந்த மாடல்
மாநிலங்களில் வருவாய் உபரி ஈட்டியது தொடர்பாக, இந்திய தலைமை கணக்காயர் அலுவலகம் மேற்கொண்ட ஆய்வில், உ.பி., முதலிடமும், தமிழகம், 27-வது இடமும் பிடித்திருக்கிறது. அதாவது, 28 மாநிலங்களில் கடைசி இடத்துக்கு, முந்தைய இடத்தை தமிழகம் பிடித்திருக்கிறது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள், மாநிலத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு நிதியை பயன்படுத்தாமல், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. கடந்த, 2022 - -2023ல் உ.பி., உபரி வருவாயாக 37,000 கோடி ரூபாயும், குஜராத் 19,865 கோடி ரூபாயும் ஏற்படுத்தி, முன்னணியில் உள்ளன. ஆனால், தமிழகம் 36,215 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறையில் உள்ளது. திராவிட மாடல், தோல்வியடைந்த மாடல். பொது வெளியில் பொய் பேசும் தி.மு.க.,அரசு, பா.ஜ., ஆளும் உ.பி., குஜராத் போன்ற மாநிலங்களைப் பார்த்து, கற்றுக்கொள்ள வேண்டும். - முருகானந்தம் பொதுச்செயலர், தமிழக பா.ஜ.,