உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனிடம் அமலாக்கத்துறை விசாரணை!

அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனிடம் அமலாக்கத்துறை விசாரணை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். தி.மு.க., அமைச்சரவையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக நேரு இருந்து வருகிறார். சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமைச்சர் நேரு, அவரது சகோதரர்கள், சகோதரி மற்றும் மகன் வீடு, அலுவலகம் என, 15க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.நேருவின் சகோதரர்கள் மற்றும் அவரது மகன் பங்குதாரர்களாக உள்ள டி.வி.எச்., குழுமம், கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருகிறது. காற்றாலை மின் உற்பத்தியிலும் நேருவின் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர்.இந்நிறுவனங்களின் முக்கிய நிர்வாகிகளாக, நேருவின் மகன் அருண், சகோதரர்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகியோர் உள்ளனர்.இவர்களது நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பணம் வரவு செலவு தொடர்பான விவகாரங்களில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதை அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளது.நேற்று நடத்தப்பட்ட சோதனை முடிவில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள், அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனை அழைத்து சென்றனர்.தங்களிடம் உள்ள ஆவணங்கள், விசாரணையில் கண்டறியப்பட்ட தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ரவிச்சந்திரனிடம் நேரடி விசாரணை நடத்தினர். இந்த விசாரணை, 5 மணி நேரம் நீடித்தது. இதன் முடிவில், ரவிச்சந்திரன் வீடு திரும்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

Kasimani Baskaran
ஏப் 09, 2025 04:06

முன்னரே தெரிந்திருந்தால் செ பாவின் சகோதரனை மறைத்து வைத்தது போல இவனையும் மறைத்து வைத்து இருப்பார்கள். தெனாவெட்டு மிகுந்து இருக்கும் இன்னும் சிலரை தூக்கினால் கூட்டணிக்கு தீம்க்கா ஒத்துவந்துவிடும். சின்னவரை மறைத்து வைத்து இருப்பதாக செய்தி ஒன்று கூட உலவுகிறது.


Perumal Pillai
ஏப் 08, 2025 20:35

"இந்த விசாரணை, 5 மணி நேரம் நீடித்தது. இதன் முடிவில், ரவிச்சந்திரன் வீடு திரும்பினார்". பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு . இது எல்லாம் ஒரு பூச்சாண்டி காட்டும் விஷயம் .ஒன்றும் நடக்காது . மக்களை கோமாளிகள் என நினைக்கிறார்கள் .


மீனவ நண்பன்
ஏப் 08, 2025 20:15

நாலும் நாலும் எத்தனை என்று கேட்டால் மூணு என்று சொல்ற வரைக்கும் வெளுத்து கட்டுங்க


இந்தியன்
ஏப் 08, 2025 20:03

எங்கப்பா,Oviya Vijay கருத்து சொல்ல வரவில்லை...இதற்கும் முட்டு கொடுக்க வேண்டியது தானே...கொள்கையில்லா மன மாறிகள்...


Rangarajan Cv
ஏப் 09, 2025 10:46

Only one statement will be recorded by oviya irrespective of the issue- opposition is very weak, bjp will be decimated and dmk will form the govt.


sankaranarayanan
ஏப் 08, 2025 18:32

இப்படியே திராவிட மாடல் அரசில் உள்ள ஒவ்வொரு அமைச்சருக்கு பின்னால் அவர்களுடைய குடும்ப கூட்டமே செழிப்பான செல்வத்தில் இந்த ஆட்சியில் தலை சிறந்து விளங்குகின்றன ஆனால் மக்கள் நேர் மாறாக ஏழ்மையைத்தான் அடைந்தவர்களாக இருக்கிறார்கள் அமைச்சர்களின் ஊழல்களின் பட்டியல் என்று ஒன்றை விரைவிலேயே மக்களுக்கு வெளியிடலாம்


M S RAGHUNATHAN
ஏப் 08, 2025 18:19

ஸ்டாலின் அவர்களுக்கு உள்ளூர மகிழ்ச்சி. நேருவின் சிறகுகள் வெட்டிவிட்டார்கள். செந்தில் பாலாஜியின் தம்பியை காவல் துறை இன்னமும் கண்டு பிடிக்க முயலவில்லை/முடியவில்லை. ஆனால் நேருவின் சகோதரரை ED அழைத்து சென்றுவிட்டனர். காவல் துறை கண்டு கொள்ள வில்லை.


Venkateswaran Rajaram
ஏப் 08, 2025 18:13

திருட்டு திராவிட குடும்ப முன்னேற்ற கழகம்


Amar Akbar Antony
ஏப் 08, 2025 18:00

அமலாக்கத்துறை எங்கே தவறு நடக்கிறதாக கொஞ்சம் ஆதாரம் கிடைத்தாலே போதும் அவர்கள் வந்துவிடுவார்கள். தமிழ்நாட்டில் அதிகம் தவறு நடக்கிறதோ?


Suppan
ஏப் 08, 2025 18:44

இங்க விடியலார் ஆட்சி இருப்பதால் கொஞ்சம் கூட தயக்கமின்றி விளையாடுகிறார்கள். சேபாவின் சகோதரர் இரண்டு வருடங்களுக்கு மேலாக "தலைமறைவாக" இருப்பதால் அவரை நம்ம ஸ்காட்லாந்து யார்டை மிஞ்சும் காவல்துறையால் பிடிக்கமுடியவில்லையாம். நம்புங்க


Murugesan
ஏப் 08, 2025 17:58

உச்ச நீதிமன்றம் இடைக்கால நிவாரணமாக தடை விதிக்கும், திராவிட நீதிபதிகள்


Easwar Kamal
ஏப் 08, 2025 17:34

உள்ள வச்சு லாடம் கட்டுங்க. இவர் குடும்பம் திருச்சி மட்டும் இல்லாமல் சென்னை அமெரிக்கா என்று பறந்து விரிந்து உள்ளது. மற்றொருத்தர் வேலவன் இந்த ரெண்டு பெரும் விடியலுக்கு வலது மற்றும் இடது கைகள். மற்றவர்கள் எல்லாம் ஒன்றும் இல்லை. இந்த இருவரையும் வாழைத்தாலே போதும் விடியல் ஆட்டம் கண்டு விடும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை