உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கச்சத்தீவு மீட்பே தீர்வு: ஸ்டாலின் தகவல்

கச்சத்தீவு மீட்பே தீர்வு: ஸ்டாலின் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''தமிழக மீனவர்களின் இன்னல்கள் தீர, கச்சத்தீவு மீட்பு ஒன்றே தீர்வாகும்,'' என, முதல்வர் ஸ்டாலின் கூறினார். சென்னை, திருவொற்றியூரில், 272 கோடி ரூபாய் செலவில், சூரை மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டு உள்ளது. இது உள்பட, 426 கோடி ரூபாய் மதிப்பிலான, 13 மீன்வளத் துறை திட்டப் பணிகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம், ரோச்மா நகர் மீனவ கிராமங்களில், மீன்பிடி இறங்குதளம் உள்பட, 170 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். மேலும், 2,290 மீனவர்களுக்கு, 10.6 கோடி ரூபாய் மதிப்பிலான நலத் திட்டங்களையும் வழங்கினார். பின், முதல்வர் பேசியதாவது: சூரை மீன்பிடி துறைமுகம் வாயிலாக, 3,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இங்கு, 400 கில்லட் படகுகள், 250 நாட்டு படகுகள் நிறுத்தவும், 60,000 டன் மீன்கள் கையாளும் வசதியும் செய்யப்பட்டு உள்ளது. மீனவர்களின் வளர்ச்சிக்கு இந்த துறைமுகம் பயனாக இருக்கும். சென்னையின் வளர்ச்சியில், பழவேற்காடு முதல் கோவளம் வரையிலான மீனவ கிராமங்களின் பங்கு மிக முக்கியம். மீனவர்களின் நலன் மற்றும் வாழ்வாதாரம் பாதுகாப்பது, தமிழ் சமுதாயம் - பண்பாட்டை காப்பதற்கு சமம். மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்ட, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழக மீனவர்களின் இன்னல்கள் தீர, கச்சத்தீவை மீட்பது ஒன்றே தீர்வு. நான்கு ஆண்டுகளில், 97 சம்பவங்களில், 185 படகுகள், 1,383 மீனவர்கள், இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டனர். மீனவர்களை விடுவிக்க கோரி, மத்திய அரசுக்கு, 76 முறை கடிதம் எழுதியுள்ளேன்; நேரிலும் வலியுறுத்தியுள்ளேன். தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.,க்கள் பார்லிமென்டில் குரல் கொடுக்கின்றனர். அதன் விளைவாக, 1,354 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்; எஞ்சியவர்களை மீட்கும் பணி தொடரும். இவ்வாறு, முதல்வர் பேசினார். அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, மீன்வளத் துறை செயலர் சுப்பையன், வடசென்னை எம்.பி., கலாநிதி, திருவொற்றியூர் எம்.எல்.ஏ., கே.பி.சங்கர், மண்டல குழு தலைவர்கள் தனியரசு, ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

மே 30, 2025 06:47

மனிதநேயம் மிக்க தலைவர் கலைஞர், சிங்களர்கள் மேல் உள்ள பாசத்தால் பச்சாதாபத்தால்... ராமேஸ்வரத்தையும் இலங்கைக்கு கொடுக்க சொன்னார், இந்திராகாந்தி அதை கேட்கவில்லை அய்யகோ என்ன கொடுமை ...


புரொடஸ்டர்
மே 29, 2025 19:46

மீட்பது யார் ஸ்டாலின்?


மே 30, 2025 06:49

வேறுயார்? மோடிதான் மீட்கவேண்டும் ... திமுக ஒன்பதாண்டுகாலம் காங்கிரஸ் கூட்டணி அமைச்சரவையில் இருந்தபோது இதைப்பற்றி மூச்சைகூட விடவில்லை ..


Rajasekar Jayaraman
மே 29, 2025 09:54

அப்பா கொடுப்பாராம் மகன் மீட்க சொல்வாராம் ...


Kulandai kannan
மே 29, 2025 09:20

உங்கள் அப்பா சமாதியில் போய் சொல்லுங்கள்.


மே 30, 2025 06:50

அப்பா சமாதியில் தயிர் வடை வைக்கும்போது ..கேட்கலாம் ..


