உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சபாநாயகரின் கருத்து உண்மைக்கு புறம்பானது: சொல்கிறார் மார்க்சிஸ்ட் சண்முகம்

சபாநாயகரின் கருத்து உண்மைக்கு புறம்பானது: சொல்கிறார் மார்க்சிஸ்ட் சண்முகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: திருநெல்வேலியில் ஜாதிய மோதல்கள் இல்லை என்ற சபாநாயகரின் கருத்து உண்மைக்கு புறம்பானது என மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் சண்முகம் தெரிவித்துள்ளார்.“சிறார்களுக்கு பணத்தை கொடுத்து மூளை சலவை செய்து தவறாக வழிநடத்துபவர்களை அடையாளம் கண்டு அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும். தமிழகம் முழுவதும் எந்தப் பகுதியிலும் ஜாதி பிரச்னை இல்லை. குறிப்பாக திருநெல்வேலியில் ஜாதி பிரச்னை இல்லவே இல்லை. சிறுவர்கள் இடையிலான பிரச்னையை ஜாதி பிரச்னையாக உருவகப்படுத்த வேண்டாம்' என சபாநாயகர் அப்பாவு கூறியிருந்தார்.இது குறித்து மதுரையில், மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் சண்முகம் அளித்த பேட்டி: திருநெல்வேலியில் முற்றிலுமாக ஜாதி பிரச்னை இல்லை என அப்பாவு கூறிய கருத்து ஏற்புடையது அல்ல.நான்கு, ஐந்து ஆண்டுகளில் 1000க்கும் மேற்பட்ட ஜாதிய வன்கொடுமைகள் நடைபெற்ற மாவட்டமாக திருநெல்வேலி இருக்கிறது. ஜாதி ரீதியாக பாகுபாடும், ஜாதி ரீதியாக வன்கொடுமையும் அதிகமாக நடக்கக்கூடிய மாவட்டங்களில் ஒன்றாக திருநெல்வேலி இருக்கிறது என்பதற்கு போலீசார் பதிவு செய்துள்ள வழக்குகளின் எண்ணிக்கையே சாட்சி.ஆகவே சபாநாயகர் சொல்லக்கூடிய கருத்து உண்மைக்கு புறம்பானது என்பதை நான் சொல்ல விரும்புகிறேன். தி.மு.க., கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார்கள். இன்னும் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டி இருக்கிறது.சொல்லாத பலவற்றையும் அவர்கள் செய்து இருக்கிறார்கள். சொன்னதை செய்யாமல் இருக்கும் மிச்ச வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது.இவ்வாறு அவர் கூறினார். கடந்த சில மாதங்களாகவே தி.மு.க., மீதான விமர்சனங்களை சண்முகம் தொடர்ந்து வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Kasimani Baskaran
மார் 25, 2025 04:08

சபா நாயகர் பொய் சொல்லுகிறார் என்று கூட நேரடியாக சொல்ல துப்பு கெட்ட கம்மிகள்... தோழமை என்றால் கால் கூட கழுவி விடுவார்கள்.


கோமாளி
மார் 25, 2025 00:41

தமிழக சட்டசபை வரலாற்றில் ஒரே ஒரு கரும்புள்ளி அப்பாவு..


K.Ramakrishnan
மார் 25, 2025 00:17

ஆளே இல்லாத கட்சிகள் பட்டியலில் கம்யூனிஸ்டுகள் சேர்ந்து பல மாமாங்கம் ஆகி விட்டது. பார்லி.யில் அந்த கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் தந்ததே தமிழ்நாடு தான். திமுகவின் உழைப்பில் பதவி வாங்கிக்கொண்டு அல்லது அ.தி.மு.க.வின் உழைப்பில் பதவி வாங்கிய பின்னர் அரசுகளை எதிர்ப்பதே இவர்களின் வேலை. எனவே இந்த உண்டியல் குலுக்கிகளை இரு திராவிட கட்சிகளும் தூக்கி எறியவேண்டும். நாடு முழுவதுமே கம்யூனிஸ்டுகளை ஓரம் கட்டி விட்ட நிலையில் தமிழ்நாடு ஏன் தூக்கி சுமக்கவேண்டும்? கூட்டணியில் இவர்களை சேர்த்தால் பூனையை மடியில்கட்டிய கதை தான்.


