உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தாழ்வு பகுதியாக வலுவிழந்தது

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தாழ்வு பகுதியாக வலுவிழந்தது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை,: ' வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்ததாக சென்னை வானிலை மையம் அறிவித்துளளது. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும்' என, மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி அதிகபட்சமாக, சேலம் மாவட்டம் சந்தியூரில் 8 செ.மீ., மழை பெய்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம், கொடுமுடியாறு, ஊத்து, திருச்சி மாவட்டம் நந்தியாறில் தலா 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு, ஆந்திரா கடலோர பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், நேற்று முன்தினம் மாலை 5:30 மணயளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.அது தற்போது, காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துளளது. சென்னைக்கு கிழக்கே, 480 கி.மீ., துாரத்திலும், ஒடிசாவின் கோபல்பூருக்கு தெற்கே, 590 கி.மீ., துாரத்திலும் நிலைகொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி மெதுவாக நகர்ந்து, அதன்பின், கடலில் படிப்படியாக மேலும் வலுவிழக்கும்.இதனால், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.நாளை முதல், 26ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம். அதிகாலையில் ஒரு சில பகுதிகளில் லேசான பனி மூட்டம் காணப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Rafiq Ahamed
டிச 22, 2024 13:58

என்னை வாழ வைக்காத சென்னை எப்படி போனால் எனக்கென்ன


தமிழ்வேள்
டிச 22, 2024 13:52

தனுஷ்கோடி பாதிக்கப்பட்ட 60 ஆம் ஆண்டு... தற்போது பதவியில் இருப்பது திருட்டு திராவிடம் என்பதால் வேறு ஒரு பெரும் பேரழிவு எதிர்பார்க்கப்படுகிறது


sundarsvpr
டிச 22, 2024 10:50

வானிலை அறிக்கையை பார்க்கும்போது அவ்வப்போது மத்திய அரசை வசைபாடும் ஸ்டாலின்தான் நினைவிற்கு வருகிறது.


தமிழன்
டிச 22, 2024 09:19

அப்போ தமிழ்நாட்டுக்கு கனமழை கண்ஃப்பர்ம்


RAAJ68
டிச 22, 2024 07:42

லேசா லேசா எல்லாமே லேசா தான்... எதையும் நம்ப முடியாது


புதிய வீடியோ