அப்புசாமி
மே 29, 2025 09:11

புவியியல், சர்தேச அரசியல் புரிதல் இல்லாமலேயே உளறிக் கொட்டுகிறார்கள். கச்சத்தீவு இந்தியாவை விட இலங்கைக்கு வெகு அருகில் உள்ளது. மேலும் கச்சத்தீவை கொடுத்ததின் மூலம் பாக் ஜலசந்தியில் பல ஆயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர் கடல் பரப்பை நாம் பெற்றுள்ளோம். ஒப்பந்தம் போடப் பட்ட நாட்களில் சுமார் 2000 மீனவர்கள் இருந்தார்கள். இன்னிக்கி 2 லட்சம் மீனவர்கள், விசைப்படகு, சுருக்கு மடின்னு கிளம்பி, ஒரு குஞ்சு, குளுவான் இல்லாம அரிச்சு எடுத்துட்டாங்க. இன்னும்.கொஞ்ச நாளில் இந்திய பெருங்கடலையே புடிச்சு தின்னுடுவாங்க. கச்சத்தீவை மீட்பதற்கு பதிலாக, ட்ரம்ப் மாதிரி இலங்கையை இந்தியாவோட சேர்க்கச் சொல்லி மிரட்டுங்க. ஏற்கனவே ராமர் ஆண்ட பகுதின்னு நிரூபிக்கலாம்.


பேசும் தமிழன்
மே 29, 2025 09:02

அப்போ கச்ச தீவை தாரை வார்த்து கொடுத்த கான்கிரஸ் மற்றும் அப்போது அதற்கு உடந்தையாக இருந்த திமுக.. இரண்டு கட்சிகளும் தான் அதற்கு பொறுப்பு.. இரண்டு கட்சிகளும் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.


பாரத புதல்வன்
மே 29, 2025 09:01

தீ மு க வை 2026 ல் அகற்றுவது தான் ஒரே வழி


raja
மே 29, 2025 08:22

திருட்டு திராவிடத்தின் தமிழக மக்களுக்கு செய்த துரோகங்கள்.. கச்சத்தீவை கட்டுமரம் தாரை வார்த்து பின் அதற்காகவே போராட பிறந்தது போல் நடித்து கொண்டு இருப்பது.. காவிரியில் கர்நாடகாவை ஆணை கட்ட அனுமதித்து விட்டு பின் ஒவ்வொரு வருடமும் தண்ணீர் கேட்டு தமிழனை போராட வைத்தது... முல்லை பெரியார் அணையின் உரிமையை விட்டு கொடுத்து தமிழனுக்கு துரோகம் இழைத்தது.. தற்போதைய தத்தியின் துரோகங்கள்... நெடுவயலில் மீத்தேன் எடுக்க ஒப்பந்தம் போட்டு விட்டு பின் அதை எதிர்த்து நாடகம் ஆடி கொண்டு இருப்பது.. நீட்டை ஆதரித்து பாராளுமன்றதில் திருட்டு திமுகாவின் இணை அமைச்சரே தாக்கல் செய்து சட்டம் ஆக்கி பின் அதை எதிர்த்து விலக்கு வாங்கிய ஜெயலலிதாவின் முயற்சியை கூட்டாளி சிவகங்கை அப்பூச்சியின் வக்கீல் மனைவி கொண்டு வாதாடி தமிழகத்துக்கும் நீட்டு வேண்டும் என்று உச்ச நீதி மன்றத்தில் தீர்ப்பை பெற்று இப்போது நீட்டுக்கு எதிராக போராடுவதுபோன்று தமிழனை ஏமாற்றுவது ..ஸ்டெர்லிட் சேலம் நான்கு வழி சாலை பரந்தூரு விமானநிலையம் போன்றவற்றை எதிர்த்து விட்டு இப்பொது கொண்டு வர துடிப்பது... இதுபோல் பல சொல்லலாம்... தமிழா ஓன்று மட்டும் புரிந்துகொள் எப்போதும் இந்த திருட்டு திராவிட ஓன்கொல் கோவால் புர கொள்ளை கூட்ட குடும்பம் தமிழனுக்கு விரோதிகள்...


மே 30, 2025 06:57

நன்றாக எழுதி இருக்கிறீர்கள். கருணாவின் துரோகத்தை நினைவுபடுத்தி விட்டீர்கள். இனிமேல் தமிழ் மக்களுக்கு புதிதாக துரோகம் செய்வதற்கு ஒன்றுமில்லை என்கிற அளவிற்கு துரோகம் செய்து முடித்து விட்டார்கள்.. தமிழர்களுக்கு ஏதாவது நடத்தால் கருணா குடும்பத்திற்கு பிடிக்காது ...


Mani . V
மே 29, 2025 06:36

கொஞ்சம் கூட வெட்கம், மானம் இருந்தால் இப்படி பொய் சொல்ல கூச்சமாக இருக்கும். பொய்யை மட்டுமே பேசும் இவர்களுக்கு எப்படி இருக்கும்?


மே 30, 2025 06:51

என்னது மானம் வெட்கமா? அப்படியென்றால் என்ன வென்று கழகத்தினருக்கு தெரியாது ...


nagendhiran
மே 29, 2025 06:21

இதையும்"நம்பி ? மக்களா? உபி களா?


மே 30, 2025 06:53

இருநூறு ரூபாய் உப்பிக்கள் நிச்சயம் முட்டு கொடுப்பார்கள்.. இதைத்தான் பெரியார் இருபத்தோராம் பக்கத்தில் விரிவாக எழுதினார்


புதிய வீடியோ