K.Ramakrishnan
மார் 25, 2025 00:04

திமுக கூட்டணியில் மா.கம்யூ. இருப்பது பூனையை மடியில் கட்டிய கதை. பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்கிற கதையாகவே இவர்களின் செயல்பாடுகள் உள்ளன. இப்படி ஒரு கட்சியை திமுக கூட்டணியில் வைத்திருக்கவேண்டுமா? இவர்களுக்கு ஒன்றும் பெரிய அளவில் செல்வாக்கு கிடையாது. இந்த தேவையற்ற லக்கேஜ் எதற்கு? கம்யூ.க்களுக்கு பார்லி.யில் பிரதிநிதித்துவம் தந்ததே தமிழ்நாடு தான்.


K.Ramakrishnan
மார் 25, 2025 00:04

திமுக கூட்டணியில் மா.கம்யூ. இருப்பது பூனையை மடியில் கட்டிய கதை. பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்கிற கதையாகவே இவர்களின் செயல்பாடுகள் உள்ளன. இப்படி ஒரு கட்சியை திமுக கூட்டணியில் வைத்திருக்க வேண்டுமா?இவர்களுக்கு ஒன்றும் பெரிய அளவில் செல்வாக்கு கிடையாது. இந்த தேவையற்ற லக்கேஜ் எதற்கு? கம்யூ.க்களுக்கு பார்லி.யில் பிரதிநிதித்துவம் தந்ததே தமிழ்நாடு தான்.


K.Ramakrishnan
மார் 25, 2025 00:04

திமுக கூட்டணியில் மா.கம்யூ. இருப்பது பூனையை மடியில் கட்டிய கதை. பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்கிற கதையாகவே இவர்களின் செயல்பாடுகள் உள்ளன. இப்படி ஒரு கட்சியை திமுக கூட்டணியில் வைத்திருக்கவேண்டுமா? இவர்களுக்கு ஒன்றும் பெரிய அளவில் செல்வாக்கு கிடையாது. இந்த தேவையற்ற லக்கேஜ் எதற்கு? கம்யூ.க்களுக்கு பார்லி.யில் பிரதிநிதித்துவம் தந்ததே தமிழ்நாடு தான்.


Matt P
மார் 24, 2025 22:15

அப்பாவு திருநெல்வேலி மாவட்டத்துக்காரர் அப்படி தான் சொல்வார். என்க வூரு ரொம்ப நல்ல வூர் என்கிறார். நடு நிலைமையா பேசுறவர் என்றைக்கு சபாநாயகரா வந்திருக்கிறார்?. ஆளும் கட்சி ஜால்றா.


Chinnamanibalan
மார் 24, 2025 21:19

அநியாயங்களை சகித்துக் கொண்டு எவ்வளவு காலம்தான், இவர்களுடன் ஒத்துப் போவது என்ற முடிவுக்கு இடது கம்யூனிஸ்ட் தோழர்கள் வந்துள்ளது போல் தெரிகிறது. எனினும் தேர்தல் நேரத்தில் உண்டியல் குலுக்க பயந்து, மறுபடியும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியது போல, ஏறவும் கூடும்.


Anantharaman Srinivasan
மார் 24, 2025 20:51

மாஜி தலைவர் முத்தரசன் போலில்லாமல் கம்யூனிஸ்ட் சண்முகமும் வாழ்வுரிமை வேல்முருகனும் திமுகவிற்கு எதிராக இரட்டை குழல் துப்பாக்கி போல் குண்டுமழை பொழிகிறார்கள். Keep it up.


Ramesh Sargam
மார் 24, 2025 20:45

சபாநாயகரே கோபாலபுரத்தின் கைக்கூலி.


சமீபத்திய செய்தி