உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்சி ஆரம்பிச்சு ஒன்னுமே இல்ல... அதுக்குள்ள X,Y,Z பிரிவு பாதுகாப்பு; சீமான் பாய்ச்சல்

கட்சி ஆரம்பிச்சு ஒன்னுமே இல்ல... அதுக்குள்ள X,Y,Z பிரிவு பாதுகாப்பு; சீமான் பாய்ச்சல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''கட்சி ஆரம்பிச்சு ஒன்னுமே இல்ல. அதுக்குள்ள X,Y,Z பிரிவு பாதுகாப்பு'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.சென்னையில் நடந்த காமராஜர் பிறந்தநாள் விழாவில், சீமான் பேசியதாவது: கட்சி ஆரம்பிச்சு ஒன்னுமே இல்ல, X,Y,Z பிரிவு பாதுகாப்பு. ஏய் சிரிக்காதீங்க. சத்தியத்தின் மகன் நான் சத்தியம் தான் பேசுவேன். ஒன்னுமே இல்லாத எல்லா பயலுக்கும் z,y பிரிவு பாதுகாப்பு. அப்படி துப்பாக்கி, இப்படி துப்பாக்கி. நாட்டின் முதல்வர் வண்டி போய் கொண்டு இருக்கிறது. வண்டிக்கு முன் அபாய சங்கு ஊதிக்கொண்டு பைலட் வாகனம் செல்கிறது. அதைப் பார்த்ததும் நிறுத்தச் சொல்கிறார் காமராஜர்.

நம்ப முடிகிறதா

ஏய் நான் என்ன பாகிஸ்தானிலா போகிறேன். சொந்த நாட்டில் போவதற்கு ஏன் Y பாதுகாப்பு. தண்ட செலவு, போலீஸ் ஸ்டேஷனில் வண்டியை நிறுத்துங்கள் என கூறினார். இப்படி ஒரு தலைவன் வாழ்ந்தார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஒரு தலைவன் வாழ்ந்தான். இன்னொரு தலைவன் வாழ்வான். அவருடைய பேரன் சீமான் தான் வாழ்வான். வேறு யாராலும் முடியாது.

உயிருக்கு பயந்தால்....

என்னிடம் உங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கிறது, பாதுகாப்பு என்று கேட்பார்கள், நாட்டிற்கே நான் தான் பாதுகாப்பு, எனக்கு என்ன பாதுகாப்பு. ஒரு தலைவன் தனது உயிருக்கு பயந்தால், அவன் எப்படி மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பான். உயிருக்கு பயப்படும் கோழை எப்படி நாட்டிற்கு தலைவன் ஆக முடியும். நாட்டிற்கும், மக்களுக்காகவும் உயிரை கொடுக்க, துணிந்து இருப்பவன் தான் தலைவனாக இருக்க முடியும்.

ஒரு ஓட்டு...

அப்படி இருந்த தலைவன், காமராஜர் தான். வேறு யார் இருக்கா, எவ்வளவு நாட்கள் ஆனாலும் அவர் புகழை பாடி கொண்டே இருக்கலாம். இதை பேசுவதனால் என் சொந்தக்காரன் எல்லாம் எனக்கு ஓட்டு போட்டுரு என்று பேசவில்லை. ஒரு ஓட்டு எவனாவது போட்டியா? இந்தியாவிலேயே ஒரு அரசியல் தலைவன் சொந்த ஜாதியால் நிராகரிக்கப்பட்ட ஒரே மகன் நான் ஒருவன் மட்டும் தான் இருக்கேன்.

தமிழக அரசியல்

யாருமே போடாமல் 36 லட்சத்தி 50 ஆயிரம் ஓட்டை பெற்று 3வது கட்சியாக வந்து நிற்கும் ஒரே மகன், இந்த தமிழக அரசியல் வரலாற்றில் நான் தான் இருக்கேன். என்னை யாரையும் கூப்பிட மாட்டார்கள். காமராஜர் என்கிற ஒரு தலைவன் நாடார் ஜாதிக்கு என்று எண்ணுவது போன்று அவரை சிறுமைப்படுத்துவது உலகத்தில் ஒன்றுமில்லை. எந்த கொம்பனும் அவர் திறந்த பள்ளியில் படித்தவர்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது. அப்துல் கலாம் வந்து படித்து விஞ்ஞானி ஆகி என்று பேசி கொண்டு இருக்கிறோம். அது காமராஜர் திறந்த பள்ளிக்கூடம் தான். இவ்வாறு சீமான் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

V.Mohan
ஜூலை 28, 2025 16:36

சீமான் பேசும் முறை முரடாக இருக்குதே தவிர, பேசும் கருத்து உண்மை,சரியானது, தேவையானது. விடியல் கூட்டணி ஆளுங்க திமுகவை பேக்ரவுண்டாக வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்தறவங்க. ஊழல் தான் அவங்களை இணைக்கும் தொப்புள் கொடி.. காண்டிராக்ட் எடுப்பது, கனிம வளங்கள் கொள்ளை அடிப்பது, பஸ்களில் விதவித கொள்ளை, மாபெரும் டாஸ்மாக் கொள்ளை, இந்து அறநிலையத்துறை மூலம் கொள்ளை, கல்வித்தந்தைகள் கொள்ளை, கண்டுக்காமல் இருக்கும் போதை கொள்ளைஇந்த விதமாக ஊழல் கொள்ளை மூலம் சம்பாதிக்க அனுமதிக்கும் திமுகவை தூக்கிப்போட தமிழ் நாட்டு ஜனங்களுக்கு மனசு வரமாட்டேங்குது. ஊழல் வேண்டாம்னு நினைக்கிற தமிழக வாக்காளர்கள்- இந்த ஊழல் அடிவருடிகளால் - பல விதங்களில் சிக்கிகிட்டு அவர்களை எதிர்க்க இயலாமல், அவர்கள் சொல்லும் ஊழல்வழிகளை செய்ய நேரிடுகிறது. தமிழன் தங்களது சொந்த விஷயங்களுக்காக இந்த திமுக காரர்களிடம் அடிபணிய வேண்டி இருப்பதால் நேர்மையை இழந்து, நேர்மையான சீமான், அண்ணாமலை போன்றவர்களை தவிர்க்கிறார்கள். ஒரு கலங்கரை விளக்கம் போன்று நேர்மையால் வெற்றிகரமாக வலம் வரும் பிரதமர் மோடி அவர்களைப்பார்த்து இவர்களுக்கு கண்மண் தெரியாமல் ஆங்காரம் வருகிறது. கன்னா பின்னாவென்று நக்கல் கமெண்ட் அடிக்கின்றனர். கிடைக்குற கேப்புல எல்லாம். திட்டித் தீர்க்கின்றனர். உங்க விடியல் சொத்து தலைவர் மாதிரி தானே மோடியும், பொது ஜனங்க ஒட்டுகளை வாங்கி மெஜாரிட்டி நிரூபிச்சு ஆட்சியை நடத்துறாங்க உங்க சொல்படி கேட்க அவங்களுக்கு என்ன தலையெழுத்து?


INDIAN Kumar
ஜூலை 28, 2025 16:34

அணைத்து கட்சிகளும் தனியாக நின்றால் தான் உண்மையான பலம் தெரிய வரும் . சீமானுக்கு உள்ள தைரியம் வேறு யாருக்கு இருக்கிறது இங்கு அதை பாராட்ட தானே செய்வேண்டும்


Anand
ஜூலை 28, 2025 16:31

கோயம்பத்தூர் குண்டுவெடிப்பு ஓநாய்க்கு முட்டுக்கொடுத்த எச்சம்..


VSMani
ஜூலை 28, 2025 15:49

யாருமே போடாமல் 36 லட்சத்தி 50 ஆயிரம் ஓட்டை பெற்று 3வது கட்சியாக வந்து நிற்கும் ஒரே மகன்???


Samy Chinnathambi
ஜூலை 28, 2025 12:12

வசூல் மன்னன் எங்கள் அண்ணன்


Lakshminarasimhan
ஜூலை 28, 2025 12:01

தேர்தல் களத்தில் சீமான் ஒரு ஒப்புக்கு சப்பாணி இவன் ஒரு அரசியல் கோமாளி எப்படி சினிமாவில் நகைச்சுவைக்கு ஒரு கோமாலியோ அதை போன்று அரசியலில் சீமான்


angbu ganesh
ஜூலை 28, 2025 16:07

அவர் கோமாளிதான் ஆனா காமராஜரை தவறாக பேசினவனை கிழிச்சார் அதில் என்ன தப்பு அது கேக்க உங்களுக்கு துப்பு இல்ல


INDIAN Kumar
ஜூலை 28, 2025 16:32

அப்ப யாருங்க ஹீரோ ? யாருங்க வில்லன்??


தமிழன்
ஜூலை 28, 2025 11:58

திமுகவை தான்.. அதான் முதல்வர் பாதுகாப்பு பற்றி இப்படி கிழித்து பேசுகிறார் ஹி..ஹி..


Ramona
ஜூலை 28, 2025 11:36

நீங்க விசய் க்கு ஆதரவு செய்து, டீம்கே க்கு போய் அடைக்கலம் ஆக போகிறீர்களாமே அது நெசமா எசமான்?


raghavan
ஜூலை 28, 2025 11:31

திமுக கொடுத்த ஸ்வீட் பாக்ஸ் வீட்டுக்கு பத்திரமா வந்து சேர்ந்துச்சா ?


M Ramachandran
ஜூலை 28, 2025 11:26

சில சில்லுண்டி கைய்யேந்தி பிச்சை தின்னும் மூர்க்க மதத்தின் கால் வருடிகள் காமராஜரைய்ய இழிவு படுத்தி பேசி பேசும் திருட்டு கும்பலை சேர்ந்த தன பதவியை காத்து கொள்ளா கூவுகிறது. அதை உவமைய்க்காக கூற வேண்டுமென்றால் அவன் கட்சி சின்னத்திலுள்ள ஆம் அதை பார்த்து நாய் குறைப்பதற்கு ஒப்பாகும். முன்பு ஒருமுறையை கிழவன் ஒருவன் காமராஜர் ஹைதராபாத்தில் பெரிய பங்களா வைத்து கொண்டு வாய்ப்பு வைத்திருக்கிறார் என்று கூறினான். அதற்க்கு காமராஜர் எதிர்கட்சிக்காரன் அப்படித்தான் பேசுவன்அதற்கெல்லாம் பதில்கூறி நம்மதிப்பைய்ய மக்கள் மதிப்பைய்ய நாம் குறைத்து கொள்ளக்கூடாது என்று நாம் போய்க்கொண்டே யிருக்கவேண்டுமேயென்று கூறினார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை