அ.தி.மு.க., தலைவிக்குத்தான் நான்கு ஆண்டுகள் தண்டனை
தி.மு.க., ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டதாக, பழனிசாமி கூறியுள்ளார். அவருடைய கட்சி ஆட்சியில் ஊழல் நடந்தபோது உலகமே காரி துப்பியது. அவரது தலைவிக்கு நான்கு ஆண்டுகள் தண்டனை தரப்பட்டது. பழனிசாமியை முதல்வராக்கிய சசிகலா, சிறை தண்டனை அனுபவித்து, வெளியே வந்து விட்டார். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் சிலர் ஊழல் வழக்கில், சிறைத் தண்டனை அனுபவித்துள்ளனர்; சிலர் மேல்முறையீடு செய்துள்ளனர். பழனிசாமி எங்களை பார்த்து ஒரு விரல் நீட்டினால், மற்ற மூன்று விரல்கள் அவரை பார்த்து நீளுமே என்பதை மறந்து விட்டார். தி.மு.க., ஆட்சியில் ஊழல் நடந்திருந்தால், தைரியமாக வழக்குகள் தொடரட்டும். லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கைகள், விஜயபாஸ்கர், வேலுமணி, பழனிசாமி என, அனைவரின் மீதும் வந்து கொண்டிருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்டப் பிடியிலிருந்து தப்பி விடக் கூடாது என்பதற்காக, நிதானமாக விசாரணை நடத்தப்படுகிறது. - ஆர்.எஸ்.பாரதி,அமைப்புச் செயலர், தி.மு.க.,