உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துருப்பிடித்த இரும்புக்கரத்தை பழுது பார்க்கணும்: நயினார் நாகேந்திரன்

துருப்பிடித்த இரும்புக்கரத்தை பழுது பார்க்கணும்: நயினார் நாகேந்திரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளுக்கு பயம் ஏற்படும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி கொலை செய்யப்பட்டதுடன், மேலும் ஒரு சிறுமி கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. தங்கள் பிள்ளையை இழந்து தவிக்கும் அக்குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இச்சம்பவத்தில் பிடிபட்டுள்ள கொலையாளி குடிபோதையில் இருந்தான் என வெளியாகியுள்ள தகவல், போதைப் பொருட்களின் பிடியில் தமிழகம் சிக்கி சீரழிந்து கிடப்பதையும், பெண்கள் வாழத் தகுதியற்ற மாநிலமாக தமிழகம் உருமாறியுள்ளது என்பதையும் நமக்கு மீண்டுமொருமுறை உணர்த்துகிறது. இதுதான் திமுக-வின் விடியல் ஆட்சியா?தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால் தானே குற்றங்கள் குறையும்? சட்டம் ஒழுங்கு செம்மையாக இருந்தால் தானே குற்றவாளிகளுக்கு பயமிருக்கும்?இதுபோன்ற சம்பவங்களைக் காணும் ஒவ்வொரு குடும்பமும், 'நாளை நம் குடும்பப் பெண்களுக்கும் இதே நிலைமைதானோ' என்ற பயத்தில் தான் தமிழகத்தில் வாழ்கிறார்கள் என்பது வெட்கக்கேடானது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது துருப்பிடித்துப் போன இரும்புக்கரத்தைப் பழுது பார்க்க வேண்டிய நேரமிது.இவ்வாறு நயினார் நகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

மே 30, 2025 06:35

அந்த துருப்பிடித்த இரும்புக்கரத்தை எப்போதோ காயலான் கடையில் போட்டு பேரிச்சை வாங்கி தின்றாகிவிட்டது


sureshpramanathan
மே 30, 2025 05:48

Nayinar Nagendran is a useless leader No energy to conduct the party affairs BJP has wasted Annamalaiji They could have given him a higher position and saved his dignity and used his stature in Tamilnadu to expand the party even under Nayinar would have been better Its not a happy situation what Delhi has done BJP is finished in Tamilnadu


D.Ambujavalli
மே 30, 2025 01:16

இரும்புக்கரம் துருப்பிடித்த நிலை தாண்டி, திருவெண்காடு அரித்துக் கரைக்கும் நிலை வந்துவிட்டது கையுடன் சேர்த்து அதன் உடையவரையும் ஒன்றாக தள்ளி வைத்தால்தான் மாநிலம் உருப்படும்


மே 30, 2025 06:42

கழகத்தின் குற்றவாளிகள் அணியில் பலரை பாதுகாக்க வேண்டுமே


Ramesh Sargam
மே 29, 2025 22:25

துருப்பிடித்துப் போன இரும்புக்கரத்தை இனி பழுது பாப்பது என்பது இயலாத காரியம். கையை முற்றிலும் எடுக்கவேண்டியதுதான் சரி. இல்லையென்றால் முதலுக்கே மோசம்.


மே 30, 2025 06:41

காயலான் கடையில் போட்டு பேரிச்சம் பழம் கூட வாங்க முடியாதா ?


Mario
மே 29, 2025 18:24

மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீதான போக்சோ வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. டெல்லி நீதிமன்றம், ஒரு மைனர் மல்யுத்த வீரரின் புகாரின் அடிப்படையில் தொடரப்பட்ட இந்த வழக்கை மூடிவிட்டது. துருப்பிடித்த இரும்புக்கரத்தை பழுது பார்க்கணும்


BALAMURUGAN G
மே 30, 2025 17:51

இந்தக் குடும்ப அரசியல்வியாதிகளின் கொத்தடிமைகளிடம் உள்ள பிரச்சனையே... உள்ளூர் பிரச்சனைகளைப் பேசினால் உடனே எங்காவது பாஜக ஆட்களின் மீது ஏதாவது குற்றச்சாட்டு உள்ளதா என்று பார்ப்பது, அதைத் தூக்கிக் கொண்டு வந்து எஐமானுக்கு முட்டுக் கொடுக்கும் கேவலம் வேறு எங்கும் கிடையாது. நீதிமன்றங்கள் ஒழுங்காகச் செயல்பட்டால் ஓங்கோலார் குடும்ப வாரிசுகளில் எத்தனை சிறையில் இருப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்


GMM
மே 29, 2025 18:11

தமிழக மாநிலத்தில் படிக்கும் 15 வயது சிறுமி கொலை. கொலையாளி குடிபோதையில் இருந்ததாக தகவல். ஒரு சில இடங்களில் கள்ள சாராயம். அங்கு மட்டும் குடி அட்டை கொடுத்து டாஸ்மாக் திறக்கலாம். குடி பழக்கம் இல்லாத அனைத்து ஊர்களிலும் டாஸ்மாக் திறந்து டாஸ்மாக் தமிழகம் ஆக்க வேண்டிய அவசியம் என்ன? போதை பொருட்கள் விற்பனை முடியாது. ஆகவே கள்ள வாணிபம். குற்றம் அதிகரிக்கும் மாநிலத்தில் மத்திய போலீஸ் நிலையம் மாவட்டத்திற்கு ஒன்று தேவை. துருப்பிடித்த இரும்பு தன் சக்தியை இழக்கும்?


மே 30, 2025 06:40

துருப்பிடித்த இரும்புக்கரத்தை முத்து காமிஸ் இரும்புக்கை மாயாவி எடுத்து கொண்டதால் முதல்வர் தவிக்கிறார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை