உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கச்சத்தீவு மீட்பு மட்டுமே: முதல்வர் ஸ்டாலின்

மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கச்சத்தீவு மீட்பு மட்டுமே: முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வுக்கு ஒரே வழி கச்சத்தீவை மீட்பது மட்டுமே, '' என பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: கச்சத்தீவை மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இலங்கை அரசிடம் பேசி சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் மீட்க வேண்டும்.இது தொடர்பாக தமிழக சட்டசபையில் 2ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களை மீட்டு வரும்படி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு 530 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 3 மாதத்தில் 147 மீனவர்களை கைது செய்யப்பட்டு உள்ளனர். மாநில அரசின் அனுமதியின்றி கச்சத்தீவு ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்து போட்டது. கடந்த 1974 ம் ஆண்டு இதற்கு எதிராக கருணாநிதி தீர்மானம் போட்டார். அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி கண்டன தீர்மானம் நிறைவேற்றினார். மத்திய அரசின் முடிவை எதிர்த்து 1974 ஆக.,21ல் சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.1991, 2013, 2014ம் ஆண்டுகளிலும் தமிழக சட்டசபையில் இதேபோன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு ஒரே வழி கச்சத்தீவை மீட்பது மட்டுமே. இந்திய இலங்கை ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்து கச்சத்தீவை மீட்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 57 )

venugopal s
ஏப் 04, 2025 11:29

ஐம்பது வருடங்களுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் திமுக தவறு செய்ததாகவே இருக்கட்டும், தமிழக மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் அதை பாஜக இப்போது சரி செய்து தமிழக மக்களிடம் நல்ல பெயர் எடுத்துக் கொள்ளலாமே? எது தடுக்கிறது?


அப்பாவி
ஏப் 04, 2025 10:13

பத்து வருசத்தில் இந்திய பொருளாதாரத்தை டபுள் ஆக்கியவருக்கு இதெல்லாம் ஜுஜுபி...


anonymous
ஏப் 04, 2025 09:13

இலங்கையை இந்தியாவுடன் இணைத்து இன்பநிதியை இலங்கை பிரசிடெண்ட் ஆக்கி இந்திய பணத்தில் அவர்களது கடனை அடைத்து சோறும் போடலாம்.


vinoth kumar
ஏப் 04, 2025 06:48

கட்ச தீவை அடகு வச்ச ரசீதை , நீங்களும் ராகுலும் சேர்ந்து கண்டு பிடிச்சு குடுங்க , கட்ச தீவை மீட்டுடலாம்.


essemm
ஏப் 04, 2025 04:49

கட்ச தீவை உங்க சுயநலத்திற்காக தாரைவார்ப்பேங்க. அப்புறம் வேற ஒரு அரசு மீது பழி போட்டு. எங்க தமிழக மீனவர்களின். வாழ்வுக்கும். உயிருக்கும் உத்திரவாதம் வேண்டும் என்று மத்திய அரசை விமர்சிப்பதே உங்க பொழப்பா போச்சு இல்லையா? அன்றைக்கு காங்கிரஸ் கூட சேர்ந்து தீவையே விற்று காசு பார்த்த அப்பொழுதைய மதிய மாநிலராசுங்களுக்கு தெரியலையா என்ன. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமும் உயிரும். அப்போ உங்கப்பா என்ன பண்ணிக்கோண்டிருந்தார். தமிழ் தமிழ், தமிழக மக்கள் என்று இன்னும் எத்தனை காலம் தான் எங்களை முட்டாலாக்குவீர்கள். எங்களுக்கும் அரசியல் தெரியும். மிஸ்டர் ஸ்டாலின். நாங்களும் இன்று நேற்று பிறந்தவர்கள் அல்ல. நாங்க 60 கிட்ஸ்ங்களுக்கும். உங்க திராவிட ஆட்சி உங்கப்பா கருணாநிதியிலிருந்து பார்த்தவர்கள் தான். ஒரு இனத்தையே கிட்டத்தட்ட 1.500000, லட்சம் மக்களை கொன்றுக்குவித்த இந்த திராவிட கட்சியை மக்கள் தூக்கி ஏரியாவேண்டிய காலம் வெகு தூரத்தில் இல்லை. நீங்களும் உங்க வாரிசும் பதவியில் இருப்பதார்க்கும் கொள்ளையாடிப்பதார்க்கும். tamil நாட்டு மக்களை. நன்றாகவே பயன் படுத்தறீங்கப்பா. ஆப்பு வந்திருச்சு.


ram
ஏப் 04, 2025 04:02

என்னா உங்களோட பித்தலாட்ட அரசியல்... அதெப்படி முதல்வரே இப்படியெல்லாம் உங்க ஒருவராலே மட்டும் தான் பேசமுடியும் கொஞ்சம் கூட யோசிக்காமே...


naadodi
ஏப் 04, 2025 03:08

ஸ்டாலின் அவர்களே மக்களவையில் தேஜஸ்வி சூர்யா வின் பேச்சை கொஞ்சம் கேளுங்கள். காங்கிரஸ் தி.மு.க வுடன் கூட்டணி இருந்தபோது தாரை வார்க்கப் பட்டது தான் கச்சத்தீவு. அரசியல் சாசன விதி 1 and 2 இரண்டையும் பின்பற்றாது காங்கிரஸ் கையாண்ட முறைகேடான செயல். இப்போ நீர் கூவி என்ன பயன்? முன்னால் முதல்வர் உம தந்தை தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிறகு பிள்ளையையும் கிள்ளிவிடுவதில் கில்லாடி. அவர் செய்த தந்திரம் தான் மாநில அவையில் தீர்மானம். நீவிரும் அதையே பின்பற்றுகிறீர். தயை கூர்ந்து மத்திய அரசுடன் கைகோர்த்து இதை நேர் செய்யின் உம்மை தமிழகம் வாழ்த்தும். இல்லையேல் அனைவருக்கும் தெரியும் உம தந்தையின் வண்டவாளம், எதிர்க்கட்சிகள் இதை விஸ்வரூபம் எடுத்து உம்மைக் கிழிக்கும்.


இராம தாசன்
ஏப் 04, 2025 02:03

1974 வருடம் கொடுத்து 50 வருடம் நினைவு வருகிறது - அதனால் தீர்மானம். வரலாற்றில் நமது பெயரும் இடம் பெற அல்லவா அல்லவா? நாளை இவர்களும் வாய்ப்பு கிடைத்தால் தீர்மானம் நிறைவேற்றுவார்கள்


Bhakt
ஏப் 04, 2025 01:26

சென்னைல நிறைய எடத்துல ரோடுகள் எல்லாம் குண்டு குழியுமா இருக்கு. நிறைய தெருக்களில் இன்னும் மண் சொட்டு தான். இதெல்லாம் சரி பண்ணுங்க நைனா. Do not worry Naina, கச்சத்தீவை வித்த ரசீது கிடைச்சதும் அதை மீட்டுடலாம் நைனா.


Sathyan
ஏப் 04, 2025 01:17

திமுக விற்க்கு ஓட்டு போடும் ஒவ்வொரு தமிழனையும் ...


புதிய வீடியோ