வாசகர்கள் கருத்துகள் ( 25 )
அரசு ஊழியர்களின் பிரிவு ஏ பிரிவு பி மற்றும் அமைச்சு பணியாளர்கள் அனைவருக்கும் துறை ரீதியான தேர்வுகள் உள்ளன அவற்றில் தேர்ச்சி பெற்றோருக்கு மட்டுமே ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் பதவி உயர்வு உண்டு. தேர்வு பெறாதோர் பணியிறக்கம் செய்யப்படுவர். இத்தேர்வில் இருந்து 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இது அனைத்து பிரிவினருக்கும் பொதுவானது. இதில் இட ஒதுக்கீடு இல்லை இது தற்பொழுது நடைமுறையில் உள்ளது என்பது எவ்வளவு பேர் அறிந்த ஒன்று.
டாஸ்மாக் அப்பா ... வாழ்க....வாழ்க....வாழ்க.
GEN CATEGORY- 10 marks, BACKWARD COMMUNITY- 8 marks, MBC, DENOTIFIED COMMUNITIES - 6 marks, SC - 4 marks, ST - 02 marks. OBC Muslim - 0 Marks, People migerated from Andhra Pradesh especially from Ongole - Upto -10 Minus 10 மார்க்ஸ் வாங்கினால் TNTET பாஸ் என்று சட்ட சபைல சட்டம் நிறைவேற்றலாம். இது இது இது தான் ஓங்கோல் மாடல் ஆட்சி. அப்பா....அப்பா அப்பப்பா....தாங்க முடியல மாடல் லொல்லு...
நியமனம் செய்வதற்கு முன் தகுதித் தேர்வு என்பதே சரி. 20 ஆண்டுகள் பணி செய்தபின் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று கூறுவது நியாயமற்றது. 25 வயதில் தேர்வு வைத்தால், தயார் செய்வதற்கு இருக்கும் மனநிலை, 50 வயதில் இருக்குமா? 50 வயதுக்கு மேற்பட்ட, உயர் பதவியில் இருக்கும் காவலர் ஒருவரை 25 வயதினரோடு ஒப்பிட்டு ஓட வேண்டும், குதிக்க வேண்டும் என்று கூறுவது பொருத்தமாக இருக்குமா? அவரின் அனுபவத்தைப் பயன்படுத்திக் கொள்வதே சரியாக இருக்கும். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே சிறப்பாக வேலை செய்வார்கள் என்பது தவறு. பணி நியமனத்திற்கு முன்பு எத்தனை தகுதித் தேர்வும் வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின் Skill செய்வதற்கு வழி செய்தால் போதுமானது. TET கொண்டு வரப்பட்டதன் மூலகாரணம், வடமாநிலங்களில் எந்த தகுதியும் இல்லாதவர்கள் ஆசிரியராக பணிநியமனம் செய்யப்பட்டதே. TET வருவதற்கு முன்பே தமிழ்நாட்டில் TRB மூலம் பணி நியமனம் செய்யப்பட்டது. இது சார்ந்த பெரும்பாலானவர்களின் கருத்து தவறு செய்யும் சிலரை மனதில் கொண்டு எழுதப்பட்ட வயிற்றெரிச்சல் பதில்களே. ஆட்குறைப்பு செய்வதற்கான மறைமுக நடவடிக்கைகளே இவை. ஏற்கனவே அரசியல்வாதிகள், நீதிபதிகள், IAS, IPS முதலிய உயர் பதவிகளில் உள்ளவர்களுக்கு மட்டுமே பென்சன் உண்டு, மற்றவர்களுக்கு இல்லை என்று கூறிவிட்டார்கள். கவனம் - எதிர்காலத்தில் நமது சந்ததியினருக்கு அரசு வேலை வாய்ப்புகள் இல்லாமல் போய்விடும். ஒரு சட்டம் அல்லது அரசாணை என்பது நடைமுறைக்கு வந்த நாளில் இருந்தே அமல்படுத்த வேண்டும். அதை பல ஆண்டுகளுக்கு முன்தேதியிட்டு நடைமுறைப்படுத்துவது நியாயமற்றது.
ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு வைத்து அதில் பயிற்சி பெற முடியாமல் இருப்பவர்கள் ஏன் ஆசிரியராக பணியில் இருக்க வேண்டும். அந்த ஆசிரியர் தகுதி தேர்வு அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்ற நாங்கள் ஆசிரியராக பணியாற்ற முடியாமல் ஏன் பணியில் இல்லாமல் இருக்க வேண்டும்? தகுதி உள்ள எங்களை விரைவில் பணியமர்த்த இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களால் நல்ல மாணாக்கர்கள் உருவாக்க முடியும். நல்ல எதிர்காலத்தையும் உருவாக்க முடியும்.
நல்லாசிரியர் விருதினை இந்த அரசாங்கம் தகுதித் தேர்வில் தேர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறதா? இங்கே கலர் காகிதங்களை அள்ளிக் கொடுத்தவனும் நல்லாசிரியர் விருதுகளை பெறுகிறான். தகுதித் தேர்வில் தேர்வு பெறாமல் பணியில் உள்ள ஆசிரியர்களிடம் பயின்ற மாணவர்கள் பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று வந்தவர்களை மறுபடியும் இந்த அரசாங்கம் தகுதித் தேர்வில் தேர்வு பெற்ற ஆசிரியர்களிடம் பயின்று அதன் பின்னர் தேர்வு எழுதி வந்தால் தான் இது செல்லுபடியாகும் என்று ஆணை பிறப்பிக்க முடியுமா?
இந்த கருத்தினை பதிவு செய்த நீங்கள் தகுதி பெற்ற ஆசிரியரிடம் இருந்து தான் இத்தனை அறிவு சார்ந்த விஷயங்களை கற்றுக் கொண்டீர்களா? இந்த தீர்ப்பினை வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தகுதி பெற்ற ஆசிரியரிடம் இருந்து கல்வி பயின்ற பின்னர் தான் இந்த தீர்ப்பினை வழங்கினார்களா? இந்த அரசாங்கம் கல்வியியல் என்ற பட்டப்படிப்பை தவிர்த்து தகுதி தேர்வு மட்டுமே குறிக்கோளாக கொண்டு தேர்ச்சி பெற்றால் அவர்களுக்கு இந்த ஆசிரியர் பணியை வழங்க முடியுமா? ஒரு கருத்தை பதிவு செய்யும் முன் இது மாதிரியான விஷயங்களை எல்லாம் ஆலோசனை செய்து பதிவு செய்தால் ஆசிரியர் பணியில் திறமையாக பணியாற்றிக் கொண்டு தகுதி தேர்வு என்ற ஒன்றில் தேர்ச்சி பெறாமலே நல்லாசிரியர் விருது பெற்றவர்களின் பணி திறன் பற்றி அரசாங்கம் நல்லாசிரியர் என்ற விருதை எப்படி வழங்கியது. சற்று சிந்தித்துப் பாருங்கள். நீங்களும் ஒரு ஆசிரியராக இருந்திருந்தால் இவ்வாறான பதிவினை தவிர்த்து இருப்பீர்கள்.
25 வயதில் உடல் தகுதி சான்று பெற்ற காவலர்களை 55 வயதில் அது போன்ற தகுதி எதிர்பார்க்க முடியுமா என்ற கருத்து ஆசிரியர் பணிக்கும் பொருந்தும் சிறப்பான கருத்து அறிவார்ந்த சட்ட சிந்தனை செய்யுங்கள் ஆசிரியர் பணி அறப்பணி அவர்கள் அனைவரும் உயர்த்துவார்கள் அவர்கள் அதே நிலைமையில் தான் இருப்பார்கள் என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள் பணி பறிக்கப்படும் என்ற தீர்ப்பு அவர்களுக்கு மன உளைச்சல் எப்படி ஏற்படுத்தி இருக்கும் என்று உங்களிடம் சிந்தித்துப் பாருங்கள் நல்ல மாணவர்களை நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை ஆனால் 20 வயது 25 வயதில் உள்ள தகுதியினை உணர்த்த தேதி மனதில் மன தைரியத்தினை ஐம்பது இந்த வயதில் எதிர்பார்க்க முடியுமா சற்று சிந்தித்துப் பாருங்கள் அறிவார்ந்தவர்களே
டாக்டருக்கு படிக்கும் முன் எழுத வேண்டிய தேர்வு நீட் தேர்வு. நீட் தேர்வில் பெயில் என்றால் டாக்டரே ஆக முடியாது.... அதேபோல டெட் தேர்வையும் ஆசிரியர் பணிக்கு வரும் முன்னே வைத்து விடுவது சிறப்பு. நீட் தேர்வே எழுதாமல் 20 வருடங்களாக மருத்துவ சேவை ஆற்றி வரும் ஒரு மருத்துவரை பார்த்து நீங்கள் நீட் தேர்வு எழுதவில்லை எனவே நீங்கள் தகுதியற்றவர் மருத்துவ சேவையை விட்டு விட வேண்டும் என்று சொல்வது எவ்வளவு நகைப்பாக இருக்கும். நீட் தேர்வில் முதல் மதிப்பெண் எடுப்பவன் திறமைசாலி அல்ல அந்த தொழிலை செம்மையாக கற்றுக்கொண்டு அதில் திறன் பட செயல்படுபவனே சிறந்த மருத்துவன். எத்தனை டெட் தேர்வு வைத்து ஆசிரியரை தேர்வு செய்தாலும் ஒரு ஐந்து வருட அனுபவம் உள்ள ஒரு ஆசிரியருக்கு அவர் ஈடாக முடியாது அனுபவமே ஒரு சிறந்த ஆசிரியர் தேர்வுகள் ஒருபோதும் சிறந்த ஆசிரியரை உருவாக்க முடியாது. டெட் தேர்வு எழுதாத ஆசிரியர்களிடம் படித்த மாணவர்கள் தான் டெட் தேர்வு நடத்தும் வினாத்தாளை எடுத்து வருகின்றனர்.
பாஸ் ஆக மார்க் 35 என் நிர்ணயம் செய்து பரீட்சை வைக்கும் இவர்கள் ஏன் தான் அவர்களை போல் இருமடங்கு மார்க் எடுத்து காட்டி ஒரு சிறந்த ஆசிரியர் தான் நாங்கள் எல்லோரும் என நிருபிக்கலாமே? சலுகை எதிர்பார்க்கும் இவர்களிடம் நம் பிள்ளைகள் படித்தால் அவர்கள் படிப்பில் எப்படி சிறந்த மாணவராக விளங்குவார்கள். எனவே சலுகை எதிர்பார்க்காமல் மற்றவரோடு தானும் சரி நிகராக பரீட்சையை சந்திக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
50 அல்லது 60 mark எடுக்க முடியாத ஆசிரியர்கள் இடம் படித்து மாணவர்கள் எப்படி neet தேர்வில் வெற்றி பெற முடியும். தேர்வு என்றால் திராவிட இனத்தின் அலர்ஜி.