உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் ராம்சார் தளம் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு; எந்த இடத்தில் இருக்கு தெரியுமா?

தமிழகத்தில் ராம்சார் தளம் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு; எந்த இடத்தில் இருக்கு தெரியுமா?

சென்னை: தமிழகத்தில் உள்ள 'ராம்சார்' தளங்களின் எண்ணிக்கை, 20 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தங்கல் மற்றும் சக்கரக்கோட்டை பறவைகள் சரணாலயங்கள் ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்டுள்ளன.சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்கள், ராம்சார் தளங்களாக அறிவிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் முக்கியத்துவம், உயிரியல் பன்முகத்தன்மை வாய்ந்த சதுப்பு நிலங்கள் இவ்வாறு தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுகின்றன.சதுப்பு நிலங்களை பாதுகாத்து பராமரிப்பது தொடர்பான சர்வதேச ஒப்பந்தம், 1971ம் ஆண்டு கையெழுத்தான ஈரான் நாட்டின் ராம்சார் நகரம் நினைவாக இந்த பெயர் சூட்டப்படுகிறது.தற்போது, புதிதாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தங்கல் மற்றும் சக்கரக்கோட்டை பறவைகள் சரணாலயங்கள் ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல், ஜார்க்கண்ட் உத்வா ஏரி, சிக்கிம் ஹேச்ரோ பள்ளி பகுதியும் ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில், நாடு முழுவதும் ராம்சார் தளங்கள் எண்ணிக்கை 93 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இந்த எண்ணிக்கை 18ல் இருந்து 20 ஆக உயர்ந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், ''தமிழகத்தில் மேலும் 2 இடங்கள் ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்த ராம்சார் தளங்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது' என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 20 ராம்சார் தளம் விவரம் பின்வருமாறு:

1. நாகப்பட்டினம் மாவட்டம், பாயிண்ட் கலிமேர் வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயம்2. ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா கடல் உயிர்க்கோள காப்பகம்3. கன்னியாகுமரி மாவட்டம், வேம்பன்னூர் சதுப்பு நில வளாகம்4. ஈரோடு மாவட்டம், வெள்ளோடு பறவைகள் சரணாலயம்5. திருவாரூர் மாவட்டம், உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம்6. செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்7. திருநெல்வேலி மாவட்டம், கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்8. செங்கல்பட்டு மாவட்டம், கரிகிலி பறவைகள் சரணாலயம்9. சென்னை மாவட்டம், பள்ளிக்கரணை மார்ஷ் காப்புக்காடு10. கடலூர் மாவட்டம், பிச்சாவரம் மாங்குரோவ்11. ராமநாதபுரம் மாவட்டம், காஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம்12. ராமநாதபுரம் மாவட்டம், சித்திரங்குடி பறவைகள் சரணாலயம்13. கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் தேரூர் சதுப்பு நில வளாகம்14. திருவாரூர் மாவட்டம், வடுவூர் பறவைகள் சரணாலயம்15. அரியலூர் மாவட்டம், கரைவெட்டி பறவைகள் சரணாலயம்16. நீலகிரி மாவட்டம், லாங்வுட் ஷோலா ரிசர்வ் காடு17. திருப்பூர் மாவட்டம், நஞ்சராயன் பறவைகள் காப்பகம்18. விழுப்புரம் மாவட்டம், கழுவேலி பறவைகள் காப்பகம்19. ராமநாதபுரம் மாவட்டம், தேர்தங்கல் பறவைகள் சரணாலயம்20. ராமநாதபுரம் மாவட்டம், சக்கரக்கோட்டை பறவைகள் சரணாலயம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

கிஜன்
பிப் 03, 2025 00:51

மிக்க மகிழ்ச்சி .... சதுப்பு நிலங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படவேண்டும் ..... ராம்சார் என்பது ஈரானில் உள்ள ஒரு நகரம் .... அங்கு தான் முன்பு சதுப்புநில பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது .... அதன் தொடர்ச்சியாக சதுப்புநிலங்கள் உள்ளஇடங்கள் ராம்சார் தளங்கள் என குறிப்பிடப்படுகின்றன ....


Sampath Kumar
பிப் 02, 2025 16:36

அது என்ன ராம் சார் தளம் பறவைகள் சரணாலயம் என்று தானே இருந்தது இதிலும் மத சாயல ???? பார்த்து வரும் பறவைக்கு தெரிந்தால் ஓடி விட்ட போகிறது


Muthu Mib
பிப் 02, 2025 22:47

It's " Ramsar" a place in Iran.were first wetland conference held in 1977. so it named as Ramsar wetland site.


முக்கிய வீடியோ