உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காவிரி நீர் பிரச்னைக்கு தீர்வு கிவ் அண்டு டேக் பாலிசியே!

காவிரி நீர் பிரச்னைக்கு தீர்வு கிவ் அண்டு டேக் பாலிசியே!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி : மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் குமாரசாமி, பெங்களூரில் இருந்து தனி விமானம் வாயிலாக நேற்று திருச்சி வந்தார்.திருச்சி விமான நிலையத்தில் இருந்து காரில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சென்றவர், மூலவர் சன்னிதியில் பெருமாளையும், தாயார் சன்னிதியில் நாச்சியாரையும் தரிசனம் செய்து வெளியே வந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: உரிய காலத்தில் மழை பெய்யும் போது, காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் எந்த பிரச்னையும் ஏற்படாது என்பதை தமிழக அரசும், தமிழக விவசாயிகளும் புரிந்து கொள்ள வேண்டும்.காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் சட்டப் போராட்டங்கள் உதவாது. 'கிவ் அண்டு டேக் பாலிசி' தான் தீர்வாக இருக்க முடியும். இரண்டு மாநில விவசாயிகளும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும். காவிரி விவகாரத்தில் அரசியல் கலக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

venugopal s
அக் 01, 2024 09:04

அதற்கு அர்த்தம் நாம் கிவ்,அவர்கள் டேக், அவ்வளவு தான்!


Kasimani Baskaran
அக் 01, 2024 05:36

அதாவது எங்களுக்கு போகத்தான் உங்களுக்கு தண்ணீர் என்று உருட்டுகிறார். இதற்க்கு ஒருவனும் கண்டனம் கூட தெரிவிக்க மாட்டான். தமிழக விவசாயிகள் நாதியற்றவர்கள். அணைத்து வழிகளிலும் தமிழனை குப்புறத்தள்ள திராவிட கோஷ்டி கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறது. பொட்டல்க்காடு ஆகும் வரை ஓய மாட்டார்கள்..


J.V. Iyer
அக் 01, 2024 03:00

காவிரி பிரச்சினைக்கு தீர்வு, கர்நாடக, தமிழகம், மத்தியில் பாஜக அரசு வந்தால்தான் வரும். தமிழகம் சொட்டுநீர் பாசனம் செய்தால் இதற்கு நிரந்தர தீர்வு. இஸ்ரேலுடன் இதற்கு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். அவர்கள்தான் இதில் கில்லாடிகள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை