வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ஒரு சிலருக்கு சாபத்திற்கு விமோஷனமே இல்லை Let us Wait & see.
கோயில்களில் அர்ச்சகர்களுக்கு லஞ்சம்/தட்சணை அளித்தால் சிறப்பு தரிசனம் சிறப்பு தீபாராதனை கிடைக்கிறது என்றால் ஊழலை ஒழிப்பது எப்போது.
மதுரை: மதுரையில் தண்டாயுதபாணி கோயில் அர்ச்சகர்கள் தட்டி விழும் காணிக்கைகளை உண்டியலில் செலுத்த வேண்டும் என்ற உத்தரவு , ஹிந்து அமைப்புகளின் எதிர்ப்பால் திரும்ப பெறப்பட்டது.மதுரை நேதாஜி ரோட்டில் தண்டாயுதபாணி கோயில் உள்ளது. அறநிலையத்துறையின்கீழ் உள்ள இக்கோயிலின் நிர்வாக அதிகாரியாக இருப்பவர் அங்கயற்கண்ணி. பிப். 7 காலை அர்ச்சகர்கள் முத்து ராமன், வீரபாகு ஆகியோர் பூஜை செய்து தீபாராதனை காட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தீபாராதனை தட்டில் பக்தர்கள் செலுத்தும் கட்டணத்தை கோயில் உண்டியலில் செலுத்துமாறு அங்கயற்கண்ணி தெரிவித்தார். இதுதொடர்பாக பக்தர்கள் முன்னிலையில் வாக்குவாதம் ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து தட்டு காணிக்கையை உண்டியலில் செலுத்த வேண்டும் என எழுத்துப்பூர்வமாக உத்தரவிட்டார். இதற்கு ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நேற்று அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது. இதுதொடர்பாக அங்கயற்கண்ணியிடம் மண்டல இணைகமிஷனர் செல்லத்துரை விளக்கம் கேட்டுள்ளார்.
செல்லத்துரை தெரிவித்துள்ளதாவது:
இக்கோயில் அர்ச்சகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படுவதால் ஆரம்ப காலத்திலிருந்து பக்தர்கள் அளிக்கும் தட்டு காணிக்கைகள் கோயில் கணக்கில் வரவு வைக்கப்படும் வழக்கம் நடைமுறையில் இருந்துவருகிறது. இருப்பினும் கோயில் நிர்வாக அதிகாரியால் தட்டு காணிக்கை தொடர்பாக பிறப்பித்த உத்தரவு அவராலேயே திரும்ப பெறப்பட்டுள்ளது. தக்காரிடம் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக உத்தரவு பிறப்பித்தது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
ஒரு சிலருக்கு சாபத்திற்கு விமோஷனமே இல்லை Let us Wait & see.
கோயில்களில் அர்ச்சகர்களுக்கு லஞ்சம்/தட்சணை அளித்தால் சிறப்பு தரிசனம் சிறப்பு தீபாராதனை கிடைக்கிறது என்றால் ஊழலை ஒழிப்பது எப்போது.