உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்சி துவங்கியதுமே முதல்வர் ஆசை கூடாது

கட்சி துவங்கியதுமே முதல்வர் ஆசை கூடாது

அ.தி.மு.க.,வை சிதைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகிறவர்களோடு கைகோர்த்துள்ளார் செங்கோட்டையன். அப்படிப்பட்டவரை கட்சியில் எப்படி வைத்திருக்க முடியும்? அதனால் தான், பொதுச்செயலர் பழனிசாமி, அவரை கட்சியில் இருந்து நீக்கி இருக்கிறார். புதிய கட்சி துவங்கியதும், உடனே முதல்வர் ஆக வேண்டும் என சிலர் நினைக்கின்றனர். அது சரியான அணுகுமுறை அல்ல. மக்களுக்கு தொண்டாற்றி, படிப்படியாகத்தான் உயர்ந்த இடத்துக்கு வர வேண்டும்; அப்படி நடந்தால் தான் அது நிலைக்கும். நடிகர்கள் சிவாஜி, பாக்யராஜ் போன்று எத்தனையோ பேர் புதிதாக கட்சி துவங்கினர். அவர்களால், கட்சி துவங்கி நீண்ட காலத்துக்கு நடத்த முடியவில்லை; இது வரலாறு. ஆனால், அந்த வரலாறுகளை எல்லாம் உடைத்து, தொடர்ந்து இயங்கி கொண்டிருக்கும் ஒரே கட்சி அ.தி.மு.க., மட்டும் தான். - வைகைச்செல்வன் முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை