உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தின் பெருமை பறைசாற்றப்படுகிறது

தமிழகத்தின் பெருமை பறைசாற்றப்படுகிறது

ராமாயண கவிஞர் என போற்றப்படும் அருணாசல கவிராயர், தியாகராஜ சுவாமிகள், புரந்தரதாசர் ஆகியோரை சிறப்பிக்கும் விதமாக, அவர்களின் உருவ சிலைகள், ராமர் பிறந்த மண்ணான உ.பி., மாநிலம், அயோத்தி பிரஹஸ்பதி குண்ட் பகுதியில் நிறுவப்பட்டு உள்ளன. தமிழகத்தின், இசை மேதைகளின் சிலைகளை திறந்து வைத்த, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு, தமிழக மக்கள் சார்பில் நன்றி. பாரதத்தின் ஒட்டு மொத்த கலாசாரமும், வடக்கு, தெற்கு எனும் பிரிவினை இல்லாமல், ஒன்றாக பின்னி பிணைந்தது தான், என்பது இதன் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில், 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' எனும் கொள்கை, அனுதினமும் வலுப்பெற்று, தமிழகத்தின் பெருமை திக்கெட்டும் பறைசாற்றப்படுகிறது. - நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை