மேலும் செய்திகள்
' மாஜி ' யின் பணத்தை சீட்டாடி தொலைத்த உதவியாளர்!
09-Sep-2025
திருப்பத்துார்: திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன், 50; விவசாயி. இவரது, 20 வயது மகன் கல்லுாரியில் படிக்கிறார். இவரும், திருப்பத்துாரை சேர்ந்த, 17, வயது மாணவியும் காதலித்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த லோகநாதன்,நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவியை, லோகநாதன் வழிமறித்து, 'இனி என் மகனுடன் பேசக்கூடாது' எனக்கூறி, கன்னத்தில், 'பளார்' என அறைந்தார். வீடு திரும்பிய மாணவி, சம்பவத்தை, தன் பெற்றோரிடம் கூறினார். மேலும், திருப்பத்துார் டவுன் போலீசில் புகார் அளித்தார். போலீசார், லோகநாதனை கைது செய்து விசாரிக்கின்றனர்.
09-Sep-2025