உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதே இலக்கு: திருமாவளவன் பேச்சு

ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதே இலக்கு: திருமாவளவன் பேச்சு

விழுப்புரம்; கோட்டையில் ஒருநாள் கொடியேற்றுவோம் என்பது நமது கனவு, ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது நமது இலக்கு என திருமாவளவன் பேசினார்.

விழுப்புரத்தில் நடந்த வி.சி., தேர்தல் வெற்றி விழா பொதுக் கூட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது:

நடிகர்கள் கட்சி தொடங்கும் போதெல்லாம், வி.சி., பாதிப்பு என கூறி வந்தார்கள். விஜயகாந்த் கட்சி தொடங்கும் போதும் அப்படி சொன்னார்கள். ஆனால், அதனை கடந்து வி.சி.,நீடித்து வருகிறது. யார் கட்சி தொடங்கினாலும் வி.சி., எதுவும் செய்ய முடியாது. சினிமா கவர்ச்சியின் மூலம் இந்த இயக்கத்தைச் சேர்ந்த யாரையும் திசை மாற்ற முடியாது.25 ஆண்டு காலமாக, ஒரு பட்டாளத்தை வி.சி.,அதே வேகத்தில் வைத்துக்கொண்டுள்ளது. எந்த சரிவும் வீழ்ச்சியும் இல்லை. 25 ஆண்டுகள் கடந்து கட்சி தாக்குப் பிடிப்பதே சாதனை, வெற்றி. தி.மு.க., அ.தி.மு.க.,வோடு இணைந்துள்ளதால் தான் வெற்றி என சிலர் ஏளனம் பேசுகின்றனர். பா.ம.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., போன்ற கட்சிகளும், தங்கள் செல்வாக்கை நிரூபித்து தான் கூட்டணியில் இணைந்துள்ளது.ஆனால், ஆண்ட கட்சிகளே வி.சி.,கூட்டணிக்கு வேண்டும் என விரும்பும் நிலைக்கு நாம் உறுதியாக இருக்கிறோம். தற்போது ஒரு நடிகர், தேர்தலிலும் நிற்கவில்லை, போட்டியிடவில்லை, ஆனால் அடுத்த முதல்வர் அவர்தான் என பேசுகின்றனர். ஆனால், நான் தொடக்கத்தில் ஏராளமான ஓட்டுகள் பெற்றபோது என்னை பற்றி யாரும் பேசவில்லை. நாம் வாக்கு வங்கியை தனியாக நிரூபிக்காததால், பெரிய அரசியல் கட்சியினர், நம் செல்வாக்கை வைத்து 10 தொகுதிக்குள் தான் ஒதுக்குகின்றனர். கடந்த 2006ம் ஆண்டு தான், நாம் தேர்தல் கட்சியாக பதிவு செய்யப்பட்டது. எங்களுக்கு கொள்கைதான் பெரிது என்பதால் குறைந்த தொகுதியை வாங்குகிறோம். தமிழக மக்கள் நலனுக்காக, வகுப்புவாத சக்திகள் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்பதற்காகவே நாங்கள் தொடர்கிறோம். கோட்டையில் ஒருநாள் கொடியேற்றுவோம் என்பது நமது கனவு. ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது நமது இலக்கு. இவ்வாறு திருமாவளவன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 58 )

Narayanan
மார் 24, 2025 15:01

இந்த 25 ஆண்டுகளின் கட்சிசாதனை என்று பார்த்தால் பூஜ்யம்தான் . எந்த நோக்கத்திற்காக கட்சி தொடங்கினாரோ அந்த இனம் முன்னேறவும் இல்லை . வளரவும் இல்லை . ஆனால் இவரின் சொத்து, உடல் எல்லாம் பெருத்துவிட்டது. அவர் கோடீஸ்வரன் ஆனதுதான் கட்சி கண்ட பலன், ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று சொல்லி திமுகவை மிரட்டுகிறார் .


Mani . V
மார் 18, 2025 05:02

அதுதான் கோபாலபுரத்தில் சாக்கடை அடைப்பை நீக்கும் மொத்த வேலையும் கொடுத்துள்ளார்களே, அப்புறம் என்ன பங்கு வேண்டி இருக்கிறது? ஆமா, நீ இன்னுமா இருக்கிறாய்?


அன்பு
மார் 18, 2025 04:28

இவனொருத்தன் இடையிடையே வருகிற விளம்பரம் மாதிரி. ஆனால் சுடலை கதை வசனம் இயக்கம். இவன் நடிப்பு.


HoneyBee
மார் 17, 2025 16:21

பாவம் அவருக்கு யாராவது பிஸ்கெட் போடுங்க.. வெயில் அதிகமாக உள்ளதால் மண்டை குழம்பி போய் விட்டது...


வீரபாண்டி,அலங்காநல்லூர்
மார் 17, 2025 17:26

இன்னமும் வகுப்புவாதம், மூட்டுவாதம்,முடக்குவாதம் என்று சொல்லி தலித் மக்களை ஏமாற்றிப் பிழைக்க வேண்டாம் அந்த அப்பாவி தலித் மக்கள் இந்த பித்தலாட்ட ஏமாற்று அரசியலை கண்டு கொண்டார்கள் முன்பு போல் மதத்தை வைத்து அரசியல் செய்தால் திருமாவை தலித் மக்கள் புறக்கணித்து விடுவார்கள். அதை இந்த திருமாவுக்கு யாராவது எடுத்து சொல்லுங்கள்


Yes your honor
மார் 17, 2025 16:04

என்னம்மா அங்க சத்தம்.... சும்மா பேசிகிட்டு இருந்தேன் மாமா. வடிவேலு வடிவேலுதான் எல்லா சிட்வேஷனுக்கும் காமெடி செய்து வைத்திருக்கிறார்.


தமிழ்
மார் 17, 2025 15:14

விசிகா திருமா மற்றும் பாமக ராம்தாஸ் இருவருக்கும் இடையே சரியான போட்டி, சந்தர்ப்பவாத சுய நல அரசியல் வாதி நம்பர் ஒன்று யாரென்பதில்.


M Ramachandran
மார் 17, 2025 14:32

துனுவு வேண்டும் திருமா? இந்த போராட்டத்திற்கு முன் நின்றுருக்க வேண்டும். மனதில் ஆசை செயல் படுத்த பழைய நட்பு ஒன் sided இடம் கொடுக்க வில்லை.


Narayanan
மார் 17, 2025 14:30

கட்சியின் உயர்வை திருமால்வளவன் பேசக்கூடாது. தனித்து நின்று பிணைத்தொகையை திரும்பப் பெறட்டும் பின்னர் நாம் அதை ஒரு கட்சியாக சொல்லலாம். அதுவரை அடுத்தவன் தோளில் அமர்ந்து வித்தைக்காட்டவேண்டாம். திமுகவிடம் இருந்து பணம் பறிக்கவே இப்போது அதிகாரத்தில் பங்கு ஆட்சியில் பங்கு என்று பிதற்றுகிறார். இந்த வேண்டாத பொதியை கழட்டிவிட திமுக தயார் ஆகவேண்டும்


திருட்டு திராவிடன்
மார் 17, 2025 13:48

ஒரு பிரயோஜனம் இல்லை. அங்கு பெட்டி கிடைத்ததும் வாயை கப்சிப் என்று மூடிக்கொள்வார். இடியட்


JaiRam
மார் 17, 2025 13:22

அமிர்தாப்-ற்கு கோபம் வந்துவிட்டது இனி ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லியாக வேண்டும் 200 ரூபாய் உ பி எஸ்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை