உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 70 நிமிடங்களில் ஆறு செயின் பறிப்பு சம்பவங்கள்!

70 நிமிடங்களில் ஆறு செயின் பறிப்பு சம்பவங்கள்!

சென்னை: சென்னையில் நேற்று காலை, 6:00 முதல் 7:10 வரையிலான, ஒரு மணி நேரம், 10 நிமிடங்களில், சைதாப்பேட்டையில் துவங்கி வேளச்சேரி வரை, ஆறு பெண்களிடம், 22 சவரன் வரை செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தன. இச்சம்பவங்களில் தொடர்புடைய ஈரானிய கொள்ளையர் இருவர், விமானத்தில் தப்ப முயன்ற போது, கைது செய்யப்பட்டனர்.* சென்னை சைதாப்பேட்டையில் இட்லி கடை நடத்தி வருபவர் இந்திரா, 52. இவர் நேற்று காலை, 6:00 மணிக்கு வீட்டருகே உள்ள மளிகை கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி விட்டு திரும்பி உள்ளார். அவரிடம் முகவரி கேட்பது போல, இருசக்கர வாகனத்தில், ெஹல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் இருவர், 2 சவரன் செயினை பறித்து தப்பினர்* பெசன்ட் நகரை சேர்ந்தவர் அம்புஜம்மாள், 60. இவர் நேற்று காலை, 6:30 மணிக்கு, அதே பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார். இவரிடமும் முகவரி கேட்பது போல, மர்ம நபர்கள், 3 சவரன் செயினை பறித்து தப்பினர்* அடையாறு இந்திரா நகரைச் சேர்ந்த லட்சுமி அம்மாள், 56, நேற்று காலை, 6:45 மணியளவில் நடைபயிற்சி சென்றார். அவரிடமும் மர்ம நபர்கள், 5 சவரன் செயினை பறித்தனர்* அதேபோல, நேற்று காலை, 7:00 மணியளவில், கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலையில், எம்.ஆர்.சி., திடல் அருகே, நடந்து சென்ற நிர்மலா, 60 என்பவரிடமும், 7 சவரன் செயினை பறித்துச் சென்றனர்* வேளச்சேரி டான்சி நகரில் நேற்று காலை, 7:10 மணியளவில் நடைபயிற்சி சென்ற விஜயா, 70 என்பவரிடம், 2 சவரன் செயினை பறித்தனர்* அதேநேரத்தில், வேளச்சேரி விஜயநகர் வடக்கு விரிவாக்கம் பகுதியில், முருகம்மாள், 60 என்பவரிடமும், 3 சவரன் செயினை பறித்தனர்.அனைத்து சம்பவங்களும் ஒரே மாதிரி நடந்துள்ளன. அதுவும், ஒரு மணி, 10 நிமிடங்களில், சைதாப்பேட்டையில் துவங்கி வேளச்சேரி வரை, வயதான பெண்களை குறிவைத்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.முதல் சம்பவமாக, சைதாப்பேட்டையில் இந்திராவிடம் செயின் பறிப்பு நடந்தது தொடர்பாக, காலை, 6:30 மணிக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அப்போதே, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண், 'வாக்கி டாக்கி' வாயிலாக, போலீசாரை உஷார்படுத்தினார். செயின் பறிப்பு நடந்த விதத்தை ஆய்வு செய்ததில், வடமாநில கொள்ளையரின் கைவரிசை என்று தெரியவந்ததால், வாகன சோதனையை தீவிரப்படுத்தவும், சந்தேக நபர்களை பிடித்து விசாரிக்கவும் உத்தரவிட்டார்.அதன்படி, தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் கண்ணன், இணை கமிஷனர் சிபி சக்கரவர்த்தி தலைமையிலான போலீசார், தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது, செயின் பறிப்பு கொள்ளையர்கள், கடைசியாக வேளச்சேரியில் தான் கைவரிசை காட்டி உள்ளனர். அவர்கள் வடமாநில கொள்ளையராக இருந்தால், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வர வேண்டும். பஸ்சில் ஆந்திராவுக்கு தப்பிச் செல்லலாம். இதனால், ரயில், பஸ் நிலையங்களில் தீவிர சோதனைக்கு உத்தரவிட்டனர்.'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்ததில், கொள்ளையர்கள் விமான நிலையம் நோக்கி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அதனால், விமான நிறுவன ஊழியர்கள் மற்றும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். கடைசி நேரத்தில் விமானத்தில் ஏற, 'போர்டிங் பாஸ்' வாங்கும் நபர்கள் குறித்து நன்கு விசாரிக்குமாறு, விமான நிறுவன ஊழியர்களுக்கு உத்தரவிட்டு இருந்தனர்.அதன்படி, மும்பை மற்றும் டில்லிக்கு செல்ல முயன்ற, வடமாநிலத்தைச் சேர்ந்த இருவர் மீது, விமான நிறுவன ஊழியர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து, சென்னை மாநகர தனிப்படை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தனிப்படை போலீசார், 'இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா' நிறுவன விமானங்களில், டில்லி மற்றும் மஹாராஷ்டிர மாநிலம் மும்பை செல்ல முயன்ற, உ.பி.,யை சேர்ந்த மார்சிங் அம்ஜத் ஈரானி, 26; ஜாபர் ஈரானி, 26 ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.அதில் ஒருவர் விமானத்திலேயே ஏறி விட்டார். அவரை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் உதவியுடன் கீழே இறக்கியதாக, போலீசார் தெரிவித்தனர். விசாரணையில், அவர்கள் ஈரானிய கொள்ளையர்கள் என்பதும், சென்னையில் வயதான பெண்களை குறி வைத்து செயின் பறிப்பில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களின் கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். அவர்களில், ஆந்திர மாநிலம் நெல்லுாரில் இருந்து ரயிலில் தப்ப முயன்ற சல்மான் உசேன் என்பவரை பிடித்துள்ளனர்.

காட்டிக்கொடுத்த காலணி

கொள்ளையர்கள் விமான நிலையம் அருகே சென்றதும் உடை மாற்றி உள்ளனர். ஆனால், காலணியை மாற்ற மறந்து விட்டனர். செயின் பறிப்பு நடந்த இடத்தில், 'சிசிடிவி கேமரா'வில் பதிவாகி இருந்த காலணியும், அவர்கள் அணிந்து இருந்ததும் ஒரே மாதிரி இருந்ததால், அவர்களை பிடிக்க போலீசாருக்கு உதவியாக இருந்தது. தற்போது கைதாகி உள்ள ஈரானிய கொள்ளையர்கள், இதற்கு முன் சென்னை புறநகர் பகுதியில் நான்கு முறை செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

யார் இவர்கள்?

கடந்த, 1970களில் ஈரான் நாட்டில் இருந்து, 100க்கும் மேற்பட்டோர் மஹாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு குடிபெயர்ந்தனர். அவர்களின் வாரிசுகள், ஆந்திரா, கேரளா, தமிழகத்தில் காரமடை, திருப்பத்துார், மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர். தோற்றத்தில் ராணுவ வீரர்கள் போல இருப்பர். கொள்ளையடிப்பது தான் இவர்களின் பிரதான தொழில். இதனால், இவர்களை ஈரானிய கொள்ளையர் என, போலீசார் அழைக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Kanaga Sundarrajan K
மார் 27, 2025 06:15

நீ பேசாமல் சினிமாவில் திரைக்கதை எழுத போய்விடலாம்.போலிஸ் ஸ்டேஷனில் ஆளும் கட்சி ரௌடி தொண்டர்களின் ஆதிக்கம் இல்லாமல் இருந்தாலே சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும்.


menaha
மார் 26, 2025 23:27

அதீதமான கற்பனை. கொள்ளை கும்பலுக்கும் எந்த கட்சிக்கும் தொடர்பு இருக்கும் என்பது அனைத்து மக்களுக்கும் தெரியும்.. ஊழல் பெருச்சாளிகள் எந்த கட்சியில் இருக்கிறார்கள் ..எவ்வளவு கொள்ளை அடிக்கிறார்கள் என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கும்.சாமானியர்களிடம் கொள்ளையடித்து கட்சி வளர்க்க திட்டம் தீட்டுவது என்ற கற்பனை அநாகரிகீமானது.


palaniappan muthukumar
மார் 26, 2025 22:01

வாழ்த்துக்கள் போலீஸ் டீம் தமிழ்நாடு


Rajathi Rajan
மார் 26, 2025 17:01

ஓர் அதிகாலையில் அடுத்தடுத்து எட்டு தங்கச் சங்கிலி அறுப்புகள் நடைபெறும், அதுவும் அது முதிய பெண்களிடம் நடக்கும் என்பது எவ்வளவு பேரவலம் ? தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கை எந்த வழியிலேனும் எவனை வைத்தேனும் கெடுத்துவிட வேண்டும், தினமொரு சேதி பொதுமக்களிடையே இதுபோல் பரவி, திமுக ஆட்சி மீது ஓர் அச்சவுணர்வை நிரந்தரமாகத் தோன்றச் செய்துவிட வேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டு வெறியுடன் சதி புரிந்தாலொழிய இது சாத்தியமாகாது நேற்று காலையில் நடந்த இந்தச் சம்பவங்கள் பெரிய அளவில் கவனம் பெறாததற்கு கயவர்கள் உடனடியாக பிடிபட்டதுதான் இல்லாவிடில் ?அப்போது இந்த நகைபறிப்பு சம்பவங்கள் இந்தியளவில் வைரல் ஆக்கப்பட்டிருக்கும். இன்று தங்கம் விற்கும் விலைக்கு பெண்களிடையே சட்ட ஒழுங்கு பற்றிய முணுமுணுப்பு பலமாக எழுந்திருக்கும். அதைத்தான் இத்தகைய கயவர்களை இங்கு இறக்குமதி செய்த சதிகாரர்களின் பேராசை. இவர்களுடைய நெட்வொர்க் அபாரமானது. இவர்கள் கைது செய்யப்பட்ட அடுத்த நிமிடத்தில் இவர்களுக்காக நீதிமன்றத்தில் வழக்காட பல வழக்கறிஞர்கள் தயாராக நின்றதைப் பார்த்து காவல்துறையே நடுங்கிப் போயிருக்கிறது, உடனே வடக்கர்கள் எல்லாம் இப்ப இப்பதாம்பா இங்கிட்டு கொள்ளையடிக்க கூட்டம் கூட்டமா வாராய்ங்க என்று பூமர்ஸ் போல புலம்ப வேண்டாம். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் புறநகர்களில் தனித்திருக்கும் வீடுகளை குறிபார்த்து கொள்ளையிடும் வடக்கர்கள் கூட்டம் ஓர் ஆளுங்கட்சி எம் எல் ஏவையே கொன்று போட்டு கொள்ளையிட்டது. ஜாங்கிட் அவர்களைப் போராடிக் கைது செய்த கதைதான் தீரன் அதிகாரம் ஒன்று, அது 2005. வேளச்சேரி வங்கிகளில் அடுத்தடுத்து பட்டப்பகலில் முகமூடிக் கொள்ளைகள் நடைபெற்றன. கொள்ளையர்கள் புறநகரில் வாடகைக்கு வீடெடுத்து தங்கி இதைப் பெரிதாக நடத்தவிருந்த நிலையில் போலிஸ் சுற்றி வளைத்தது. முதலில் அவர்களைக் கைதுதான் செய்திருக்கின்றனர். ஆனால் அப்படி செய்தால் என்ன நடக்கும் என உணர்ந்த அதிகாரிகள் ஜெயலலிதாவிடம் என்கவுண்டருக்கான அவசியத்தைச் சொல்ல ஐந்து பேரை அவர்கள் கதறக் கதற சுட்டுக் கொன்றனர். இது 2012.அவர்கள் இனி தமிழ்நாட்டுப் பக்கமே வரமாட்டோம் என அரைகுறைத் தமிழில் கதறியதை சுற்றியிருந்தவர்கள் கேட்டிருக்கின்றனர். அதன்பின், வடக்கில் உ.பியிலோ, பீகாரிலோ, ம.பியிலோ, ராஜஸ்தானிலோ நடப்பதைப் போன்ற பகிரங்கக் கொள்ளைகள் அரிதாகவே நிகழும். நேற்று நடந்தது திட்டமிட்ட பயங்கரம் இனி காவல்துறையினரை தூங்கவிட மாட்டோம் என ஆட்டுப்புழுக்கை அறைக்கூவல் விடுத்ததைப் பார்த்தால் ? முன்னாள் காவல்துறை ஆள் என்பதால் ஜெயிலர் படக் கதை போல அத்தனை அக்யூஸ்ட் டீட்டைலும் அவரிடம் இருக்கும் என்பது என் சந்தேகம். இதைவிட கொள்ளையர்கள் வாழும் மாநிலங்கள் இப்போது அவர்களுடைய கைகளுள் இருப்பதால் எதையும் எங்கும் அரங்கேற்றத் துணிவார்கள் இன்னும் ஒரு வருடத்திற்கு Acid Test தான். சட்டம் ஒழுங்கை தொடர்ந்து சீரழிக்க, மதக்கலவரம் வரை துணிவார்கள். காவிச் சங்கிகளுக்கு உதவத்தான் நீலச்சங்கிகளும், பச்சைச்சங்கிகளும் தயாராக இருக்கிறார்கள் அல்லவா ? எனவே நம் அருகிலிருக்கும் சங்கி மனோபாவ ஆட்களிடம் மிக எச்சரிக்கையாக இருங்கள். நேரடி எதிரிகளை விட முதுகில் குத்தும் துரோகிகள் பேராபத்தானவர்கள், அவர்களிடமிருந்து தூர விலகி நில்லுங்கள் 2026 -ல் தமிழ்நாட்டில் எங்களுடைய கூட்டாட்சிதான் என்று அமித்ஷா வேறு நேற்று சூளுரைத்திருக்கிறார். குஜராத்தை தக்கவைக்க, ம.பியைத் தக்கவைக்க, மகராஷ்டிராவைத் தக்கவைக்க, உ.பியைத் தக்கவைக்க, பீகாரைத் தக்கவைக்க, மணிப்பூரைத் தக்கவைக்க, திரிபுராவைத் தக்கவைக்க, டெல்லியை மீட்க அவர்கள் என்னவெல்லாம் சதி புரிந்தனர் என்பது உள்ளங்கை கிரிணிப்பழம். எதிரியை வெல்ல எந்த பின்புற வழியாகினும் அதைத் தேர்ந்தெடுக்க அவர்களுக்கு இராமாயணமும், மகாபாரதமும் கற்றுக் கொடுத்திருக்கிறது. வாலியை மறைந்திருந்துக் கொன்றாலும் அது வீரம் தான், மனைவியைச் சந்தேகப்பட்டாலும் அவன் ஆண்மகன்தான், அசுவத்தாமன் இறந்துவிட்டான் எனப் புரளி கிளப்பி வீரனை முடக்கினால் அது இராஜதந்திரம், தர்மம்தான் அவன் தலைக்காக்கிறதென்றால் அந்த தர்மப் பலன்களையேத் தானமாக பெற்றுக் கொல் என்பதுதான் கீதை. எனவே பாவம் செய்ய அவனுக்கு கடவுளே துணை நிற்கும் என நம்புவான். அவனை நீங்கள் ஒருபோதும் திருத்த முடியாது. ஆனால் அவனை அண்டவிடாமல் செய்ய முடியும். துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பது சங்கிகளுக்கும், சங்கி சகவாசம் கொண்டோருக்குமான முதுமொழி


Sundad மணி
மார் 27, 2025 11:28

கொள்ளையர்களின் பெயர்களை படித்து விட்டீர்களா...


Rajathi Rajan
மார் 26, 2025 16:56

இத்துப்போன உங்கள் இரும்புக்கரத்தை நம்பி இனி எந்தப் பயனும் இல்லை திரு. mkstalin சென்னையில் இன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையில் மட்டும் சுமார் 8 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக வெளியான செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. “திராவிட மாடல்” “விடியல் அரசு” என்ற வீண் விளம்பரங்களில் மட்டுமே கவனம் செலுத்தி, சீரான சட்டம் ஒழுங்கை உங்கள் அரசு கோட்டைவிட்டு விட்டது என்பதையே இந்த நிகழ்வு ஆணித்தரமாக உணர்த்துகிறது. தமிழக தலைநகரில் ஒரு மணி நேரத்தில் 8 இடங்களில் செயின் பறிப்பு நடக்கிறது என்றால், உங்கள் அரசின் மீதும் தமிழக காவல்துறையினர் மீதும் குற்றவாளிகளுக்கு துளி கூட அச்சமில்லை என்றுதானே அர்த்தம்? மக்கள் நலனுக்காக போராட முயலும் பாஜக-வினரை அதிகாலையில் வீட்டுச் சிறைபிடிக்கத் தெரிந்த உங்கள் ஏவல்துறையினருக்கு, பட்டப்பகலில் நடக்கும் இந்தக் குற்றங்களைப் பற்றி உளவுத்துறை உட்பட யாரும் துப்பு கொடுக்கவில்லையா? அல்லது பாதிக்கப்படுவது சாதாரண பொதுமக்கள் தானே என்று அலட்சியப்படுத்தி விட்டார்களா? இவ்வாறு கொலை, கொள்ளை, வன்முறை என தமிழகத்தின் குரல்வளையை நெரிக்கும் குற்றங்களைத் தடுத்து, சட்டம் ஒழுங்கை சமன்செய்வதை விட்டுவிட்டு, கண்ணுக்கெட்டிய தூரம் வரை எவ்வித அறிகுறியும் அல்லாத தொகுதி மறுவரையறையை எதிர்ப்போம், ஒன்றாகக் கூடுவோம், தமிழக உரிமைகளைக் காப்போம் என்றெல்லாம் போலியாக முழங்குவதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும் முதல்வரே. - VANATHI SRINIVASAN வானதியக்கா, உள்ளூர் பாஜக ரவுடிகள் வேலைக்கு ஆகலனு உபில இருந்து இறக்குமதியா? வாரே வாஹ்.. என்ன அருமையான பிளான். ஆனா தமிழ்நாடு போலீஸ் ஒன்றும் உபி போலவோ, அண்ணாமலை போலவோ சொம்பயில்லை. எண்ணி 2 மணி நேரத்தில் தட்டி தூக்கிடிச்சி பாருங்க. உங்க திட்டம் எதுவும் இங்கே போனியாகாது.பாஜககேடு தரும். பாஜகவின் ராமராஜ்யம் உத்திரப்பிரதேசத்தில் இருந்து இருவர் வந்து ஒரே நாளில் திட்டமிட்டு தொடர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுவிட்டு விமானத்தில் தப்பிச் செல்ல முற்பட்டவர்கள் கைது. பாஜக வுக்கு இதில் எதோ வகையில் தொடர்பு உள்ளது போல தெரிகிறது. தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும்.


menaha
மார் 26, 2025 23:32

அநாகரீகமான அருவெறுப்பான ,அதீதமான கற்பனை..ஊழல் பெருச்சாளிகள் எங்கு இருக்காங்க என்று மக்களுக்கு தெரியும். தீவிர விசாரணை தங்களுக்கு ஆப்பு வைக்க போகுது. தடியை குடுத்து ஏன் அடி vaanganum.


Mummoorthy Ayyanasamy
மார் 26, 2025 15:55

இரானிய கொள்ளையர்களை பிடித்த தமிழ போலிஸ்க்கு நன்றி.நல்வாழ்த்துக்கள்.


sankar
மார் 26, 2025 15:27

திரைக்கதை பிரமாதம்


Venkatesh
மார் 27, 2025 10:23

நல்லா இருக்கையா உன்னோட லாஜிக்


Tetra
மார் 26, 2025 13:18

இப்போது ஈஈரானிலிருந்து வேறு இறக்குமதியா? சபாஷ். 2037 வழியே இந்தியாவுக்கு தாலிபானோ அல் கொய்தாவோ ஆட்சிக்கு வந்து விடும்


மூர்க்கன்
மார் 26, 2025 11:06

தவள, தவளை அப்போ ???


Samy Chinnathambi
மார் 26, 2025 09:04

இந்த விடியா அரசு எப்ப வந்தாலும் நீதித்துறை மற்றும் காவல்துறையுடன் கூட்டு வைத்து கொண்டு இஷ்டம் போல கொள்ளை அடிப்பது, ரவுடிகளை கூட வைத்து கொண்டு சொத்துக்களை கைப்பற்றி கொள்வது , எதிர்ப்பாளர்களை கொலை செய்வது என்று எப்போதுமே இருக்கும்.. அவர்களின் ஜீனில் திருட்டு புத்தி உள்ளது.. படிப்பறிவு இல்லாவிட்டாலும் திருட்டறிவு எப்போதும் உண்டு.. இதனால் தான் ஒருமுறைக்கு மேல் அடுத்த முறை ஆட்சிக்கு வந்தது கிடையாது.. இந்த டுமிழர்கள் ஏன் இவர்களுக்கு வாக்களிக்கிறார் என்று இதுவரை விளங்கவில்லை.. ஏன்னா நண்டு கொழுத்தா வலையில் தங்காது இறையாகிவிடும்.. அப்படி தான் போலி வாக்குறுதிகளுக்கு மயங்கும் டுமிழர்களும் ..நன்றாக ஆட்சி செய்த எடப்பாடியை விரட்டி விட்டு இப்போ ஒருத்தனுக்கும் தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை..


ramesh
மார் 26, 2025 10:07

நீதி துறை, காவல் துறையுடன் கூட்டு சேர்ந்து இந்த தமிழ் நாடு அரசு கொள்ளை அடிக்கிறது என்று கருத்து போட்டு இருக்கிறீர்கள். அதற்கான ஆதாரத்தை காட்டிவிட்டு கருத்து போடுங்கள் .எடப்பாடி நல்ல ஆட்சி செய்தார் என்று சான்றிதழ் வழங்கும் போதே தங்களின் கருத்தின் உண்மைத்தன்மை பிரதி பலிக்கிறது .மேலும் குற்றவாளிகள் உடனடியாக விமான நிலையம் சென்று பிடித்து இருக்கிறார்கள் என்று செய்தி வந்துள்ளது நன்றாக படித்து விட்டு கருத்து போடுங்கள்


என்னத்த சொல்ல
மார் 26, 2025 11:31

குற்றவாளிகளை உடனே பிடித்தாலும் திட்டறீங்க, பிடிக்கலானாலும் திட்டறீங்க. உங்களக்கு எதோ மனநோய் இருக்கும்போல தெரிகிறது. உடனே கவனிக்கவும்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை