உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் 2ம் இடத்திற்குத் தான் போட்டி: விஜய்க்கு இபிஎஸ் பதில்

தமிழகத்தில் 2ம் இடத்திற்குத் தான் போட்டி: விஜய்க்கு இபிஎஸ் பதில்

கூடலூர்: அதிமுக களத்தில் முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாம் இடத்திற்குத்தான் போட்டி தமிழகத்தில் நடக்கிறது என சமீபத்தில் தவெக, திமுக இடையே போட்டி என்று கூறி தவெக தலைவர் விஜய்க்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார்.நீலகிரியில் தேர்தல் பிரசாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பேசியதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1kpwkxil&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தில் திறமையற்ற முதல்வர் ஆள்கிறார் என்பதால் எந்தத் திட்டமும் அவரால் கொண்டுவர முடியாது. இந்தியாவிலேயே அதிக கடன் வாங்குவதில் ரோல் மாடல் ஸ்டாலின். ஊழல், கலக்ஷன், கமிஷன், கரப்ஷனில் ரோல் மாடல் திமுக, டாஸ்மாக் 10 ரூபாய் கூடுதலாக வாங்குவதில் ரோல்மாடல் திமுக, குடும்ப ஆட்சி வாரிசு அரசியலில் ரோல் மாடல் திமுக, பொய் வாக்குறுதியிலும் ரோல் மாடல் திமுக. திமுக ஒரு குடும்பக் கட்சி. கருணாநிதி தலைவராக இருந்தார். இப்போது ஸ்டாலின் தலைவர், உதயநிதி இளைஞரணிச் செயலாளர், கனிமொழி மகளிரணி செயலாளர் மூன்று முக்கிய பதவிகளுமே கருணாநிதி குடும்பத்திலேயே இருக்கிறது.

8 கோடி மக்கள்

கருணாநிதி குடும்பம் இருக்கும்வரை வேறு எவரும் தலைமை பதவிக்கு வரமுடியாது. உழைக்கலாம், அந்த உழைப்பை உறிஞ்சுகின்ற குடும்பம் ஸ்டாலின் குடும்பம். நாட்டில் எத்தனையோ கட்சி இருக்கிறது, இப்படி குடும்ப ஆட்சி நடத்தும் கட்சி இருக்கிறதா? ஸ்டாலின் முதல்வர், உதயநிதி துணை முதல்வர், கனிமொழி மக்களவை குழு தலைவர், ஏன் அந்த கட்சியில் வேறு எம்பியே இல்லையா? எல்லாமே குடும்பத்தினர் தான். ஆட்சியிலும், கட்சியிலும் அதிகாரத்திலும் அவர்கள்தான் இருக்க முடியும். ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்கள் சுரண்டப்படுவதை நாம் அனுமதிக்கலாமா?

என்ன தவறு?

இதற்கெல்லாம் தேர்தல் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் முடிவு கட்டுங்கள். அதிமுக பாஜவோடு கூட்டணி வைப்பதில் என்ன தவறு? இதுவே 1999 மற்றும் 2001 தேர்தல்களில் திமுக, பாஜவோடு கூட்டணி வைத்து மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தது. அவர்கள் கூட்டணி வைத்தால் பாஜ நல்ல கட்சி.அதிமுக கூட்டணி வைத்தால் மதவாத கட்சி, தீண்டத்தகாத கட்சியா? இது எந்த விதத்தில் நியாயம்? அதிமுக களத்தில் முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாம் இடத்திற்குத்தான் போட்டி தமிழகத்தில் நடக்கிறது. இதை அவர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

joe
செப் 25, 2025 13:15

எடப்பாடியாரே நீங்கள் விஜய்கூட க்கூட்டணி அமைப்பதே நல்லது .துணை முதல்வர் பதவி கிடைக்கலாம் .நேரத்தை வீணடிக்கவேண்டாம் .


renga rajan
செப் 25, 2025 05:17

ஒபிஸ் கூடவே கூட்டணி கிடையாது அப்புறம் எப்படி விஜய் கூட விஜய்க்கு ஒன்னும் தெரியல EPS MASS


joe
செப் 24, 2025 20:06

எடப்படியாரே நீங்கள் உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர் .விஜய்யுடன் கூட்டணிக்கு திரும்புங்கள் .நேரத்தை வீணடிக்கவேண்டாம் .மறுபடியும் இதற்கான நேரம் உங்களுக்கு கிடைக்காது .


V K
செப் 24, 2025 17:33

காமெடி ஓவர் ஓவர்


Mannan
செப் 24, 2025 17:26

விஜய் செய்த சமூக சேவை என்ன?


joe
செப் 24, 2025 15:57

எடப்பாட்டியாரே சுயநலத்துக்காக அரசியல் செய்யாதீர்கள் .விஜய்யுடன் கூட்டு சேர்ந்து நாட்டுக்கு நல்லது செய்ய வாருங்கள் .அரசியலை கமலஹாசனைப்போல் கூத்தாடிபோல் வியாபாரம் செய்யாமல் சமூக சேவைக்காக விஜய்யுடன் கூட்டணி அமைத்து நாட்டுக்கு நல்லது செய்யுங்கள் .


Kadaparai Mani
செப் 24, 2025 17:25

You have to compare kamalahasan with Vijay only. Both are d to divide dmk opposition votes. It is the bounden duty of Vijay to accept EPS leadership and join AIADMk bjp alliance. AIADMK is the largest political party in tamil nadu. Edappadi has toured more than 150 constituencies . He is not a week end politician . EPS is the most accepted opposition CM candidate. If you do not like kamal that is different. But comapring him with EPS sir is highly inappropriate. Edappadi is very sincere in his campaign trail and the gathering of people in dmk strongholds astonishes political observers.


V K
செப் 24, 2025 17:32

எனது நாட்டுக்கு நல்லதா அப்படின்னா


vadivelu
செப் 25, 2025 07:41

விஜய் உடன் சேர்ந்தால் தி மு கவை ஆட்சி அமைக்க முடியாமல் செய்ய முடியும், தி மு க வை வீழ்த்த நீங்கள் ஏன் விஜய் இடம் எடப்பாடியுடன் கூட்டு சேருங்கள் 50 சீட்டுகள் மட்டுமே கேளுங்கள், நாட்டு நலன் கருதி செய்யுங்க என்று சொல்ல கூடாது.


joe
செப் 24, 2025 15:51

இந்த பதிலுக்கு பதிலாக நீங்கள் விஜய்யுடனான கூட்டுக்கு வரலாம் .உங்கள் நேரத்தையே வீணடித்துக்கொண்டிருக்கிறீர்கள் இது தேவையா ?


Kadaparai Mani
செப் 24, 2025 17:33

மூத்த பத்திரிகையாளர் விஜய் அவர்களுக்கு திரு பவன் ஆந்திர துணை முதல்வரிடம் ஆலோசனை பெறுமாறு ஒரு பேட்டி கொடுத்து உள்ளார் . பவன் சந்திரபாபு நாயுடு தலைமை ஏற்றது போல் விஜய் அதிமுக கூட்டணி இல் சேர வேண்டும் .விஜய், அவர் அருகே திமுக மற்றும் லாட்டரி ஆலோசகரை கழட்டி விட வேண்டும் .


Moorthy
செப் 24, 2025 15:02

ஓ. அப்போ இ பி எஸ் ச 2026 தேர்தல்ல முதல் அமைச்சரா போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்க போறாங்களா ??


Vasan
செப் 24, 2025 14:59

முன்னாடியில் இருந்து முதல் இடமா, பின்னாடியில் இருந்து முதல் இடமா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை